என் FACEBOOK மொக்கைகள் - I

>
என்ன நண்பர்களே தலைப்பை பார்த்துவிட்டு.... என்னமோ எதோ என நினைத்துவிட்டீர்களா....? ம்ம் உண்மைதான் ஆனால் நீங்கள் நினைப்பதுபோன்று அல்ல.. என்னமாதிரி சிலபேரின் அட்டூழியம் தாங்கமுடியாமல் அழியாமல் என்ன செய்யும் என சொல்லவந்தேன். வேறொன்றுமில்லை FACEBOOK சுவரில் நான் இதுவரைக்கும் இட்ட சில மொக்கை நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... இதைபார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள். நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று....?


========================
பெண்ணே....!
அன்று என் கையில் ஒரு மலர் கேட்டேன் தர மறுத்த நீ....
இன்று என் கல்லறையில் ஒரு மலர் கொத்தையே வைத்துச்செல்வதுஎன்னடி ஞாயம்...

========================

அன்பான காதலியை தொலைத்துவிட்டேன் அவளையே மணந்துகொண்டதால்...!

========================

பெண்ணே...!
உன் மௌனம் இனியது என்காதல் உன்னிடம் சொல்லும்வரை...!
அதுவே மிகக்கொடியது உன்காதல் என்னிடம் சொல்லும்வரை...

========================

வாடும் மலரில் வாசம் குறையும்...!
தேயும் நிலவில் ஒளி குறையும்...!
ஆனால், வாடியும் தேய்ந்தும்போன என் காதலில் வலி மட்டும் அதிகரிப்பது ஏனோ?

========================

பசிக்கின்ற பிள்ளைக்கு பால்கேட்க மொழியில்லை...!
அதை அறிந்திங்கு பால் கொடுக்கும் அன்னையைப்போல் வேறு யாருமில்லை...!
அன்பென்றால் என்னவென்று அறியாதோர் எவருமில்லை...!
ஆனால் அன்னையின் அன்பை மிஞ்ச யாருமிங்கு பிறக்கவில்லை..

========================

காதலாலே காதலாலே காளையிவன் கோளையானேன்...
கண்ணீருடன் கவிதையுடன் ஏழையிவன் மேதையானேன்....
அன்று.... காதலியை நினைக்கும்போது உலகமும் பிடிச்சுது.... இன்று.....
தண்ணியை நான் அடிக்கும்போது உலகம் சுத்துது....

========================

வாழ்கையை தொலைத்துவிட்டு வாடியலைந்தேன் நண்பா உனைப்பார்த்த பின்பு மீண்டும் எழுந்தேன்....!

========================

காதல் பெண்ணின் மௌனமும் காமப் பெண்ணின் மென்மையும்....!
காலையில் மலர்ந்த மலரும் கார் கூந்தலில் சூடிய மலரும்....!
கரும் மேகம் பொழிந்த மழையும் கடல் மணலில் எழுதிய கவிதையும்...!
என்றும் நிலைத்து நிற்பதில்லை... நண்பா உன் நட்பைத்தவிர....!"

=========================

என் இதயச் சுவரின் வழியே யாரோ ஒருத்தி எட்டிப்பார்த்தாள் இருந்துவிட்டேன் மௌனமாய், இன்று என் இதயமே இடிந்து விழுந்துவிட்டதே.....!"

=========================

திறந்த வீட்டினுள் நாய் நுழைவதும் பருவ வயதில் காதல் வருவதும் வழமைதான்.....!
ஆனால் நாய் கடிப்பதும் காதல் வலிப்பதும் அவர்களின் அதிஸ்டத்தை பொறுத்துதான்...!

=========================

பெண்ணே.....! நான் இரத்தம் சிந்தி எழுதிய கவிதையில் ஒரு ஈ கூட மொய்க்கவில்லை அது உனக்கென்று எழுதப்பட்டதால்...!

