என்ன..? லவ்.. கவிதை... ஐயோ ராமா..?

ஐயோ...! ஐயோ...!
இதை கொஞ்சம் படிச்சு பாருங்கப்பா.... கேச கேட்டா..

"என்னடா மச்சி ஆள ரொம்ப நாளா காணோம்..
""ஒன்னும் இல்லடா மனசு சரியில்ல மச்சி..."
"என்ன மனசு சரியில்லையா?
டேய்... என்னடா சொல்லுற?
அதான் எந்த நேரமும் காதல் காதல் எண்டு பறந்து திரிவாயே...
இப்ப என்ன ஆச்சு? "
"அந்த அந்த பாழாப்போன காதல் தந்த பரிசுதான் மச்சி இந்த நிலைமை..."
"அதானே பார்த்த என்னடா மச்சி மூஞ்சி சும்மா வாழைகுலை மாதிரி தொங்குதே எண்டு...."
"டேய் சும்மா போடா.. நானே வெந்துபோய் இருக்கன்.."
"அது சரி மச்சி என்னடா நடந்துச்சு...
உன்ன அவளுக்கு பிடிகலையா? என்ன சொன்னா?"
"மச்சி நீ சொன்னமாதிரி காதலர் தினத்தன்று,
நீ எழுதிதந்த கவிதைய கொடுத்து என் காதல சொன்னன்டா.. ஆனா அவள்.............."
"என்னடா மச்சி, சொல்லுடா.. என்ன சொன்னா?"
கவிதைய படிச்சிட்டு, கவிதை நல்ல கருத்தா இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு - ஆனா
நீ கடும் கறுப்பா இருக்க எனக்கு உன்ன பிடிக்கல எண்டு சொல்லிபுட்டா மச்சி....!"
சரி விடுடா இந்த பொம்புளைங்க எப்பவும் இப்படித்தான், அதுக்கு ஏன்டா இப்படி சோகமா இருக்க?
"இல்ல மச்சி அவ என்ன பிடிக்கல எண்டு சொன்னதற்கு நான் பீல் பண்ணல, ஆனா உண்ட கவிதைய கருத்தா இருக்கு அவளுக்கு நல்ல புடிச்சிருக்கு எண்டு சொன்னா பாரு அதாண்டா என்னால தாங்க முடியல....!
"அட பாவி, உனக்குப் போய் கவிதை எழுதி தந்தான் பாரு எனக்கு நல்ல வேணும்டா."
"சரிடா அவளே சொல்லிதாளே நீ நல்ல எழுதுவாய் எண்டு, இப்ப எண்ட நிலைமைக்கு ஒரு கவிதை சொல்லுடா பாப்போம்... ஆனா அந்த கவிதை அவளுட்ட நான் நியாயம் கேட்க மாதிரி இருக்கணும் சரியாடா?
"சரிடா இப்ப பாரு சும்மா எழுதி தள்ளுவமில்ல.....

"அந்தி மாலை நேரம்,
என் மனதில் ஏதோ பாரம்....!
கதிரவன் மறையும் வேளை
என் காதல் நினைவு மலரும்...!

ஒரு மலர்மீது காதல் கொண்டேன் ஒரு நாள்,
அவளை நினைத்து உருகினேன் பலநாள்...!
என் காதல் சொன்னேன் காதலர் தினத்தன்று, - ஆனால்
அவள், எனை வெறுத்தாள் நான் கறுப்பென்று...!

நான் கறுப்பாய் பிறந்தது பாவமா, இல்லை
அவள் மீது காதல் கொண்டது பாவமா...?
என் உடல்தான் கருமை நிறம் அன்னமே,
என் உள்ளமோ உனைப்போல் வெண்மையே...!

கருமேனி உடல்கொண்ட என் தேகம்,
காதல் தீயில் கருகுவதன் ஞாயம் என்ன...?
கன்னி உனை சுமந்திருந்த என்நெஞ்சம் - இன்று
கண்ணீரில் நனைவதன் மாயம் என்ன...?

உடல் நிறத்தைப் பார்த்த உன் உள்ளம் - ஏன்என்
உள்ளத்தைப் பார்க்க மறுத்தனவோ...?
கறுப்பான கார்மேகம் சூழாவிட்டால்,
விருப்பான வெள்ளை மழை பொழிந்திடுமோ...?

கறுப்பான உடல் எனக்கு,
கல்லான உள்ளம் உனக்கு..!
உன்னோடு வேண்டாம் காதல்,
உயிரோடு வேண்டாம் சாதல்..!




பெண்ணே..!காதலை மறுப்பதற்கு காரணம் ஏன் உங்களுக்கு....?பிடிக்கவில்லை என்ற வார்த்தை போதும் எங்களுக்கு..!!!

"உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது... என் கவிதைகள்"

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

  1. ///உடல் நிறத்தைப் பார்த்த உன் உள்ளம் - ஏன்என்
    உள்ளத்தைப் பார்க்க மறுத்தனவோ...?
    கறுப்பான கார்மேகம் சூழாவிட்டால்,
    விருப்பான வெள்ளை மழை பொழிந்திடுமோ...? ///

    உவமையுடன் விளக்கிய விதம் அருமை
    நிறங்களின் பிடியில் சிக்கியிருப்போருக்கு
    உணர்த்தட்டும்.

    ReplyDelete
  2. நன்றி நண்பா...! என்றும் உங்கள் கருத்துங்கள் இடம்பெறட்டும்..!

    ReplyDelete
  3. //நான் கறுப்பாய் பிறந்தது பாவமா, இல்லை
    அவள் மீது காதல் கொண்டது பாவமா...?
    என் உடல்தான் கருமை நிறம் அன்னமே,
    என் உள்ளமோ உனைப்போல் வெண்மையே...!//

    அருமையான வரிகள் நண்பரே..
    வாழ்த்துக்கள்

    நட்புடன்
    சம்பத்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.