கிரிக்கெட் சில்லறைகள் இந்தவாரம் - 27.08.2011

இங்கிலாந்துடடான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மோசனமான தோல்விகளை சந்தித்து தொடரை இழந்தபோதிலும் இத்தொடர் கடினமாக இருந்திருக்கவில்லை என்றும் நான் பந்துவீசுவதர்க்கு சச்சின் சிறந்த ஆலோசனைகளை தருகிறார் என்றும், இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த தெரிவித்துள்ளார்.

------------------------------------------------------------------------------------------------

20 மாதங்களாக இருந்து வந்த நம்பர் 1 இடத்தை இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இழந்திருக்கிறது, நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று போட்டிகளில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்து தொடரையும் இழந்ததாலேயே இந்திய அணி முதலிடத்தை இழந்திருக்கிறது. தற்பொழுது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------------------------

இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி சரணடைந்தமை மிகவும் வருத்தமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் காரி ஹேர்ச்டன் தெரிவித்துள்ளார். இவருடைய பயிற்ச்சியின்போதே இந்திய அணி உலக கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------------------------

தனது சொந்த மண்ணில் வைத்து வங்கதேச அணியை 3-2 என்ற அடிப்படியில் வெற்றிகொண்டு தொடரை கைப்பற்றியுள்ளது சிம்பாபே அணி. இறுதியாக நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியினர் வெற்றி பெற்றபோதிலும் கிண்ணத்தை சிம்பாபே அணி சுவீகரித்துள்ளது.

-------------------------------------------------------------------------------------------------

அவுஸ்த்ரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி வெளியிடப்படுள்ளது. இலங்கை அணி விபரம் தில்ஷான், குமார் சங்கக்கார, திலன் சமரவீர, தரங்க பரனவிதான, மஹேல ஜெயவர்தன, பிரசன்ன ஜெயவர்தன, அஞ்சலோ மதிவ்ஸ், சுராஜ் ரண்டீவ், ரங்கன ஹேரத், சுரங்க லக்மல், சன்னக வலகேதர, தம்மிக்க பிரசாத், சமிந்த இரங்க, லஹிறு திரிமன்னே, சீக்குகே பிரசன்னே, அஜந்த மெண்டீஸ்.

-------------------------------------------------------------------------------------------------

வருகின்ற டிசம்பர் மாதம் அவுஸ்த்ரேலிய செல்கிறது இந்திய அணி, அங்கு இந்திய அணியினருக்கு கூடுதல் பயிற்சி போட்டிகள் வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அவுஸ்த்ரேலிய கிரிக்கெட் சபையை கேட்டிருந்தது. எனவே இந்த வேண்டுகோளை பரீசிலனை செய்யும் என அவுஸ்த்ரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

-------------------------------------------------------------------------------------------------

வருகின்ற 25 திகதி சிம்பாபே செல்கிறது பாகிஸ்தான் அணி அத்தொடருடன் தான் விலகிக்கொள்ள போவதாக தற்போதைய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------

சச்சினின் 100 ஆவது சதம் இங்கிலாந்திலே பெறப்படும் என முன்னாள் இந்திய வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் அவர் சதம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவரால் துரதிஸ்டவசமாக பெறமுடியவில்லை எனினும் இடம்பெற இருக்கின்ற ஒருநாள் சர்வதேச போட்டிகளில் நிச்சயம் பெறுவார் எனவும் தெரிவித்தார்.

