காதலெனும் கடும் சிறை...!!!


எனை
தூக்கிலிட்டாவது
என் கடைசி ஆசை
என்னவென்று
கேட்டுவிடேன்....
உனக்கும்
இரக்கமிருந்தால்...!!!



+++++++++++++++++++++++

உன்
நினைவு
என்றும்
என்னுடனே
இருக்கின்றது
என் நிழலாய்
வருவதனால்...!!!

என்
நிழலையும்
உன் நினைவு
மிஞ்சுகிறது
இரவிலும்
கனவாய் வருவதனால்...!!!



+++++++++++++++++++++++++++

நான்கு கண்களும்
நான்கு கைகளும்
இணைய முற்பட்டு
இரண்டு இதயத்தை
சிறைப்படுத்த
முயல்கின்றன....
காதலெனும்
கடும் சிறையில்...!!!



++++++++++++++++++++++++++

அன்பு நண்பர்களே அடியேன் ஆரம்பித்திருக்கிறேன் தங்களின் ஓட்டுக்கள் இட்டு எனை ஊக்கபடுத்துங்கள்...!

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

கண்கள் சொல்லும் கவிதை...!