என் வலைப்பூவை காண வந்திருக்கும் உங்களுக்கு என் நட்பின் வணக்கங்கள்...!!!

Saturday, June 2, 2012

நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் கேட்கிறது..!



நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் வேண்டுமாம் கைநீட்டுகிறது ஜன்னல் வழியே அதுதான் காதலை கவிதையாய் பொரித்து கொண்டிருக்கிறேன்..!

****
அழகே உனை ஆராதிக்க நேரமில்லை முடியுமானால் இன்று என்கனவில் வந்துவிடு #வேலைக்குபோகிறேன்.

****
விடுதலை வேண்டி வேண்டுமென்றே தவம புரிகின்ற கண்களுக்கு மீண்டும் உனை காண்பேனென்று எப்படி சொல்வேன்...!

****
இனி குடிக்கமாட்டேன் என்பவனை நம்பலாம் ஆனால் இனி கிரிக்கெட் மேட்சு பாக்கமட்டேன் என்பனை நம்ப முடியாது.. #அவதானிப்பு + கடுப்பு.


****
உன் கால்செருப்பு என்கன்னத்தை முத்தமிட்டபோதுகூட கலங்கியதில்லை நான், இன்று உன் நாய்க்குட்டியின் ஆத்மாக்காய் ஒப்பாரிவைக்கிறேன் #நாய்க்காதல்

****
சிறு காய்ச்சல் வந்து சொல்லிவிட்டு போகிறது அன்னை அருகில் இல்லை என்ற பெரிய குறையை...!

****
எட்டமுடியா உச்சம் நீ... வானை வட்டமிடும் நிலவு நீ... எனை திட்டமிட்டு கொத்திச்செல்லும் காதல் கழுகும் நீ...!

****
காதல் காய்ச்சல் கசக்கிறது வாழ்க்கை உன்விழியால் கொஞ்சம் புளிப்பார்வை பாரேன்....!

****
பப்பரப்பே என நீ விரித்துப்போட்ட உன் கூந்தலுக்குள் சிக்கிச்சீரழிகிறது என் பார்வைகள்...!

****
யாருமில்லா டைம்லைனில் என் கீச்சுக்கள் மட்டும் கூச்சலிடுகின்றன சுதந்திரமாய்....!

****
உனை நினைத்தாவறே இறக்கவேண்டும் அப்போதுதான் எமனுக்கும் புரியும் காதல்வலி..!

****
காலங்களில் எனக்கு கஷ்டகாலம் இஷ்டமாய் காதல் வந்து என்னோடு ஒட்டிக்கொண்டதால்..!

****
எங்கேயோ நீ உறங்குகிறாய் உனக்காய் இங்கு தாலாட்டு பாடுகின்றன என் கவிதைகள்...!

****
வெயில்கால வெள்ளரிப்பழமாய் பிளந்துகிடக்கிறது மனது நீ வந்து தாகம் தணிப்பதர்க்காய்...!

****
நிலாப்பழம் உண்கிறேன் உன்நினைவுகளோடு நான் வேச்சுலர் என்பதனால் #ந.நி.கீ.

****
அமலா பால் விழியாள்... அமுத தமிழ் மொழியாள்... எனை கிழிகிழியென கிழித்தாள்...!

****
மனதோடு மல்லுக்கட்டும் மங்கை உன் நினைவுகளை கவிதை மதுகொடுத்து உறங்கவைக்கிறேன்..! :)
நோ காமன்ஸ்
****
கவிதை பிசைந்த கையால் நிலவை விரட்டுகிறேன் நீயிருக்கும் திசைவந்து கொட்டிவிடும் என்பதனால்..!!!

****
காதல் சட்டை கிழிந்து கிடக்கிறது அன்பே உன் விழி ஊசி வேண்டி மௌனமொழி ஊசி வேண்டி...!

****
நட்புடன்.. நா.நிரோஷ்

Friday, June 1, 2012

முருங்கைக்காய் பார்த்தால் திருமண ஆசை வருகிறதா...? - வேச்சுலர்


புதருக்குள் நெளியும் புடையன் பாம்பாய்... உன் புருவம் கண்டவுடன் என் இதயம் மனதிற்குள்...!!!

****

என்ன சொல்கிறாய் ஏன் மெல்கிறாய் எதற்காய் கொல்கிறாய்...?..!!!

