Posts

Showing posts with the label மொழி

கண்கள் சொல்லும் கவிதை...!

Image
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!! ஐயோ....!!! இனி நீ தூங்கும் வேளையில் துவண்டுவிடுமே என் கவிதையும்...! விழித்திரு... கவிதை கொடுத்திரு... காலமுள்ளவரை உன் விழிசொல்லும் கவிதையை திருடியபடி என் மொழிசொல்லும் கவிதையும்...!!! நட்புடன், நா.நிரோஷ்.

புத்த மொழி விழியாளே..!

Image
கொ ல்லாமை எனும் கொள்கை கொண்ட புத்தமொழி விழியாளே...! எனை நித்தம் கொன்று குவிப்பதேன்... ? கூரிய உன் விழியாலே... ??? அரபிமொழி போல அறியாமல் முழிக்கின்றேன்... அமுதமொழி தமிழ்மொழியாய் அரவணைக்க வருவாயா... ? இல்லை , ஆப்பு தந்தே செல்வாயா.... ??? நட்புடன், நா.நிரோஷ்.