Posts

Showing posts with the label தாய்

அன்னை எனும் தெய்வம்...!

Image
அன்பின் திருநாளாம் அன்னையர்தின பெருநாளாம் அகமகிழ்ந்து கொண்டாட அவதரித்தத் ஒரு நாளாம்....! அகிலத்தில் நாம் இங்கு அவதரிக்கும் முன்னாலே அன்பெனும் கருவாலே அழகாக எமைத்தாங்கி மாதங்கள் பத்தாக முத்தாய் எமை பெற்றாளே...! உயிரினங்கள் அத்தனையும்.. ஓரிடத்தில் ஒன்றுசேரும் அன்னையெனும் தெய்வத்திற்கே அந்தப்பெயர் வந்துசேரும்...! தெய்வங்கள் கண்முன்னே தெரிவதில்லை - அவை அன்னையாய் இருப்பதை அறியவில்லை மாதாவே முதலென்று தெரிந்திருந்தும் உரிய மரியாதை சிலபேர் கொடுப்பதில்லை...! மதம் என்ற பெயரில் மதம்கொள்ளும் மனிதன் இனம் என்ற குணத்தில் சினம்கொள்ளும் மனிதன் இந்த ஒரு சொல்லில் மட்டும் புனிதனாய் பூப்பதும் ஏனோ...? உறவுகள் எத்தனை இருந்தாலும் உனை உள்ளங்கள் எத்தனை கவர்ந்தாலும் உண்மையில் அன்புகொண்டு உயிராக பாசம்கொள்ள அன்னையை போன்றிங்கு அவதிரித்தோர் யாரும் உண்டோ....? மனிதனாய் நீ பிறந்திருந்தால் நல்லமனம் கொண்டுநீ வாழ்ந்திருந்தால் அன்னையின் அன்பிற்கு அடிபணிந்து அவள்சொள்ளும் வாழ்விற்கு கீழ்படிந்து உன்தாயை நீ மதித்து வந்தால் உன்னாலும் உலகத்தை வெல்ல முடியும்...! எத்தனை தினங்கள் இருந்தாலும் அத்தனை தினங்கள...

விதைத்தவன் எவனோ...?

Image
விதைத்தவன் எவனோ...? வினை அறுத்தவள் எவளோ....? உயிர்கொண்டது தாயின் கருவில் உடல்கிடந்தது தெருவின் மடியில்..! பெற்றெடுத்த உனக்கே எனை பிடிக்கவில்லை என்றால்.... தத்தெடுத்த தெருவில் எனக்கு தாலாட்டு எப்படி கேட்கும்...! கொசுவும் எறும்பும் தடுப்பூசி போடு சின்ன அம்மை பெரிய அம்மை நலமாய் பார்த்து சிக்கன்குனியாவால் சீர்திருத்தப்பட்ட ஆரோக்கியச்சிறுவன் நான் இனி அழுதாலும் பயனில்லை....! என்மீது எல்லாவறையும் போடுகிறார்கள் என்னைத்தவிர எல்லாவற்றையும் பொறுக்கிரார்கள் கசங்கிக்கிடக்கும் காகிதத்தைக் சுமக்கிறார்கள் வாடிக்கிடக்கும் என்முகத்தை வெறுக்கிறார்கள்...! உழைத்து உண்ண உடம்பில் இன்னும் வலுவில்லை... உட்கார்ந்து உணவுண்ண உரிய இடம் கிடைக்கவில்லை.... எச்சில் இலையில் என்வயிறு நிறைகின்றது.... காலத்தின் தாலாட்டில் என்கவலை கரைகின்றது.... உறவுகள் யாருமில்லை உரிமைகொண்டாட..... உள்ளத்தில் யாருமில்லை நானும் கொண்டாட.... உலகத்தில் யாரும் அநாதை இல்லை.... இரு உயிர்கள் இல்லாமல் எவரும் இல்லை... ! "நண்பர்களே நீங்கள் குத்தும் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்" ...

அன்னையின் அன்பால் மட்டும்...!

Image
அன்னை பிசைந்த சோற்றை அள்ளித்த் தின்ற கைகள்.... அவசரமாய் வந்த "PIZZA" வை கிள்ளிப் பார்த்துவிட்டு கண்ணீரில் கைகழுவி போகின்றன.....!!! ++++++++++++++++++++ பிஞ்சுக் குழந்தையினை நெஞ்சில் வைத்து கொஞ்சும் போது நஞ்சுண்ட என் நாவும் அமுதத்தை சுவைக்கின்றதே...!!! அன்பில் மனம் நிறைகின்றதே...!!! அன்னையின் அன்பே நிரந்தரமானது... இதை அறியாதவன் மனது இயந்திரமானது...!!! ++++++++++++++++++++ "அளவிட முடியாத ஒன்றினால் அனைத்தும் அர்த்தப்படுகின்றது அன்னை உன் அன்பினால் மட்டும்" +++++++++++++++++++++ அன்னையின் அன்பும் அன்புக் குழந்தையின் சிரிப்பும் - என் அரக்க குணங்கள் அனைத்தையும் அழித்துச்செல்கின்றன...! அன்பால் மட்டுமே அகிலம் இங்கு செழித்தும் நிற்கின்றன...!!! +++++++++++++++++++++++ "அன்பின் நண்பர்களே பிடித்திருந்தால் மறக்காம ஓட்டுப்போடுங்க" நட்புடன், நா.நிரோஷ்.