****
கடற்கரையில் காதல் பொதிசெய்த காமச்சோறு உண்கிறார்கள் இருவரும் மாறிமாறி #galleface #merina

****
சந்தையில் முருங்கைக்காய் திருமணத்தை நினைவுபடுத்துகிறது #வேச்சுலர்

****
பில்லி சூனியம் ஏவல் ஒன்று சேர்ந்த காதல் என்னோடு இப்போ மோதல்...:(

****

விளம்பரம் :- "நன்றியுள்ள நாய்கள் விற்பனைக்கு உண்டு, யாராவது மனிதர்கள் இருந்தால் அவர்களுக்கு இலவசம்"

****

குடிக்க வாட்டர் இல்லாக் காலங்களிலும் மேட்டரே இல்லாமல் குவாட்டர் கொடுப்பவன்தான் நண்பன்...! #குடிமொழி

****

இன்று எழுந்தவுடன் ராசிபலன் பார்த்தேன் கிழக்குத்திசை போகவேண்டாம் என இருந்தது. அடங்கொய்யாலே வாத்ரூம் அந்த திசையில்தானே இருக்கு..!

****

இன்று பார்த்த கோடூர காட்சி "ஒருத்தர் பருப்பு வடைய டீயில் தொட்டு சாப்பிட்டது"

****

"BATTLESHIP" படம் பார்த்தேன் இட்ஸ் அமேசிங் அட்வென்சர் ஆக்சன் பிலிம் அமெரிக்க பெருமை சொல்லும் படமும் கூட பாருங்கள் ரசிக்கலாம்..!


****

போறவளே பொண்ணுதாயி நான் வரல போதாயி போய் முதல்ல மொபைல் நம்பர் மாத்து தாயி...! #முடியல

****
குடியிருந்த கோயிலில் இடிவிழுந்ததாய் கலையிழந்து கிடக்கிறது காதல் மனது... உன் முட்டாள்தன முடிவு கேட்டு...!

****
பாவம் பசங்க என்று பெண்கள் அன்று நினைத்திருந்தால் இன்று இத்தனை வகை வகையான வசதிகள் வந்திராது ஆண்களுக்கு..! #அவதானிப்பு.

****

அன்பே நீ எனை பார்க்கும்போது "ஆசைய காத்துல தூதுவிட்டு" பாடல் கேட்பதாய் சொன்னாய்.. எனக்கென்னவோ "ஆடி அடங்கும் வாழ்க்கையடா" என்றே கேட்குது..

****

இப்போதே ஒரு நாய் வளர்க்கின்றேன் ஒருவேளை என் கல்லறைக்கு நீ வந்தால் உனை கடிக்கச்சொல்லி..! #காதல் கோபம்.

****

காரணம் இல்லாமல் கண்ணீர் வருகின்றதே மாயம் என்னவோ...? மங்கை உன் மறைமுக தாக்கமோ..? !!!

****

நிலவும் நானும் நீண்ட இடைவெளியின் பின் சந்திக்கின்றோம் இன்று நீ விடுமுறையில் உள்ளதால்....!

****

எனக்கென யோசிப்பதற்கு எஞ்சுகின்ற பொழுதுகளில் எல்லோரையும் விட மிஞ்சுகின்றது உன்னுடைய பொழுதுகள்..!

****

தூங்கச் செல்கிறேன் தாயாய் இருந்து தாலாட்ட காத்திருக்கும் A/C யை இயங்கச் செய்துவிட்டு... #gulflife

****
அழகாய் தெரிகிறது அனைத்தும் அன்பே உன் காதல் விழிகொண்டு பார்ப்பதனால்...!

****
நட்புடன் நா.நிரோஷ்

Wednesday, May 30, 2012

பல்லு இருக்கிறவங்க எல்லோரும் பவர்ஸ்டார் ஆக முடியாது..!


பல்லு இல்லாதவங்க எல்லாம் பக்கோடா சாப்பிட முடியாது... பல்லு இருக்கிறவங்க எல்லாம் பவர்ஸ்டார் ஆக முடியாது..!

கண்ணீர் துடைக்கும் கைகளுக்கு தங்கஆபரணங்கள் தேவையில்லை, அவை என்றும் மதிக்கப்பட வேண்டியவைதான்...!

****

பூங்காற்று திரும்புமா பாடல் கேட்கிறேன் பாலைவனப் புளுதிக்காற்றில் நின்றபடி...!

