நடுநிசி நாயும் நானும்...! (கவிதை)
நிலா முகில் எழில் தென்னோலை தென்றல் மெல்லிசை நடுநிசி நாய்க்கூட்ட ஊளை அத்தனையும் அழகாய் அரங்கேறும் இரவுநேர இன்பப்பொழுதில் ஏன் என் உறக்கம் மட்டும் துன்பப் போர்வைக்குள் துவண்டுகிடக்கின்றது...? **** நனவுகளின் வலி அதிகரித்து கண்கள் கடிகார முட்களோடு குங்க்பு சண்டையிடுகின்றன... எங்கு தேடியும் கிடைக்காத பொருளில் தமிழில் கைகள் கவிதை எழுத துடிக்கின்றன... **** விளங்கவும் முடியாமல் விளக்கவும் முடியாமல் விரல்கள் விளக்கை ஏற்றியும் அணைத்தும் விளையாடி மகிழ்கின்றன... **** சுவற்றுப் பல்லியும் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு என்னிடம் வால் காட்டுகின்றது... என்னிலமை இந்நிலைமை பெண்ணிலமை கண்டு பேதலித்ததால் வந்ததோ.... ஒரு சொல் சுட்டு என்வாழ்க்கை வெந்ததோ....!!! **** என்றும் நட்புடன் நா.நிரோஷ்