Posts

Showing posts with the label நட்பு

நிலா உங்களுக்கு எப்படி..? ஒரு சுவை விருந்து.

Image
ஐயோ..... இந்த நிலா படும் பாடு இருக்கே சொல்லமுடியாதுங்க அம்புட்டு அநியாயமும் இந்த அம்புலிக்கு நடக்குதுங்க. யார் யார்தான் இதற்க்கு சொந்தம் கொண்டாடுவது என்று ஒரு அளவே இல்லேங்க..! பிள்ளைக்கு சோறு ஊட்ட நிலா... ஆயாவிற்கு வடை சுட நிலா.. அண்ணனுக்கு சாயா போட நிலா... காதலுக்கு தூதுவனாய் நிலா... கவிஞனுக்கு கருப்பொருளாய் நிலா... மப்புக்கு ஊறுகாயாய் நிலா... மாப்புக்கு மருமகனாய் நிலா... விஞ்ஞானிக்கு ஆராய்ச்சியாய் நிலா... விவசாயிக்கு விளைச்சலாய் நிலா... பூசாரிக்கு பூஜைக்கு நிலா... பூமிக்கு இரவுநேர ஒளியாய் நிலா... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்க. என்னதான் மனிதன் வளர்ச்சி பெற்றாலும், நிலா என்பது ஒரு கிரகம் என்பது பற்றி தெரிந்திருந்தாலும், இன்றும் மனிதனின் உணர்வுகளோடு ஓட்டியிருந்து ரசிப்பதாக நிலா இருந்துகொண்டேதான் இருக்கின்றது. குழந்தைக்கு அம்மா சோறூட்ட நிலாவை காட்டுவதில் நியாம் இருக்குங்க. குழந்தை நிலா பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் இந்த காதலர்கள் நிலாவோட அடிக்குற கூத்து இருக்கே அம்மா தாங்கமுடியலைட சாமி (இங்க வேற என்னாவாம்). நேரில் சொல்ல பயந்துபோய் தோழியாய், தோழனாய் நினைத்து எல்லாவற்றையும...

என் யன்னல் நிலவே..!!!

Image
என் யன்னல் நிலவே.. என்னவள் கனவில் வருவாளென்று நேற்றிரவு நேரத்துடன் தூங்கிவிட்டேன்... சூரியனிடம் சொல்லி எனைச் சுட்டுவிடாதே...! ************************************************** என் முற்றத்து மல்லிகையே... அன்பானவளின் அழகிய புன்னகைகண்டு உனை நான் காணவில்லை நாளை மலராமல் நின்று எனை வாட்டிவிடாதே...! ************************************************** என் இரவுக் காற்றே... அவள் சுடிதார் பட்டு சிதறிய கற்று என் சுவாசக்காற்று ஆனதனால் எனைத்தழுவும் இன்பக்காற்று நீ எனை தவிக்கவிட்டுச் செல்லாதே...! ************************************************** கூவுகின்ற குயிலே... என் மயிலின் குரல் வயலின் போன்றதுதான் அதற்காய் உன் தாலாட்டின்றி எனை தூங்கச்சொல்லாதே...! ************************************************** பக்கத்துவீட்டு சுட்டியே... அழகுப்பெண்மை அவளை நான் பார்கபோகும் அவசரத்தில் அழகுபொம்மை உனைநான் பார்க்கத் தவறிவிட்டேன் உன் பிஞ்சுமுத்தம் இல்லையென்று எனை கொன்றுவிடாதே...! ************************************************** என் குட்டிச்சுவரே... பாவை போகும் இடம்தேடி பாதம் நாட ச...

வாழ்த்த நீ இல்லை....

Image
வார்த்தைகள் இல்லை வாழ்த்த நீ இல்லை.... இமைகள் எப்படி சுமைகள் தாங்கும் எங்கிருந்து உறக்கம் வாங்கும்.....? என் ஊமை விழிகளில் வழிகின்ற துளிகளில் என்றும் நம் நட்பு ஓவியங்களாய்....!!! காவியங்களாய்...!!! நா.நிரோஷ்