****

மொக்கைகள் முட்டிமோதும் டுவிட்டரில் எட்டியிருந்து புதினம் பார்கிறேன் என்றாவது நானும் வித்தை காட்டலாம் என்றபடி....!

****

டுவிட்ஸ் பூக்கள் பூக்கும் டுவிட்டர் தோட்டத்தில் அலுவலக ஆணிகள் ஆடுகளாய் அனைத்தையும் நாசப்படுத்துகின்றன.....:(

****

முணுமுணுத்த நாய்க்கு முத்த பிஸ்கட் கொடுத்துவிட்டு ஓட்டின்மீது ஏறி ஒழுகிய மழையாய் உள்நுழைந்தேன் - களவானி

****

கண்ணுக்குள் நூறு நிலவு வேண்டாம் ஒரு நிலவுக்கே இழவு போகுதே...:(

****

ஏதேனும் நுளம்பு வந்து உன் தூக்கம் கலைக்கிறதா.. அது என் கவிதை படித்துவிட்டு வந்திருக்கிறது போலும்...!

****

தூக்கமாத்திரை போட்டும் துயில முடியவில்லை உன் துப்பட்டாவில் சிக்கித்தவிக்கும் என் நினைவுகளால்..!

****

நிலவு வந்து கேட்டால் நான் இல்லையென்று சொல்லுங்கள்.... ஒரே தொல்லையப்பா கவிதைகேட்டு....!


ஆணிகள் அவதரிக்கும் பகல் பொழுதுகளில் அன்பே உன்னினைவே சுத்தியல்....!

வண்டுகள் வந்து வரிசையில் நிற்கின்றது ஒரு புன்னகை சிதறிவிடு பிழைத்துப்போகட்டும் அவைகள்...!

****

இருள் சூழ்ந்த நேரம் கவிதை நிலவுகள் தயார்செய்கிறேன் கண்ணே உன் அருள் வேண்டி....!

****

பஞ்சாயத்தில் பஞ்சு பஞ்சாய் பறக்கிறது நம் காதல், அஞ்சுதமே அடியேன் உன்பின்னால் வந்ததால..!

****

காந்த மைகொண்டு கவிதை எழுதுகின்றேன் உன் இரும்பு மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ள..!

அழியும் நிலையில் அவதாரங்கள் கடவுள்கள் என்ற ஆதாரங்கள்..:(

****

மலர்கள் தூவிய சாலைகள் எங்கும் மனதில் காதலுடன் நடப்பதால்....!

****

நீ திரும்பி பார்த்து சிரிக்கும் ஒவ்வொரு தடவையும் வேண்டும் என்றும் மனம்

****

தத்தி தாவிச்செல்லும் தாவணிப் பூவே.. ஆணிகள் இன்றி அலுப்பெடுத்த கைகள் உன்னைப்பற்றி கவிதை கிறுக்குதே...!

****

காண கண்கள் இல்லாமல் ஏங்கித்தவிக்கும் என் கவிதைகளுக்கு எப்படி சொல்வேன் இந்நேரம் நீ குறட்டை விட்டு தூங்குவாய் என்று..!

****

கண்ணீர் நெருப்பில் எத்தனை முறை கழுவினாலும் காதல் தங்கம் திரும்ப திரும்ப மின்னுகிறது..!

****

நட்புடன் நா.நிரோஷ்

ஐ.பி.எல் போட்டியும் ஆபாச ஆட்டமும்...!


பட்டப்பகலில் மொட்டைமாடியில் வட்டநிலா... காயப்போட்ட உன் துப்பட்டா திருடுவதற்காய்...!

****

வேலை நாட்களில் வருகின்ற தூக்கம் விடுமுறை நாட்களில் எங்கே செல்கிறதோ தெரியல ஒரு ஆணிகூட இல்ல அலுப்பாக உள்ளது...!

****

ஒன்றுமட்டும் நன்றாக புரிகிறது மேற்குஇந்தியாவில் முண்டா பணியன் நல்ல மலிவு போல.. #AusvWI

****

சின்னஞ்சிறு வயதில் ஏதோ கிறுக்கியிருந்தேன்... அதை இப்போது மொழிபெயர்த்தேன் "நான் உருப்படவே மாட்டேன்" என்று இருந்தது... சோ சாட் :((

****

மரத்த வச்சவன் மட்டுமில்ல மதுவ வச்சவனும் தண்ணி ஊத்துவான்...:!

