Posts

Showing posts with the label தவிப்பு

உன் நினைவால் கருவுற்றேன்...!

Image
கா தல் வரம் கிடைத்தும் இன்னும் தனிமையில் தவம் கிடக்கிறேன் உனை கரம பிடிக்கும்வரை....!!! நீ கவிதைகள் எழுதியே காலம் கடத்துகிறாய்....! நான் கனவு கண்டே நாட்களை நகர்த்துகிறேன்...!!! இனிமையும் கொடுமையும் இஷ்டம்போல் விளையாடும் தனிமையில்.... என்ன கஷ்டம வந்தாலும் உன் நினைவுகளால் கருவுற்ற காதல் குழந்தையை சுமந்தபடி என் காத்திருப்பு தொடர்கிறது...!!! ************************************** அன்பின் நண்பர்களே தங்கள் வாக்குகளை வீசி விடுங்கள் என் கவிதைகள் கண்டுகொள்ளும்.... நட்புடன், ந.நிரோஷ் .

மஞ்சள் வெயிலாய்....!

Image
என்றும் சொல்லாமல் தாக்கும் சுனாமியே...! ஒன்றும் சொல்லாமல் கொல்லும் சுந்தரியே...! என்கனவில் வெண்பனியாய் பொழிகின்றாயே...! விழித்தெழும்முன் முன்பனியாய் கரைகின்றாயே...! என்விழிமீது ஒளிக்கீற்றாய் பறக்கின்றாயே...! என்மொழிமீது கவிக்கூற்றாய் பிறக்கின்றாயே...! ஆனால், நீயோ.... இன்னும் மொழியின்றி மௌனமாய் தவிக்கின்றாயே...!!! மஞ்சள் வெயிலாய் கன்னம் சிவந்த முகிலாய் முன்னே வர முனைகின்றாயே...! விரைவில், வெயில் கண்ட நிழலாய் மறைகின்றாயே...! வந்துசெல்லும் அலையாய் வந்து வந்து செல்கின்றாயே....! எபோதும் சிலையாய் என்முன்னே நிற்க்கின்றாயே..!!! "நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்" நட்புடன், நா.நிரோஷ்