முதல் அனுபவம்..(18+)சும்மா பில்டப்பு...!
முதல் அனுபவம் எனக்கு
அந்த நேர்முகப்பரீட்சை
தோல்வியுற்றதால் ஒரு சிறு கவலை
காத்திருந்தேன் பஸ்ஸிற்காய்
கனநேரமாய்...!
ஒரு சோலை சேலையணிந்து
சாலையோரமாய் வந்துகொண்டிருந்தது
தவறுதலாய் ஒருமுறை
பார்த்த கண்கள் மீண்டும்
தவறுசெய்ய முனைந்தன..!
அவள் அழகு அப்படி...!
வேலைபோன வேதனையில்
வாடியிருந்த கண்கள்
அவள் அழகால் பூக்க ஆரம்பித்தது...!
உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை
ஒருவித இனந்தெரியா மயக்கம் என்
உள்ளத்திலும் சிறு நிலநடுக்கம்...!
அதுவரையில் காதல் பூகம்பம்
கண்டிராத இதயச்சுவர் மெல்ல மெல்ல
இடிய ஆரம்பித்தது...!
கண்டவுடன் காதலா என்
பழைய வினாவொன்றிற்கு
விடையும் கிடைத்தது...!
அந்தச்சோலையில் காதல்கனி பறிக்க
தயாரானேன் தயங்கி நின்றபடியே...!
அப்போது நான் இப்படி
அரைகுறை கவிஞனல்ல
கற்பூரம் அறியாக் கழுதை...!
அருகில் வந்தால் அழாகாய் சிரித்தாள்...!
செய்வதறியாது திகைத்துநின்றேன்
கற்பனையில் இனிப்புச்சாப்பிட்டு
காத்திருந்த பஸ்ஸும் எனை
கடந்துபோனது தெரியாமல்..!
எல்லா ஊர்க்கடவுளையும்
ஒருமுறை வேண்டிவிட்டு
உற்சாகமாய் சொல்லமுயன்றேன்
உனை எனக்கு பிடித்திருக்கேன்று....!
முந்திய அவள் முதலில் கேட்ட வார்த்தை
"முதல் முறையா..?"
என்காதல் அவளுக்கு புரிந்ததுவிட்டது
எனும் என்புரியமையால்,
ஆமாம் என்றேன்....!
இரண்டாவதாய் இரு வார்த்தை கேட்டாள்..
"இருநூறு ரூபாயும் இடமும் இருக்கா..?" என்று....
இடி இறங்கியது என் தலையில்...!
என் கண்முன்னே என் இதயம் வெடித்து
சிதறியதுபோல ஒருஉணர்வு
விலகியோடி வீடுதிரும்பினேன்...!
கையில் காசு இல்லையே
எனும் கவலையுடன்...
சேலை போனதற்காய் அல்ல
என் வேலை போனதற்காய்...!
எல்லாமே சிரிப்புக்குத்தன்..
சீரியசா ஒன்னும் இல்லைங்கோ...
"கடுப்புடன் போனாலும் உங்கள் ஓட்டுக்களை குத்திவிட்டு போங்க"
நட்புடன்,
நா.நிரோஷ்.
அந்த நேர்முகப்பரீட்சை
தோல்வியுற்றதால் ஒரு சிறு கவலை
காத்திருந்தேன் பஸ்ஸிற்காய்
கனநேரமாய்...!
ஒரு சோலை சேலையணிந்து
சாலையோரமாய் வந்துகொண்டிருந்தது
தவறுதலாய் ஒருமுறை
பார்த்த கண்கள் மீண்டும்
தவறுசெய்ய முனைந்தன..!
அவள் அழகு அப்படி...!
வேலைபோன வேதனையில்
வாடியிருந்த கண்கள்
அவள் அழகால் பூக்க ஆரம்பித்தது...!
உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை
ஒருவித இனந்தெரியா மயக்கம் என்
உள்ளத்திலும் சிறு நிலநடுக்கம்...!
அதுவரையில் காதல் பூகம்பம்
கண்டிராத இதயச்சுவர் மெல்ல மெல்ல
இடிய ஆரம்பித்தது...!
கண்டவுடன் காதலா என்
பழைய வினாவொன்றிற்கு
விடையும் கிடைத்தது...!
அந்தச்சோலையில் காதல்கனி பறிக்க
தயாரானேன் தயங்கி நின்றபடியே...!
அப்போது நான் இப்படி
அரைகுறை கவிஞனல்ல
கற்பூரம் அறியாக் கழுதை...!
அருகில் வந்தால் அழாகாய் சிரித்தாள்...!
செய்வதறியாது திகைத்துநின்றேன்
கற்பனையில் இனிப்புச்சாப்பிட்டு
காத்திருந்த பஸ்ஸும் எனை
கடந்துபோனது தெரியாமல்..!
எல்லா ஊர்க்கடவுளையும்
ஒருமுறை வேண்டிவிட்டு
உற்சாகமாய் சொல்லமுயன்றேன்
உனை எனக்கு பிடித்திருக்கேன்று....!
முந்திய அவள் முதலில் கேட்ட வார்த்தை
"முதல் முறையா..?"
என்காதல் அவளுக்கு புரிந்ததுவிட்டது
எனும் என்புரியமையால்,
ஆமாம் என்றேன்....!
இரண்டாவதாய் இரு வார்த்தை கேட்டாள்..
"இருநூறு ரூபாயும் இடமும் இருக்கா..?" என்று....
இடி இறங்கியது என் தலையில்...!
என் கண்முன்னே என் இதயம் வெடித்து
சிதறியதுபோல ஒருஉணர்வு
விலகியோடி வீடுதிரும்பினேன்...!
கையில் காசு இல்லையே
எனும் கவலையுடன்...
சேலை போனதற்காய் அல்ல
என் வேலை போனதற்காய்...!
எல்லாமே சிரிப்புக்குத்தன்..
சீரியசா ஒன்னும் இல்லைங்கோ...
"கடுப்புடன் போனாலும் உங்கள் ஓட்டுக்களை குத்திவிட்டு போங்க"
நட்புடன்,
நா.நிரோஷ்.
Ok
ReplyDelete