Posts

Showing posts with the label நகைசுவை

எப்படியெல்லாம் தூங்கலாம்...? பார்க்கலாம் வாங்க...!

Image
ஒரு மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியமுங்க... ..... ..... ..... ..... ஓ... மண்ணிக்கவும் கொஞ்சம் அசந்துட்டன், ஒழுங்கா தூங்காவிடின் அன்றைய நாள் மிகவும் சொம்பலாகவே இருக்கும், ஒருசிலபேர் எங்கடா நேரம் கிடைக்குது சற்று தூங்கி விடலாமே என நினைப்பார்கள், அப்படி நேரம் கிடைக்காவிடினும் தான் செய்கின்ற வேலைகளுக்கு இடை நடுவே கிடைக்கின்ற இரு இரு நிமிடங்களை கூட தூக்கத்திற்கு பயன்படுத்தி விடுவார்கள். அப்படி ஒரு சிலபேர் கிடைக்கின்ற நேரங்களில் தாங்கள் எப்படி தூங்குகிறார்கள் என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் பார்ப்போம் பார்த்து ரசிப்போம். வீதியில இப்படி மல்லாக்க படுக்குற சுகம் இருக்கே அது தனி, தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்று சும்மாவா பாடுனாங்கா...? நல்லது நண்பர்களே ரசித்து சிரித்திருந்தால் உங்கள் ஓட்டுக்களையும் கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்கப்பா...! நட்புடன், நா.நிரோஷ்

என் FACEBOOK மொக்கைகள் - II

Image
நவீன சந்தையில் நன்றாகத்தான் விலைபோகின்றது நட்பும் காதலும்...! நானும் நன்றாகத்தான் விதைத்து வைத்திருக்கிறேன்... யாரவது வாங்க முன்வந்தால் நல்ல விலைக்கு தருகிறேன்... FACEBOOK சொல்கிறது...! ************* மழை நின்ற பின்னே குடை தந்து செல்வாள்....! பல்போன பின்னே பக்கோடா தருவாள்....! ************* ‎அங்கே வயல்வெளியில் நிம்மதி புதைந்துகிடக்கிறது.... இங்கே பாலைவனத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்...!!! ************* ************* "முன்னே நிற்கின்றேன் வார்த்தை மொட்டுகிறாய்... மொபைலில் மட்டும் SMS ஆக கொட்டுகிறாய்" ************* இஷ்டம் இல்லாக்காதலில் துஷ்டனாய் நான்.... சாதுவாய் வந்து சாந்தம் தந்தாய்... இப்போதெல்லாம் ஒரே நாமம் காதலே சாந்தி சாந்தி என்று...!!! ************* மழைகாலத்தில் அவிக்கப்பட்ட மரவள்ளி கிழங்காய், வெயில்காலத்தில் வெடிக்கப்பட்ட வெள்ளரி பழமாய்.... என்றும் என்மனது எங்கள் ஊர் மண்வாசத்துடன்....! ************* முட்கம்பிகளுக்குள் நிலா, முடிந்தவரை போராடினேன் மீட்பதற்கு, கைதொட்டு காப்பாற்றும் தூரம் சென்றபின்.... நிலா சொல்கிறது... உன் கைகளில் ரத்தக்காயம்......

முதல் அனுபவம்..(18+)சும்மா பில்டப்பு...!

Image
முதல் அனுபவம் எனக்கு அந்த நேர்முகப்பரீட்சை தோல்வியுற்றதால் ஒரு சிறு கவலை காத்திருந்தேன் பஸ்ஸிற்காய் கனநேரமாய்...! ஒரு சோலை சேலையணிந்து சாலையோரமாய் வந்துகொண்டிருந்தது தவறுதலாய் ஒருமுறை பார்த்த கண்கள் மீண்டும் தவறுசெய்ய முனைந்தன..! அவள் அழகு அப்படி...! வேலைபோன வேதனையில் வாடியிருந்த கண்கள் அவள் அழகால் பூக்க ஆரம்பித்தது...! உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை ஒருவித இனந்தெரியா மயக்கம் என் உள்ளத்திலும் சிறு நிலநடுக்கம்...! அதுவரையில் காதல் பூகம்பம் கண்டிராத இதயச்சுவர் மெல்ல மெல்ல இடிய ஆரம்பித்தது...! கண்டவுடன் காதலா என் பழைய வினாவொன்றிற்கு விடையும் கிடைத்தது...! அந்தச்சோலையில் காதல்கனி பறிக்க தயாரானேன் தயங்கி நின்றபடியே...! அப்போது நான் இப்படி அரைகுறை கவிஞனல்ல கற்பூரம் அறியாக் கழுதை...! அருகில் வந்தால் அழாகாய் சிரித்தாள்...! செய்வதறியாது திகைத்துநின்றேன் கற்பனையில் இனிப்புச்சாப்பிட்டு காத்திருந்த பஸ்ஸும் எனை கடந்துபோனது தெரியாமல்..! எல்லா ஊர்க்கடவுளையும் ஒருமுறை வேண்டிவிட்டு உற்சாகமாய் சொல்லமுயன்றேன் உனை எனக்கு பிடித்திருக்...