முதல் அனுபவம்..(18+)சும்மா பில்டப்பு...!
முதல் அனுபவம் எனக்கு
அந்த நேர்முகப்பரீட்சை
தோல்வியுற்றதால் ஒரு சிறு கவலை
காத்திருந்தேன் பஸ்ஸிற்காய்
கனநேரமாய்...!
ஒரு சோலை சேலையணிந்து
சாலையோரமாய் வந்துகொண்டிருந்தது
தவறுதலாய் ஒருமுறை
பார்த்த கண்கள் மீண்டும்
தவறுசெய்ய முனைந்தன..!
அவள் அழகு அப்படி...!
வேலைபோன வேதனையில்
வாடியிருந்த கண்கள்
அவள் அழகால் பூக்க ஆரம்பித்தது...!
உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை
ஒருவித இனந்தெரியா மயக்கம் என்
உள்ளத்திலும் சிறு நிலநடுக்கம்...!
அதுவரையில் காதல் பூகம்பம்
கண்டிராத இதயச்சுவர் மெல்ல மெல்ல
இடிய ஆரம்பித்தது...!
கண்டவுடன் காதலா என்
பழைய வினாவொன்றிற்கு
விடையும் கிடைத்தது...!
அந்தச்சோலையில் காதல்கனி பறிக்க
தயாரானேன் தயங்கி நின்றபடியே...!
அப்போது நான் இப்படி
அரைகுறை கவிஞனல்ல
கற்பூரம் அறியாக் கழுதை...!
அருகில் வந்தால் அழாகாய் சிரித்தாள்...!
செய்வதறியாது திகைத்துநின்றேன்
கற்பனையில் இனிப்புச்சாப்பிட்டு
காத்திருந்த பஸ்ஸும் எனை
கடந்துபோனது தெரியாமல்..!
எல்லா ஊர்க்கடவுளையும்
ஒருமுறை வேண்டிவிட்டு
உற்சாகமாய் சொல்லமுயன்றேன்
உனை எனக்கு பிடித்திருக்...