அன்னை எனும் தெய்வம்...!


அன்பின் திருநாளாம்
அன்னையர்தின பெருநாளாம்
அகமகிழ்ந்து கொண்டாட
அவதரித்தத் ஒரு நாளாம்....!

அகிலத்தில் நாம் இங்கு
அவதரிக்கும் முன்னாலே
அன்பெனும் கருவாலே
அழகாக எமைத்தாங்கி
மாதங்கள் பத்தாக
முத்தாய் எமை பெற்றாளே...!

உயிரினங்கள் அத்தனையும்..
ஓரிடத்தில் ஒன்றுசேரும்
அன்னையெனும் தெய்வத்திற்கே
அந்தப்பெயர் வந்துசேரும்...!

தெய்வங்கள் கண்முன்னே தெரிவதில்லை - அவை
அன்னையாய் இருப்பதை அறியவில்லை
மாதாவே முதலென்று தெரிந்திருந்தும்
உரிய மரியாதை சிலபேர் கொடுப்பதில்லை...!

மதம் என்ற பெயரில்
மதம்கொள்ளும் மனிதன்
இனம் என்ற குணத்தில்
சினம்கொள்ளும் மனிதன்
இந்த ஒரு சொல்லில் மட்டும்
புனிதனாய் பூப்பதும் ஏனோ...?

உறவுகள் எத்தனை இருந்தாலும்
உனை உள்ளங்கள் எத்தனை கவர்ந்தாலும்
உண்மையில் அன்புகொண்டு உயிராக பாசம்கொள்ள
அன்னையை போன்றிங்கு அவதிரித்தோர் யாரும் உண்டோ....?

மனிதனாய் நீ பிறந்திருந்தால்
நல்லமனம் கொண்டுநீ வாழ்ந்திருந்தால்
அன்னையின் அன்பிற்கு அடிபணிந்து
அவள்சொள்ளும் வாழ்விற்கு கீழ்படிந்து
உன்தாயை நீ மதித்து வந்தால்
உன்னாலும் உலகத்தை வெல்ல முடியும்...!

எத்தனை தினங்கள் இருந்தாலும்
அத்தனை தினங்களெல்லாம்
அன்னையர் தினத்தைப்போல் இங்கு
அகம்கொள்ள மலர்ந்திடுமா....?



நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்....
நட்புடன்,
நா.நிரோஷ்

Comments

  1. அன்னை என்பவள்
    கண்முன் நடமாடும்
    நிதர்சன தெய்வம்.

    அழகு கவிதை அழகு

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பா... கருத்திற்கு வாழ்த்துக்கள்...! மீண்டும் எதிர்பார்க்கின்றேன்..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?