கிங்கிணி கிழங்குக்கடை : பூஜா ஹில்மா படம் படுத்தியபாடு..! (இளந்தாரிகளுக்கு மட்டும்)
கிங்கிணி : வா சகோதரம்.. கடலை சாப்பிடுறாயா..? சகோதரம் : வேணாம் அண்ணே.... எனக்கு பசிக்கல.... கிங்கிணி : போப்பா உனக்கு கடலையும் சாப்பிட தெரியா.... கடலையும் போடா தெரியா...! சகோதரம் : சும்மா போங்க அண்ணே கடுப்பேத்தாம....! கிங்கிணி : என்ன சகோதரம்....? முகம் வாழைக்குலை போல தொங்குது...? சகோதரம் : ஒண்ணுமில்ல அண்ணே, மனசு சரியில்ல...! கிங்கிணி : என்ன மனசு சரியில்லையா...? அடியே யாருக்கிட்ட ரீல் விடுற...? சகோதரம் : கிண்டல் பண்ணாதீங்க அண்ணே.. நானே மனசு ஓடைஞ்சு போயி இருக்கன்..! கிங்கிணி : என்னப்பா சொல்லுற.. என்ன நடந்திச்சு...? காலையில நேரத்தோட எழும்பித்தாயா...? சகோதரம் : இல்லை அண்ணே... கிங்கிணி : காலையில பியருக்கு பதிலா, காப்பிய..கீப்பிய குடிச்சு தொலைச்சயா..? சகோதரம் : இல்லை அண்ணே... கிங்கிணி : நைனா ஏதும் திட்டாம மாமுல் தந்தாரா..? சகோதரம் : இல்லை அண்ணே... கிங்கிணி : மொளிச்சவுடனேயே மூஞ்சிபுத்தகத்தில முழிக்காம விட்டாயா..? சகோதரம் : இல்லை அண்ணே.... கிங்கிணி : ஐயோ என்னடா நடந்திச்சு... பரிட்சையில ஏதும் பாஸ்பண்ணி தொலைச்சிதாயா...? ...