இனி விடியும் நல்ல பொழுது....!



காதலி நிலவிற்கு...!
உனைநித்தம் நினைத்து
நிழலாய் போன
நிஜக்காதலன் எழுதிக்கொள்வது...!

இது நானாக எழுதும்கவிதை அல்ல,
உன்முகம் அழகென்ற
அனுதினமும் அலட்டிக்கொண்ட
என் இரு கண்களும்
எனைஇரங்கி வேண்டியதால்
இந்த இறுதி மடல்.....!

நீயொரு அதிசய மலரென்று -
உனைநித்தம் நினைத்து
நாள்தொறும் ஆயிரம்கவிதைகள்
கிறுகியஎன் கைவிரல்கள்
எனை கைதொழுது
வேண்டியதால்
இந்த இறுதி மடல்...!

காரணம் என்னவோ
நானறியேன் கண்மணி
நீ எனைவெறுத்ததற்கு....?
ஆதலால் தினமும்
துடிக்கின்றேன்
நித்தம் உனைமறப்பதற்கு...!

சுகமான உன் கனவில்
தொலைந்துபோன என்உறக்கங்கள்
இன்றுவலியான கண்ணீரில்மூழ்கி
தத்தளிக்கின்றன..!

உண்ணும் உணவன்றி
வேறொன்றும்
தொடவில்லையடி
என் உள்ளத்தை
உன்நினைப் போன்றைத்தவிர....!

ஏனோ
இன்று உண்ணும் உணவும்
என் உள்ளத்தை தொடமறுக்கின்றது
உன் உள்ளத்தைப்போல...!

உன்முதல் சந்திப்பிலே
மீண்டும் பிறந்தேன்
முழுவதும் மறந்தேன்
முகிலோடு பறந்தேன்
முற்றும் துறந்தேன்
இன்று
முதல் முறை இறந்தேன்...!

என்னுயிர் நீ
எனைவிட்டு போனபின்பும்
உயிரான காதலை
உதறித்தள்ளி எறிந்தபின்பும்
உன்நினைவு தேடி
என்உள்ளம் பறப்பதுஞாயம்தானோ?

நிலவென்று உனைஉரைத்ததற்கு
எனைதேயச் செய்வது கொடுமை
மலரென்று உனைநினைத்ததற்கு
எனைவாடச் செய்வதும் கொடுமை...!

என்ன செய்வது,
வேண்டாத காதலை
வீம்பாக தீண்டியதன்
விளைவாக விளைந்த பலன் இது
இன்றுஒன்றும் புரியவில்லை
வாழ வழியும் தெரியவில்லை...!

மனமே.....!
வஞ்சம் கொண்ட
வஞ்சி அவள் நினைந்து
வருந்தவும் வேண்டாம்...!
எஞ்சி இருக்கும் உன் வாழ்வை
இருட்டில் தொலைக்கவும் வேண்டாம்..!

ஆம் காதலியே...!
வேண்டாம் உன் நினைவு
இதுதான் என் முடிவு
இனி விடியும்நல்ல பொழுது....!
நீ வாழ்க நலமுடன்
என வாழ்த்தும்என் உள்ளம்
உன் நினைவின்றி...!

நண்பர்களே நீங்கள் தெளிக்கும் கருத்து மழைகளில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்...!!!

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

  1. காதலின்னு யார் படம் போட்டிருக்கீங்கன்னு தெரியுதா..ரைட்டு!

    ReplyDelete
  2. தெரியலை நண்பா... நெட்டில தட்டினன் கிடைச்சுது..?
    யார் இது...?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?