அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!



அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில்
அமுதா எனும் அன்னை மடியில்
அவதரித்த அமுதசுரபி துஷயந்தா நீ
அனைவரையும் விட்டு போனதெங்கே சொல் நண்பா...?

கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க
இலக்கியம் தடுமாற இலக்கணம் தமிழ்மாற
எப்படி கவிதைகள் எழுதமுடியும்...?
உன்புகழ் எப்படி பாடமுடியும்...?

நோயோடு வந்திருந்தால் நொந்திடோமே
காலன் சாவெடுத்து போனானே நண்பா
சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயது
சாந்தியாய் போனது ஏன் நண்பா...?

அன்று முதல் இன்று வரை - என்றும்
உன்முகம் வாடியதில்லை
உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும்
துன்முகத்தை நாடியதில்லை - இன்று
மூடிவைத்து உன்முகத்தை நாங்கள்
கூடிவந்து கொண்டு செல்லும்
கொடிய நிலை ஏன் நண்பா...?

அன்னைக்கு ஒரேபிள்ளை
அனைவருக்கும் செல்லப்பிள்ளை
உனை விரும்பாதோர் யாருமில்லை
வெறுப்போர் என்று எவருமில்லை
கொடிய நோய்கொண்டு நீபோக
குறையுண்டோ நாங்கள் சொல்ல - இனி
நீயின்றி எங்கள் அணி எப்படி வெல்லும்...?

அணியில் நீ அனைத்திலும் சிறந்தவன்
ஆடுகளத்தில் நீ அதிரடி ஆட்டக்காரன்
இடது கைகொண்டு எதிரணியை பந்தாடும்
ஆட்டநாயகன் - ஓட்டங்கள் நீ குவித்து
கிண்ணங்கள் பெற்ற வேட்டைநாயகன்
விதியெனும் விளையாட்டில் விடையேதும்
சொல்லாமல் வெற்றியும்கொள்லாமல்
விடைபெற்று போனதென்ன சொல் நண்பா...?


நீ தொட்டுத்தந்த கிண்ணத்தில்
கைரேகை இன்னும் மறையவில்லை
உன் கைகள் பற்றிய தோள்களில்
நட்பின் ஸ்பரிசம் இன்னும் மாறவில்லை
சொத்தென சேர்த்த சொந்தங்கள் கதிகலங்க
அத்தனையும் விட்டதென்ன அரைவாழ்வை தொட்டதென்ன...?

துஷி துஷி என்று சொந்தங்கள் கலங்குகின்றோம்
பாரைய்யா பாரையா என பெற்றோர்கள் புலம்புகின்றோம்
நண்பர்கள் நங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம்

என்றும் நட்பின் பாவெடுத்து பாடி நிற்கிறோம்
அன்பின் பூவெடுத்து போற்றி நிற்கிறோம்
நலன்கள் பல செய்து நாங்கள் என்றும் வேண்டுகிறோம்
நண்பா உன் சாந்தி என்றும் நலமாக அமையட்டும்
சாந்தி சாந்தி சாந்தி..

Comments

  1. முகத்தில் சாந்தமும் அமைதியும் புன்னகையும் அன்பும் ஒருசேர காணமுடிகிறது நிரோஷ் உங்க கவிதை வரிகள் மூலமாக அவரின் குணநலன்களை அறிந்தபோது மனம் கலங்கிவிட்டது. இத்தனை நல்லவரை நோய் கொண்டு போகும் அவசியம் என்ன என்று இறைவனை வைகிறது....

    நல்லவரெல்லாம் இறைவன் தன்னிடம் இழுத்துக்கொண்டால் பூமி தாங்குமா :(

    பிறப்பவர் ஒரு நாள் இறப்பது இயல்பென்றாலும் அதை ஏற்கும் துணிவும் மனதிடமும் இறைவன் நமக்கு தரவில்லையே...

    அன்பை தந்த நட்பு
    ஆறுதலை தந்த நட்பு
    தோளணைத்த நட்பு
    இன்று இல்லாமல் போனதை
    வரிகளில் சொல்லி சென்றதை பார்க்க நெஞ்சடைக்கிறதுப்பா....

    பெற்றோரும் உற்றோரும் நட்பும் கதறி அழ அழ விட்டுச்சென்ற துஷ்யந்தனின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனிடம் சேரவும் என் பிரார்த்தனைகள்பா...

    ReplyDelete
  2. ஆழ்ந்த அனுதாபங்கள்.....

    ReplyDelete
  3. ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பன் குடும்பத்தாருக்கு! 

    ReplyDelete
  4. ஆழ்ந்த அனுதாபங்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  5. ஆழ்ந்த அனுதாபங்கள் சகோ உங்கள் நண்பனின்
    குடும்பத்தாருக்கு .அத்துடன் உங்கள் நண்பனின்
    ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றேன் .

    ReplyDelete
  6. உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகளும்..

    ReplyDelete
  7. நண்பரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?