நன்பெண்டா நாசமா போக....!!!

நேரம் மாலை ஆறுமணி
Item பார்த்து அலுத்த கால்கள்
அசதியை நாடின..
நண்பா நாளை சந்திப்போம்
நண்பனிடம் விடைபெற்று
வீடு சென்றேன்...

வாசலில் அம்மா என் வருகைக்காய்...
உள்ளே அப்பா எனை வாழ்த்துவதற்காய்..
அம்மா என் செல்லம் என
ஐஸ் வைத்துவிட்டு
உள்ளே நுழைந்தேன்...

அப்பாவின் அறிவுரை பூசை
அரங்கேறி முடிந்தவுடன்
அம்மாவின் அன்புச் சாப்பாடு...
சிறிதுநேர ஓய்வுக்காய்
தொலைக்காட்சி நட்புக்காக
திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது...
இருந்தும்,
தூக்கம் எனை துரத்திவந்தது
அன்னைமடியில் ஒரு குட்டித்தூக்கம்
தங்கை வந்து பங்கு போட
ஒரு சின்னபாசச் சண்டை
பாட்டிக்கு பல் இல்லை
பாக்கு இடித்து கொடுத்துவிட்டு
மணி பதினொன்று தாண்டியதால்
படுத்துறங்கச் சென்றேன்....

அமைதியான இரவு
அழகான நிலவு
அடர்ந்த இருட்டு
அனைவரும் உறங்கும் நேரம்
யன்னல்வழி வந்த
மெல்லிய தென்றல் என்
மேனியை உரசும்போது
அலைபேசியில் ஒரு குறும்செய்தி
அன்பு நண்பனிடமிருந்து
நண்பா நீயுடன் வரவேண்டும்
எனக்கொரு உதவி புரியவேண்டும்"
என்னவென்று தெரியாமல்
எதேன்றும் புரியாமல்
புறப்பட்டுச் சென்றேன்
தென்றல் வந்த வழியாக..

நாங்கள் கூடும் இடத்தில்
நண்பன் எனக்காய் காத்திருந்தான்
கையில் ஒரு கடிதத்துடன்
காண்ணீர் பூத்திருந்தான்
நண்பா நாளை காதலர்தினம்
இப்போதே இந்தகடிதம் அவள்
கரம்சேரவேண்டும்
நீதான் இதை கரைசேர்க்கவேண்டும்
என உருகிவேன்டினான்
நல்லவேளை அருகில் யாருமில்லை
நக்கல்செய்து சிரிப்பதற்கு
உயிர் நண்பன் உதவிகேட்கின்றான்
என்னசெய்வது என்று கேட்காமல்
உடனேகிளம்பினேன்
கடிதத்தை கரம்கொடுக்க...

வெறிச்சோடிக்கிடந்த வீதியிலே
வெறிநாய்கள் கூட்டம்
படபடத்த மனதுடன்
பாய்ந்து கடந்தேன் முள்வேலியை
ஓலைவீடு என்றால் குதித்திருப்பேன்
ஒட்டுவீடு ஒருகனம் யோசித்தேன்
முயன்றுபார்ப்போம் என்றுசொல்லி
முன்னோக்கி சென்றேன்
முணுமுணுத்த நாய்க்கு
முத்த பிஸ்கட் கொடுத்துவிட்டு
ஓட்டின்மீது ஏறி
ஒழுகிய மழையாய்
உள்நுழைந்தேன்
பாவம் அவள் நிம்மதியாய்
படுத்துறங்குகிறாள்
பாழப்போன காதலால்
நண்பர்கள் படும்பாடு
எனஅடிமனதில் நினைத்துக்கொண்டே
அருகில் சென்றேன்
அவள் அலைபேசியின் அடியே
அழகாய் வைத்துவிட்டு
அவதானமாய் திரும்பும்போது
திடீரென ஒரு சத்தம்
பசித்த பூனை உருட்டிய பானை
உருண்டோடியது என்முன்னே
அறையின் கதவொன்று திறந்தது
அனல் வேகத்தில் வெளியேறினேன்
வீட்டை விட்டு...

அடிபட்ட காலில் சிறு காயம்
ஆனாலும் சிறு ஆறுதல்
நண்பனின் வேண்டுதலை முடித்ததால்..
காத்திருந்த நண்பனின்
கண்ணீர் துடைத்து
நல்ல செய்தி சொன்னேன்..
ஆனால் அவன் இன்னும்
சோகத்தின் உச்சியிலே...

என்னடா செய்தியென்று
மீண்டும் வினாவினேன்
"இல்லடா கடிதம் மாறிவிட்டது"
என கவலையுடன் கூறினான்..
புரியாமல் நானும் மீண்டும்
கேள்விகேட்க...

அவன் சொன்னானே ஒரு செய்தி
"அதுடா அவளுக்கு எழுதிய கடிதம்
எதோ இருக்கு நீ கொடுத்த கடிதம்
வேறொருத்திக்கு கொடுக்கும் கடிதம்"
என பையுள் இருந்து ஒரு ஒன்பது கடிதம்
என் கண்முன் காட்டினான்...
நான் இவன என்ன செய்யணும்
நண்பர்களே நீங்களே சொல்லுங்கள்..


நகைச்சுவைக்காய் மட்டும்
ஒரு சிறு கற்பனை கவிக்கதை
அன்பு நிரோஷ்.

Comments

  1. யாருடா அந்த நண்பன்!! நான் அவனில்லையே??

    ReplyDelete
  2. இல்லைடா... நீ அவனில்லை....!

    ReplyDelete
  3. வித்தியாசமான சிந்தனையில் அசத்தலான கவிதை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி நண்பா...

    ReplyDelete
  5. remove comment word verification!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?