=========================

"காதலிக்க தெரிந்த பெண்களின் கண்ணியச்செயல் காதலை கற்பழிப்பது...!காதலிக்க தெரியாத ஆண்களின் வீரச்செயல் கண்ணீர் விடுவது...!"

=========================

"நான் ஒரு காதல் குழந்தை...! மொழியறியேன்..... வழியறியேன்.... என் எண்ணத்தை வெளிப்படுத்த...! நீ ஒரு தாயாய் இருந்து எனை புரிந்துகொள்ளமாட்டாயா....?

=========================

"பெண்ணே உன் புன்சிரிப்பின் பொருள்தேடி புலம்பெயர்ந்தேன் இலக்கியத்திற்குள் இன்னும் புலப்படவில்லை உன் மௌன மொழியின் ரகசியம்...

=========================

"நல்ல நட்பொன்று ஒழிந்துகிடக்கின்றது நானும் நீயும் புரிந்துகொள்ளும்வரை...

=========================

"நீ விரைவாக காதலில்விழ வாழ்த்துக்கள் என்றான் எங்க ஊரு மதுக்கடைக்காரன்..

=========================

என் இதயவானில் திடீரென இன்று பல பாரிய சோகமூட்டங்கள் சூழ்ந்துள்ளதால், எந்த நேரத்திலும் கண்ணீர் அடைமழை கனமாக பொழிந்து கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு கண்வழியே வெளியேறி என் மூஞ்சி புத்தகத்தை தாக்கக்கூடும் என்ற அச்சத்தினால், என் நடவடிக்கைகள் இங்கே ஓரிரு தினங்களுக்கு ஒத்திவைக்கின்றேன் என்பதனை எனது அன்பு நண்பர்களுக்கு அறியத்தருகின்றேன்....

=========================

பாவை உன் நினைப்புடன் பஞ்சுமெத்தையில் உறங்குவதை விட... பாலைவன சுடுமணலில் படுத்து உறங்கிவிடலாம், சுகமான தூக்கத்திற்கு..

=========================

பாலைவன மணலில் பாய்விரித்து காத்திருப்பது நான் மட்டுமல்ல நண்பா, நான் வாங்கி வைத்திருக்கும் பட்டைப்போத்தலும்தான்......! கடலைத் தாண்டி வருவாயா....?

=========================

உன்மேல் நான் வைத்துள்ள அன்பு + நட்பு + காதல் எவ்வளவு என்பதை அளந்துகொள்ள உதவும் ஒரே ஒரு அளவுகோல் உன்னுடைய "புரிந்துணர்வு" ஒன்றேதான்...

=========================

"கவிதை எழுத பழகவேண்டும் கண்ணே எனை வெறுத்துவிடு...! கண்ணீர் விட்டு அழவேண்டும் காதலே எனை மறந்துவிடு...

==========================

என் காதல் கைக்குழந்தை கண்ணீரில் விளையாட அடம்பிடிகின்றது...! வலியறியா பிஞ்சு உள்ளம் சோக வெள்ளத்தில் வடம்பிடிக்கின்றது....

==========================

எனக்கும் வேண்டும் இந்த கருமை நிற ஆடை....!
நிர்வாணம் நிவாரணம் கேட்கின்றது நிழலைப் பார்த்து...!

==========================

மரணிக்கத் தவறியதில் மகிழ்ச்சிதான், ஆனால் இதயம் மீண்டும் உன்னை நினைக்கபோகின்றதே.....! ஐயோ...
விழிகொண்டு உனை பார்த்த மறுநிமிடம் - யார் உளிகொண்டு செதுக்கியது உன்பெயரை என் மனதில்...?

=========================

அன்பே உன் விழிகாணும்போது... வைரமுத்து என்னருகே பேனாவுடன் - இல்லையேல் கண்ணதாசன் என்னருகே போத்தலுடன்....

