Posts

Showing posts with the label சுகம்

அத்தான் என் அத்தான் - இரு காதல் கவிதைகள்

Image
வி த்தாகி மலர்க்கொத்தாகி காய்த்து கனிந்திருந்த உங்கள் காதல் உள்ளம, பித்தாகி பிரிவாகி இன்று கல்லாகிப்போன மாயம் என்ன...? என் கண்ணீரும் கவிதைபேசுதே காதல் சொல்ல....!!! அத்தான் என் அத்தான்...!!! +++++++++++++++++++++++++++++ க விதை தேன்வடியும் காகித பூ கொண்டு என் காதல் சொல்கிறேன்... நேசிக்காவிடினும் வாசித்தாவது விடு...!!! பூஜிக்காவிடினும் பரவாயில்லை... புன்னகை சிந்திவிடு...!!! நீ.. சுவாசிக்கின்ற காற்றில் நட்பின் வாசம் உண்மையாய் இருக்குமானால்...!!! +++++++++++++++++++++++++++++ "உங்கள் வாக்குகளால் என் வார்த்தைகள் கவிதைகளாய் இங்கே பூக்கட்டும்" நட்பின், நா.நிரோஷ்.

மஞ்சள் வெயிலாய்....!

Image
என்றும் சொல்லாமல் தாக்கும் சுனாமியே...! ஒன்றும் சொல்லாமல் கொல்லும் சுந்தரியே...! என்கனவில் வெண்பனியாய் பொழிகின்றாயே...! விழித்தெழும்முன் முன்பனியாய் கரைகின்றாயே...! என்விழிமீது ஒளிக்கீற்றாய் பறக்கின்றாயே...! என்மொழிமீது கவிக்கூற்றாய் பிறக்கின்றாயே...! ஆனால், நீயோ.... இன்னும் மொழியின்றி மௌனமாய் தவிக்கின்றாயே...!!! மஞ்சள் வெயிலாய் கன்னம் சிவந்த முகிலாய் முன்னே வர முனைகின்றாயே...! விரைவில், வெயில் கண்ட நிழலாய் மறைகின்றாயே...! வந்துசெல்லும் அலையாய் வந்து வந்து செல்கின்றாயே....! எபோதும் சிலையாய் என்முன்னே நிற்க்கின்றாயே..!!! "நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்" நட்புடன், நா.நிரோஷ்

காதல் குருடன்....!

Image
வெளிச்சம் நிறைந்த பகலில் வெண்ணிலா எப்படி வரும்...? நான் மூடனா...? இல்லை குருடன்...! காதல் குருடன்...! அதனால்தான் என் காதல் வெண்ணிலவை பகலிலும் தேடுகின்றேன்...!!! ++++++++++++++++++++++++++ உன்னோடு நானிருந்த கணங்கலேல்லாம்... பிணங்களாய் ஆனபின்பு, உன்கரம் பற்றித்திரிந்த என் கைகள், கிறுக்குப் பிடித்தபடி ஏதோ கிறுக்கி அலைகின்றது....! என் தனிமையின் தவிப்புகளை கவிதையாய் மாற்றியபடி....!!! "உங்கள் நட்பின் ஓட்டுக்களால் என் கவிதைகள் மேலும் பூக்கட்டும்" நட்புடன், நா.நிரோஷ்.