களவாணிப் பசங்க நாங்க...!!!

நாங்க நாலுபேர் நண்பர்கள்
எங்களுக்கு இல்லாத எதிரியே இல்ல
ஆனாலும் சும்மா கலக்குவமில்ல...!

+++++++++++

படிப்பது சாதாரணதரம்
குடிப்பது உயர்தரம்
நாங்க எப்பவும் தனிரகம்...!

+++++++++++

காலைமுதல் மாலைவரை
சுடிதார்முதல் சேலைவரை
மதிப்பெண் போட்டே பெண்களை மதிச்சோம்..!
எங்க மதிப்பெண் குறைஞ்சு
தவியா தவிச்சம்...!

+++++++++++

கிரிக்கெட் கிரிக்கெட் என்று
கிறுக்குப் பிடிச்சு குறுக்குச்சந்தில் உள்ள
கண்ணாடி உடைப்பது பொழுதுபோக்கு...!

+++++++++++

நாங்க ஜெயிக்காத கப்புமில்ல
உடைக்காத கப்புமில்ல
அடிக்காத மப்புமில்ல ...!

+++++++++++

ஒரு மையவீட்டையும் விட்டதில்ல
பொது மைதானத்தையும் விட்டதில்ல...!

+++++++++++

ஊருல கோயில் திருவிழா
எங்களுக்கு ஒரே பெருவிழ
நாட்டுக்கோழிமுதல் ஆட்டுக்கிடா வரை
ஆட்டையபோட்டே அறுசுவையுண்டோம்..!

+++++++++++

நண்பனின் காதலி
நண்பனை ஏற்கமறுத்தால்
நாங்க போடுவோம்
அவங்க வீட்டின் முன் கறுத்தால்..! (பந்த்)

+++++++++++

பள்ளிக்கு ஒழுங்கா போனதில்ல
படிக்கிறமாதிரி நடிச்சதில்ல
படிச்சவங்களையும் மதிச்சதில்ல
படிகாதவங்களையும் மிதிச்சதில்ல
வீட்டில நாங்க நல்லபுள்ள
வெளியில வந்தா சும்மா கலக்குவமில்ல...!

+++++++++++

பருவவயசு பாடாய் படுத்தியதில்
இழப்பது எதிர்காலம் எனதெரியாமல்
இன்னலின்றி வாழ்ந்திருந்தோம்
இன்பமொன்றே கண்டிருந்தோம்...!

+++++++++++

ஆண்டுகள் பலகடந்தாலும்
அன்பு நண்பர்கள் பிரிந்தாலும்
என் பருவவயசு நினைவுக்காற்று
நித்தம் எனை வந்து
முத்தமிட்டுச் செல்கின்றன...!

+++++++++++
நண்பர்களே இந்த நினைவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டுப்போட மறக்காதிங்க....!
நிரோஷ்.

Comments

  1. நன்றி நண்பா..!!! என் வலைப்பூ வந்தமைக்கும் கருத்து கூறியமைக்கும்..!

    ReplyDelete
  2. அத்தனையும் முத்துக்கள்...

    ரசணையுடன் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ////
    ஆண்டுகள் பலகடந்தாலும்
    அன்பு நண்பர்கள் பிரிந்தாலும்
    என் பருவவயசு நினைவுக்காற்று
    நித்தம் எனை வந்து
    முத்தமிட்டுச் செல்கின்றன...!
    ////////

    புல்லரிக்கும் வரிகள்..

    ReplyDelete
  4. கலக்கிட்டிங்க போங்க

    ReplyDelete
  5. நன்றி நண்பர்களே தங்களின் வருகையும் தாங்கள் அளித்துள்ள கருத்துக்களும் கண்டு மனமகிழ்கின்றேன்... தங்கள் ஆதரவு என்றும் இருக்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?