=========================

நீ ஜெயிக்கும் வரை நான் தோற்கவே விரும்புகிறேன்... ஒரு வேளை..! நான் ஜெயிக்கும்போது நீ தோற்றுப்போனால் அதை என்னால் தாங்க முடியாது, ஏனெனில் நீ போட்டி போடுவது என்னுடன் அல்ல உன் வாழ்வுடன்..

=========================

"தோல்வியில்லாத வாழ்க்கை எங்கே இருக்கு....!
தோல்வியையே தோற்கடிப்பதில்தானே தனிக் கிக்கே இருக்கு..

=========================

"கண்ணீர் துளியில் கருவுற்ற கவிஞன் நான்,
உன்னிடம் சொல்லும்போது ஒரு சின்னப்புன்னகை,
இதைவிட என்னவேண்டும் எனக்கு என் வாழ்வில்...!
கண்ணீர் தந்தவளே என்றும் நன்றிகள் உனக்கு...

========================

என் நிலையறியா உன்னிடம்
என் மனம்புரியாப் பெண்ணிடம்
இனியும் காதல்வேண்டி நிற்பது,
பொருளற்ற கவிதையொன்றை
புலமையற்ற கவிதையொன்றை
போட்டிக்கு அனுப்புதல் போலாகும்..!

========================

"பனையோலை வேலியருகே தென்னோலை மறைவில் நின்று, என்னவளே நீ எனை எட்டிப் பார்க்கும்போது ... சிட்டாக பறக்குதடி என் சைக்கிள் மணல்பூத்த ஒழுங்கையிலே..." ~

========================

உன் கனத்த மனதிற்குள் கருவுற்று கிடக்கிறது என் காதல்குழந்தை.... கண்மணி நீ சிலையாய் இருந்தால் எப்படி உயிர்பெறும் என் கவிக்குழந்தை..!

========================

"ரோஸ் மீது நீர்த்துளி அழகுதான் என்பதற்காய் இந்த நிரோஸை அழவைத்துப் பார்ப்பது நல்லதல்ல"

=======================

பீப்.... பீப்.... பேஷ் புக் வண்டி வருது பீப்... பீப்.... நல்ல நட்பை நோக்கி போறவங்க எல்லோரும் ஏறுங்கோ.. ஏறுங்கோ.. பீப்.. பீப்..

======================

என் பேனா எனைப்பார்த்து கேட்கின்றது... இதெல்லாம் ஒருகவிதையென்று என்னைவைத்து எழுதுகின்றாயே...?

=====================

டீக்கடையில் டீ குடிக்கும்போது பூக்கடையில் பூவொன்று பூவாங்கிக்கொண்டிருந்தது, யாரின் காதலுக்கோ மலர்வளையம் வைப்பதற்காய்.. யார் அந்தப் பாவிப்பய புள்ளையோ..!

====================

‎"காதல் தோற்பதில்லை காதலர்கள் பிரிந்தாலும்..
காதலர்கள் ஜெயிப்பதில்லை கைகள் இணைந்தாலும்
கனத்த கண்ணீர் மழைக்குப்பின்பு என்காதல் வானிலை சற்று மாற்றமடைந்து காணப்படுகின்றது...!

==================

உனது outside அங்கம் பார்த்து வியந்துநிற்கும்
தென்றலுக்கும் மலருக்கும்
உனது inside இதயம் இரும்பென்று தெரியாதுபோல...!
காதல் இருகரம் நீட்டி எனை அழைக்கின்றது. அணைப்பதற்கா...?

==================
"அன்பு அன்னையினை அரவணைக்கும் பொறுப்பு நான்கொண்டேன்...
என்பிறப்பின் பொருள்கொண்ட பெறுபேறு நான் கண்டேன்..

==================

நண்பர்களே இந்த மொக்கை உங்களுக்கு பிடித்திருந்தால்.... ஓட்டுப்போட மறந்திடாதிங்க....!
நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.