Posts

Showing posts with the label சோகம்

இனி விடியும் நல்ல பொழுது....!

Image
காதலி நிலவிற்கு...! உனைநித்தம் நினைத்து நிழலாய் போன நிஜக்காதலன் எழுதிக்கொள்வது...! இது நானாக எழுதும்கவிதை அல்ல, உன்முகம் அழகென்ற அனுதினமும் அலட்டிக்கொண்ட என் இரு கண்களும் எனைஇரங்கி வேண்டியதால் இந்த இறுதி மடல்.....! நீயொரு அதிசய மலரென்று - உனைநித்தம் நினைத்து நாள்தொறும் ஆயிரம்கவிதைகள் கிறுகியஎன் கைவிரல்கள் எனை கைதொழுது வேண்டியதால் இந்த இறுதி மடல்...! காரணம் என்னவோ நானறியேன் கண்மணி நீ எனைவெறுத்ததற்கு....? ஆதலால் தினமும் துடிக்கின்றேன் நித்தம் உனைமறப்பதற்கு...! சுகமான உன் கனவில் தொலைந்துபோன என்உறக்கங்கள் இன்றுவலியான கண்ணீரில்மூழ்கி தத்தளிக்கின்றன..! உண்ணும் உணவன்றி வேறொன்றும் தொடவில்லையடி என் உள்ளத்தை உன்நினைப் போன்றைத்தவிர....! ஏனோ இன்று உண்ணும் உணவும் என் உள்ளத்தை தொடமறுக்கின்றது உன் உள்ளத்தைப்போல...! உன்முதல் சந்திப்பிலே மீண்டும் பிறந்தேன் முழுவதும் மறந்தேன் முகிலோடு பறந்தேன் முற்றும் துறந்தேன் இன்று முதல் முறை இறந்தேன்...! என்னுயிர் நீ எனைவிட்டு போனபின்பும் உயிரான காதலை உதறித்தள்ளி எறிந்தபின்பும் உன்நினைவு தேடி என்உள்ளம் பறப்பதுஞாயம்தானோ? நிலவென்று உனைஉரைத்ததற்கு...

காதல் குருடன்....!

Image
வெளிச்சம் நிறைந்த பகலில் வெண்ணிலா எப்படி வரும்...? நான் மூடனா...? இல்லை குருடன்...! காதல் குருடன்...! அதனால்தான் என் காதல் வெண்ணிலவை பகலிலும் தேடுகின்றேன்...!!! ++++++++++++++++++++++++++ உன்னோடு நானிருந்த கணங்கலேல்லாம்... பிணங்களாய் ஆனபின்பு, உன்கரம் பற்றித்திரிந்த என் கைகள், கிறுக்குப் பிடித்தபடி ஏதோ கிறுக்கி அலைகின்றது....! என் தனிமையின் தவிப்புகளை கவிதையாய் மாற்றியபடி....!!! "உங்கள் நட்பின் ஓட்டுக்களால் என் கவிதைகள் மேலும் பூக்கட்டும்" நட்புடன், நா.நிரோஷ்.

எல்லாம் மாறிப்போயின....!!!

Image
உன் கண்கள் காணாத என் கண்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை எனக்கு....! உன் திசையறியாத என் கால்கள் முடமாகி முடங்கிக் கிடக்கின்றன....! உன் பெயரில்லா என் கவிதைகள் பொருள்தேடி புலம்பி அலைகின்றன...! வாடிய பூக்களில் வசந்தம் கண்ட கைகள் மலரும் பூக்களை மரணிக்கச்செய்கின்றன...! எல்லாம் மாறிப்போயின எனக்கு என்னவள் எனைவிட்டுப் பிரிந்து போனதால்...! ஆனால் இன்னும் இதயம் அவள் பெயர் சொல்லியே இயங்கிக்கொண்டிருக்கின்றது....!!! "நீங்கள் போடுக்கின்ற ஓட்டுகளில் பூப்பதர்க்காய் காத்திருக்கிறது எனது அடுத்த கவிதை" அன்புடன், நா.நிரோஷ்.

உன் நிழலே தஞ்சம்....!

Image
தொலைந்த இடத்திலேயே தொலையச்சொல்லி தொல்லை தருகின்றது - என் காதல் நெஞ்சம்....!!! +++++++++++++++++++++ கருணை பாராமல் காலால் மிதித்து கொன்றுவிடுகிறது உனது கல்நெஞ்சம்...!!! +++++++++++++++++++++ சொன்னாலும் கேட்காமல் கொன்றாலும் தோற்காமல் அடம்பிடிக்கின்ற இதயத்திற்கு என்றும் உன்நிழலே தஞ்சம்...!!! நா.நிரோஷ்.

காதல் கல்வியும் தரும் கல்லறையும் தரும்...!

Image
நாலுவரி கவிதை எழுத முனைந்து நான் பட்ட துயரம் என்ன சொல்ல...? பேனா காகிதத்தை கொன்றுகுவித்து குப்பைத்தொட்டியில் வீசிக்கொண்டிருந்தது....! கடைசியில் உனைப்பார்த்தேன் காதல் கொண்டேன்.... காகிதம் பேனாவை முத்தமிட்டது கவிதை பிறந்தது நான் கவிஞன் ஆனேன்... காதல் பெருமை சேர்த்தது என் தமிழுக்கும் தமிழாசிரியைக்கும் காதலியுங்கள் கவிஞன் ஆகலாம்...! காதல் கல்வியும் கற்றுத்தரம் கல்லறையும் கட்டித்தரும்...! கவனம் மக்கா....! நா.நிரோஷ்.