விதைத்தவன் எவனோ...?

விதைத்தவன் எவனோ...?
வினை அறுத்தவள் எவளோ....?
உயிர்கொண்டது தாயின் கருவில்
உடல்கிடந்தது தெருவின் மடியில்..!

பெற்றெடுத்த உனக்கே
எனை பிடிக்கவில்லை என்றால்....
தத்தெடுத்த தெருவில் எனக்கு
தாலாட்டு எப்படி கேட்கும்...!

கொசுவும் எறும்பும் தடுப்பூசி போடு
சின்ன அம்மை பெரிய அம்மை நலமாய் பார்த்து
சிக்கன்குனியாவால் சீர்திருத்தப்பட்ட
ஆரோக்கியச்சிறுவன் நான் இனி
அழுதாலும் பயனில்லை....!

என்மீது எல்லாவறையும் போடுகிறார்கள்
என்னைத்தவிர எல்லாவற்றையும் பொறுக்கிரார்கள்
கசங்கிக்கிடக்கும் காகிதத்தைக் சுமக்கிறார்கள்
வாடிக்கிடக்கும் என்முகத்தை வெறுக்கிறார்கள்...!

உழைத்து உண்ண உடம்பில் இன்னும் வலுவில்லை...
உட்கார்ந்து உணவுண்ண உரிய இடம் கிடைக்கவில்லை....
எச்சில் இலையில் என்வயிறு நிறைகின்றது....
காலத்தின் தாலாட்டில் என்கவலை கரைகின்றது....
உறவுகள் யாருமில்லை உரிமைகொண்டாட.....
உள்ளத்தில் யாருமில்லை நானும் கொண்டாட....
உலகத்தில் யாரும் அநாதை இல்லை....
இரு உயிர்கள் இல்லாமல் எவரும் இல்லை...
!



"நண்பர்களே நீங்கள் குத்தும் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்"

நட்புடன்,
நான்.நிரோஷ்.

Comments

  1. காலத்தின் தாலாட்டில் கண்ணுறங்கும் பாவியர் நாங்கலும்தான் ,,தேன் குடிக்க ஆசைப்பட்டுத்தம் தேனீ குத்த்துது என்று விட்டு விடலாமா? நமக்கும் இந்த வேதனை புரியும் தெரியும்
    உங்க கற்பனைக்கு உயிர் கொடுக்கும் உன்னதமான நண்பர்கள் இருக்கும் வரை ஓயாது ஓயக்கூடாது உங்கள் பனி ,,,வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

கண்கள் சொல்லும் கவிதை...!