நான் ஏன் இப்படி....?


நான் ஏன் இப்படி....?
எனக்குள் ஏன்
இந்த மாற்றம்...?

நான்கைந்து போத்தல்
உள்ளேவிட்ட நண்பன்கூட
இப்படி உளறியதில்லை...!

ஓசை ஒன்றும் இல்லாமல்
ஒரே இசையாய் இசைக்கின்றது
என்மனது...!

ஆசைகள் பல இருந்தும்
அனைத்தும் பூர்த்திகண்டு
பூரிக்கின்றது என்மனது...!

நாவிற்கு ருசியாய்
நல்ல சாப்பாடு ஆனால்
பசி அறியவில்லை....!

அலுப்பாயிருந்தும்
அன்னைமடியிருந்தும்
உறங்கமுடியவில்லை...!

நண்பர்கள் அடிக்கின்ற
அரட்டை கேட்டு
கொட்டாவி விடதோணுகிறது...!

அம்மா எனை
அழைக்கும் போதும்
அவள் குரலே கேட்கின்றது....!

எறும்பு கடித்த காயமும
இல்லை என்னுடலில்
ஏன் இப்படி வலிக்கின்றது...!

என்பெயரில் ஒரு கவிதை
கருத்தரிக்கின்றது அவள் தினமும்
உச்சரிக்கும்போது...!

எச்சரித்து நின்ற
எதிரிகள் எல்லாம் எனைவந்து
முத்தமிட முனைகிறார்கள்...!

கடும்மழை சுடும்வெயில்
கொட்டும்பணி குளிர்காற்று எல்லாம்
ஒரேநேரத்தில் என்வானிலையில்..!

பாதையோர பனைகளிலும்
பளிங்கில் செய்த இலைகளிலும்
ரோஜா மலர்கிறது....!

கடவுச்சீட்டு இல்லாமலும்
கடல்கடந்து செல்லாமலும்
உலகம் சுற்றுகிறது மனது...!

அறிந்திராத சொந்தமொன்று
புதிதாக வந்துநின்று
அனுமதி கேட்பதாக உணர்வு...!

உண்மை என்னவென்றால்
உரைக்க முற்படுகிறேன்
ஊமையாய் நிற்கின்றேன்...!

நான் ஏன் இப்படி...?
எனக்குள் ஏன்
இந்த மாற்றம்...?




"உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கும் என் கவிதைகள்"

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.