ஐயோ..... இந்த நிலா படும் பாடு இருக்கே சொல்லமுடியாதுங்க அம்புட்டு அநியாயமும் இந்த அம்புலிக்கு நடக்குதுங்க. யார் யார்தான் இதற்க்கு சொந்தம் கொண்டாடுவது என்று ஒரு அளவே இல்லேங்க..!
பிள்ளைக்கு சோறு ஊட்ட நிலா... ஆயாவிற்கு வடை சுட நிலா.. அண்ணனுக்கு சாயா போட நிலா... காதலுக்கு தூதுவனாய் நிலா... கவிஞனுக்கு கருப்பொருளாய் நிலா... மப்புக்கு ஊறுகாயாய் நிலா... மாப்புக்கு மருமகனாய் நிலா... விஞ்ஞானிக்கு ஆராய்ச்சியாய் நிலா... விவசாயிக்கு விளைச்சலாய் நிலா... பூசாரிக்கு பூஜைக்கு நிலா... பூமிக்கு இரவுநேர ஒளியாய் நிலா...
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்க. என்னதான் மனிதன் வளர்ச்சி பெற்றாலும், நிலா என்பது ஒரு கிரகம் என்பது பற்றி தெரிந்திருந்தாலும், இன்றும் மனிதனின் உணர்வுகளோடு ஓட்டியிருந்து ரசிப்பதாக நிலா இருந்துகொண்டேதான் இருக்கின்றது.
குழந்தைக்கு அம்மா சோறூட்ட நிலாவை காட்டுவதில் நியாம் இருக்குங்க. குழந்தை நிலா பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் இந்த காதலர்கள் நிலாவோட அடிக்குற கூத்து இருக்கே அம்மா தாங்கமுடியலைட சாமி (இங்க வேற என்னாவாம்). நேரில் சொல்ல பயந்துபோய் தோழியாய், தோழனாய் நினைத்து எல்லாவற்றையும...