ஒரு சுமங்கலியின் குமுறல்...! (கண்டிப்பாக வ.வ.மட்டும்)
அடிக்குற வெயிலில்
அனல் பறக்கும் மதிய நேரம்...!
ஆக்கி வைச்ச மீன்குழம்பு
அப்படியே ஆறிப்போய்கிடக்குது
எங்கபோய் தொலைஞ்சாரோ
என்னோட புருஷன்...!!!
நேத்தும் அப்படித்தான்
இன்னைக்கும் அப்படித்தான்...!
பொல்லாத பொத்தான் என்று
நம்மட தலையில
கட்டி வைச்சாங்க - தலைமேல
கல்ல ஏனோ தூக்கி வைச்சாங்க...!!!
எனக்கு எதுக்கு கல்யாணம்
என்று கேட்டேன்
அவங்க கடைமை முடியனும்னு
சொல்லிவச்சாங்க...!
ஏன் தலையில ஏனோ
கொள்ளி வச்சாங்க...!!!
குடித்தனம் நல்ல பண்ணுவாரு
என்றுதானே கூடி நின்று
வாழ்த்து சொன்னாங்க..!
இப்படி குடியும் கும்மாளமுமாய்
திரிகிறாரே சேர்த்து வைச்சவங்க
என்ன செய்வாங்க....!!!
வீட்டில ஒழுங்க தங்குறல்ல
வேலைவெட்டிக்கும் போறதில்ல..!
மாமனாரு கொடுத்த காசு
மாவாட்டம் கரைஞ்சு போகுது...!
மதுவை இன்னும் விட்டபாடில்ல
மாதுவ இன்னும் தொட்டபாடில்ல...!!!
சிரிக்கிக்கு எதுக்கு படிப்பென்று
பாதியிலே நிக்கவைச்சாங்க....!
சிரிப்பதற்கும் அனுமதிய
கேட்க வச்சாங்க...!
பாழாப்போன மச்சானுக்கு
கட்டி வைச்சாங்க...!
இப்படி பாழும் கிணத்தில
ஏனோ தள்ளி விட்டாங்க...!
நாலுமணி ஆனா
நாலு காலில வரும்
நானோருத்தி இருக்கிறேன்னு
ஞாபகமா வரும்...!
என் வாழ்க்கை இதுவென்று
மனத நானும் தேத்திகிறன்...!
யாருமில்லா நேரம் பார்த்து
மனம்விட்டு அழுதுகிறன்...!
மனம் இல்லா திருமணம்
வேண்டாமின்னு சொல்ல்லிகிறன்...!
மானத்தோட வாழனுமே
மனதுக்குள்ளே வெந்துகிறேன்...!
குப்பத்துப்பொண்ணோ
குபேரன் பொண்ணோ
ஆத்த அப்பன் சொன்னாங்கென்னு
கழுத்த நீங்க நீட்டாதிங்க
காலமபூரா அழுதிடுவீங்க...!!!
என் வாழ்க்கை இதுவென்று
மனத நானும் தேத்திகிறன்...!
மானத்தோட வாழனுமே
மனதுக்குள்ளே வெந்துகிறேன்...!
முஸ்கி :- யோவ் எதுக்கிய்யா தலைப்பில கண்டிப்பாக வ.வ மட்டும் என்று போட்டிருக்காய் என்று கேட்கின்றீர்களா... ஐயோ அது ஒன்னுமுல்லிங்க வாழ்க்கை வாழ்வதற்கு மட்டும் என்று போட்டேன் அவ்வளவுதான்...! ஹீ ஹீ ஹீ.....!
நண்பர்களே இந்த பதிவு பிடித்திருந்தா கருத்தும் ஓட்டும் போட மறந்திடாதிங்க,
நண்பன்,
நா.நிரோஷ்.
வாழ்க்கை வாழ்வதற்கு மட்டும்
ReplyDeleteஉண்மைதானுங்க வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே... நன்றி அக்கா கருத்து இட்டமைக்கு..!
ReplyDeleteதிருமணம் என்கின்ற ஒன்றை பலரும் தங்கள் கடமையாகவே நினைக்கின்றனர். . .
ReplyDelete