-------------------------------------------------------------------------------------------------

இந்திய அணியினரும் இந்திய கிரிக்கெட் வாரியமும் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரின்போது டெஸ்ட் போட்டிகளுக்கு சிறந்த முக்கியத்துவம் அளிக்காமல் போனதாலேயே இந்திய அணியினர் தொடரை இழக்க நேரிட்டது என சுழல் சாம்பவான் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------

தனது அணிக்காக உயிரை கொடுத்து விளையாட விரும்புவதாக முன்னாள் பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடி தெரிவித்துள்ளார், சில மாதங்களுக்கு முன்பு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் உடன் ஏற்பட்ட தகராறால் இவர் தான் ஒய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------------------------

இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்திருக்கும் இந்திய அணியினர் நடைபெற இருக்கின்ற ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை 4-0 எனும் அடிப்படையில் கைப்பற்றுமானால் ஒருநாள் தொடர் தர வரிசையில் இந்திய அணியினர் இரண்டாம் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

-------------------------------------------------------------------------------------------------

இலங்கை தனது சொந்தமண்ணில் வைத்து தொடரை இழந்துள்ளது. அவுஸ்த்ரேலிய அணியுடன் இடம்பெற்ற 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே இலங்கை அணியினர் வெற்றி பெற்றனர். இதனையடுத்து தொடரை அவுஸ்த்ரேலிய அணி 3-2 எனும் அடிப்படையில் கைப்பற்றி கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.

-------------------------------------------------------------------------------------------------

அவுஸ்த்ரேலிய அணியுடனான 5வது ஒருநாள் போட்டியில் தனது மூன்றாவது ஹேட்ரிக் சாதனை படைத்த இலங்கை பந்துவீச்சாளர் மலிங்க. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை ஹேட்ரிக் சாதனை படைத்த முதலாவது வீரர் எனும் புதிய உலக சாதனை படைத்தார்.

-------------------------------------------------------------------------------------------------

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணி தலைவர் தோணி, இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மீது குற்றம் சாடியுள்ளதோடு. இடம்பெற இருக்கின்ற ஒருநாள் தொடரில் நாங்கள் உலக சம்பியன் என நிருபிப்போம் எனவும் கூறியுள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------

இந்திய அணியினர் இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி கண்டமைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ஐ.பி.ல் போட்டிக்களுமே காரணம் என முன்னாள் இலங்கை அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------

இந்திய அணியின் சிறந்த வீரர் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் தனது 35 வது சதத்தை பெற்றதோடு டெஸ்ட் கிரிக்கெட் இல் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்தார்.

-------------------------------------------------------------------------------------------------

இந்திய அணியில் இளம் வீரர்களை உள்ளே சேர்த்துக்கொள்ள இதுவே சிறந்த நேரம் என இந்திய அணியின் முன்னால் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------

இந்திய அணியின் சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் கடந்த வருடம் பிரகாசிக்க தவறி கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறவேண்டாம் என நான்தான் அவரை வலியுறுத்தியதாக ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------

இடம்பெற இருக்கின்ற இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரில் ஏற்கனவே ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சேவக் விளையாடுவது சந்தேகமாக உள்ள நிலையில் தற்பொழுது மற்ற ஆரம்ப துடுப்பாட வீரரான கபீரும் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------------

இந்திய அணிக்கு உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த அணித்தலைவர் டோனிக்கு இங்கிலாந்தின் லைசெஸ்டர் பல்கழைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.

-------------------------------------------------------------------------------------------------

இங்கிலாந்து அணியினர் இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஆதிகிகம் செலுத்தி பிரகாசிப்பார்கள் என இன்ன்கிலாந்து அணியின் முன்னாள் பிரபல அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் இயன் பொத்தம் தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------

இந்தியாவுடனான ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அணியின் சிறந்த வீரரான ஹெவின் பீட்டர்சனுக்கு ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.
அணி விபரம் வருமாறு :
அலாஸ்டர் குக் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், இயான் பெல், ரவி போபாரா, டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், ஜடே டெர்ன்பேச், ஸ்டீவன் பின், கிரேக் கீஸ்வெட்டர், இயோன் மோர்கன், சமித் படேல், பென் ஸ்டோக்ஸ், கிரீம் ஸ்வான், ஜொனாதன் டிராட்.

Thanks to: Google, Cricinfo
-------------------------------------------------------------------------------------------------

நல்லது நண்பர்களே இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் ஓட்டுப்போட மறக்காதிங்க....!

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?