கன்னமேனும் உண்டியலில் கண்ணீர் சேமிக்கிறேன் காதலில் அதிகம் சில்லறை வலிகள் வரும் என்பதனால்...!

****

ஐ.பி.எல் இல் அடித்தாடும் வேகத்தைப்போல அவிழ்தாடும் வேகமும் அதிகமாத்தான் இருந்தது.....!

****

வெண்ணிறாடை மூர்த்தியாய் உதடு ரெண்டும் ம்ம்ப்புறும் இசைக்கின்றது அன்பே உன் அழகுச்சாயம் பார்த்தவுடன்...!

****

மிட்டாய் தொலைத்த சிறுவனாய் அழுகிறது கைபேசி அன்பே உன் அழைப்பின்றி போனதால்...:((

****

நீ அவரவிட அவ்வளவு அழகு... "ஹேய் எண்ணங்க சத்தம்..?" ஒண்ணுமில்லைங்க குளிக்கும்போது ஒரு காகம் எட்டிப்பர்க்குது...

****

நீயே மனதை ஆட்டையபோட்டாய் அதில் ஓட்டையபோட்டாய் பின் காதல் வீட்டையே கட்டினாய் இப்போ இடித்துவிட்டு போகிறாய். நான் என்ன அவ்வளவு இழித்தவாயனா?

உள்ளம் உள்ளாடை போன்று தூய்மையாக இருக்கவேண்டும் இல்லாவிடின் நாறிபோய்விடும்..!

****

ஒருவேளை இந்திரன் சந்திரனும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களோ இப்படி மழைவந்து தடைசெய்கிறது..? #IPL5 #matchfixing

****

உன் கால்கள் வந்து கலைக்குமென்றால் காயும் நெல்லாய் காத்துக்கிடப்பேன்....

****

மலிங்க விழியாள் வீசிய பார்வை மனதை அடியோடு பிடுங்குதே..! கமல்ஹாசன் மொழியாள் பேசிய வார்த்தை புரியாமல் விழி பிதுங்குதே..!


மான் கண்ட சிங்கம் பயம் கொள்வதில்லை மன் மோகன் சிங் வாய்திறப்பதில்லை..!

****

தொலையச்சொல்லி தொல்லை தருகின்ற இதயத்திற்கு ஓர் எச்சரிக்கை திரும்பிவர நினைத்தால் பிச்சுப்புடுவேன் பிச்சு..!

****

மனக்கூடை வழியாக நிரம்பி வழிந்த காதல் கடைசியில் மதுக்கடையில் மல்லுக்கட்டுகிறது...:)

****

அன்பே நீ என்னிடம் கடைப்பிடிக்கும் மௌனத்தை ஆசிரியரிடம் கடைப்பிடித்தேன் அடிக்கவருகின்றார் அப்போ நான் அவ்வளவு பொறுமை வாதியா..?

****

நட்புடன் நா.நிரோஷ்.

Tuesday, May 29, 2012

நடுநிசி நாயும் நானும்...! (கவிதை)

நிலா முகில் எழில்

தென்னோலை தென்றல் மெல்லிசை

நடுநிசி நாய்க்கூட்ட ஊளை

அத்தனையும் அழகாய் அரங்கேறும்

இரவுநேர இன்பப்பொழுதில்

ஏன் என் உறக்கம் மட்டும்

துன்பப் போர்வைக்குள்

துவண்டுகிடக்கின்றது...?

****

நனவுகளின் வலி அதிகரித்து

கண்கள் கடிகார முட்களோடு

குங்க்பு சண்டையிடுகின்றன...

எங்கு தேடியும் கிடைக்காத

பொருளில் தமிழில்

கைகள் கவிதை எழுத துடிக்கின்றன...

****

விளங்கவும் முடியாமல்

விளக்கவும் முடியாமல்

விரல்கள் விளக்கை

ஏற்றியும் அணைத்தும்

விளையாடி மகிழ்கின்றன...

****

சுவற்றுப் பல்லியும்

சுற்றிமுற்றி பார்த்துவிட்டு

என்னிடம் வால் காட்டுகின்றது...

என்னிலமை இந்நிலைமை

பெண்ணிலமை கண்டு

பேதலித்ததால் வந்ததோ....

ஒரு சொல் சுட்டு

என்வாழ்க்கை வெந்ததோ....!!!

****

என்றும் நட்புடன் நா.நிரோஷ்