மஞ்சள் வெயிலாய்....!

என்றும்
சொல்லாமல் தாக்கும்
சுனாமியே...!
ஒன்றும் சொல்லாமல்
கொல்லும் சுந்தரியே...!

என்கனவில்
வெண்பனியாய்
பொழிகின்றாயே...!
விழித்தெழும்முன்
முன்பனியாய்
கரைகின்றாயே...!

என்விழிமீது
ஒளிக்கீற்றாய்
பறக்கின்றாயே...!
என்மொழிமீது
கவிக்கூற்றாய்
பிறக்கின்றாயே...!
ஆனால்,
நீயோ....
இன்னும்
மொழியின்றி
மௌனமாய்
தவிக்கின்றாயே...!!!

மஞ்சள் வெயிலாய்
கன்னம் சிவந்த முகிலாய்
முன்னே வர முனைகின்றாயே...!
விரைவில்,
வெயில் கண்ட
நிழலாய்
மறைகின்றாயே...!

வந்துசெல்லும்
அலையாய்
வந்து வந்து
செல்கின்றாயே....!
எபோதும்
சிலையாய்
என்முன்னே
நிற்க்கின்றாயே..!!!




"நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்"

நட்புடன்,
நா.நிரோஷ்




Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?