முருங்கைக்காய் பார்த்தால் திருமண ஆசை வருகிறதா...? - வேச்சுலர்
புதருக்குள் நெளியும் புடையன் பாம்பாய்... உன் புருவம் கண்டவுடன் என் இதயம் மனதிற்குள்...!!! **** என்ன சொல்கிறாய் ஏன் மெல்கிறாய் எதற்காய் கொல்கிறாய்...?..!!! **** கடற்கரையில் காதல் பொதிசெய்த காமச்சோறு உண்கிறார்கள் இருவரும் மாறிமாறி #galleface #merina **** சந்தையில் முருங்கைக்காய் திருமணத்தை நினைவுபடுத்துகிறது #வேச்சுலர் **** பில்லி சூனியம் ஏவல் ஒன்று சேர்ந்த காதல் என்னோடு இப்போ மோதல்...:( **** விளம்பரம் :- "நன்றியுள்ள நாய்கள் விற்பனைக்கு உண்டு, யாராவது மனிதர்கள் இருந்தால் அவர்களுக்கு இலவசம்" **** குடிக்க வாட்டர் இல்லாக் காலங்களிலும் மேட்டரே இல்லாமல் குவாட்டர் கொடுப்பவன்தான் நண்பன்...! #குடிமொழி **** இன்று எழுந்தவுடன் ராசிபலன் பார்த்தேன் கிழக்குத்திசை போகவேண்டாம் என இருந்தது. அடங்கொய்யாலே வாத்ரூம் அந்த திசையில்தானே இருக்கு..! **** இன்று பார்த்த கோடூர காட்சி "ஒருத்தர் பருப்பு வடைய டீயில் தொட்டு சாப்பிட்டது" **** "BATTLESHIP" படம் பார்த்தேன் இட்ஸ் அமேசிங் அட்வென்சர் ஆக்சன் பிலிம் அமெரிக்க பெருமை சொல்லும் படமும் கூட பாருங்கள் ரசிக்கலாம்..! **** போறவளே பொண்ணுதாயி ...