உன் நிழலே தஞ்சம்....!

தொலைந்த இடத்திலேயே
தொலையச்சொல்லி
தொல்லை தருகின்றது - என்
காதல் நெஞ்சம்....!!!

+++++++++++++++++++++

கருணை பாராமல்
காலால் மிதித்து
கொன்றுவிடுகிறது
உனது கல்நெஞ்சம்...!!!

+++++++++++++++++++++

சொன்னாலும் கேட்காமல்
கொன்றாலும் தோற்காமல்
அடம்பிடிக்கின்ற இதயத்திற்கு
என்றும் உன்நிழலே தஞ்சம்...!!!



நா.நிரோஷ்.

Comments

  1. உன்னை போல் இன்னும்
    யாரையும் கண்டதில்லை
    நீ பேசும் மழலைக்கு முன்
    எதுவும் உயர்வில்லை

    செல்லமே உன்னை கொஞ்சி அழைத்திடவே
    பல பெயர்களை தேடினேன்
    செல்லமாய் என்னை நீ அழைப்பது போல்
    என்னம்மா கூட கொஞ்சியதில்லை

    உறக்கத்திலும் புன்னகையால் மலரும் உன்னை காணவே
    இரவெல்லாம் விழித்திருப்பேன்
    முத்தமிட்டு என்னை எழுப்பும் சுகத்திற்காகவே
    விடிந்தும் இமை மூடி நடிப்பேன்

    இதழ் விரித்து சிரிக்கையில்
    இன்று பூத்த மலர்களும் தோற்றுபோனது
    உடல் முறித்து எழுகையில்
    உலகதிசயங்களும் உன் காலில் சாய்ந்தது

    யோசித்து யோசித்து கொஞ்சி கொஞ்சி
    நீ பேசும் வார்த்தைகளில்
    மழை பொழியும் இன்னிசையும் இனிமையிழந்து போனது
    முகம் சுளித்து கைகளை கட்டி நீ கோபம்கொள்கையில்
    சுடும் நெருப்பும் தணிந்தது

    என்ன தவம் செய்தேனென்று
    இன்றுவரை தெரியவில்லை
    மொத்த அழகும் உன்னில் சங்கமித்த ரகசியமும்
    இன்றுவரை புரியவில்லை

    உலகமே உன் பின்னால் வரும்போதும்
    உன் நிழலாய் வாழ்ந்திட வேண்டும்
    உலகமே என் கையில் சரணடைந்தாலும்
    உன் அன்புக்கு உரித்தானவளாய் என் வாழ்நாளை கழித்திட வேண்டும்

    ReplyDelete
  2. பெண்ணுக்குள் கருவை வைத்து,
    கருவுக்குள் விந்தை வைத்து,
    விந்தை செய்பவன் இறைவன்!

    வாழும் போது,தானும் வாழ்ந்து,
    பிறர் வாழ வழித்தேடி
    உதவி செய்பவன்,மனிதன்!

    பிறர் வாழும் வாழ்வை பிடிக்காமல்,
    பிடித்தது போல நடித்து,
    வாழ்பவன் வஞ்சகன்!

    ஏழ்மையில் ,ஏணியாய் நின்று,
    சோகத்தில் நிமிர வைத்து,
    சந்தோசம் கொள்பவன் நண்பன்!

    நான் சிரிக்கும் போது, தானும் சிரித்து,
    நான் அழும்போது தானும் அழுவும்,
    நண்பனே உலகத்தின் சிறந்தவன்!

    இறைவன் தந்த உயிர் இது,
    வஞ்சகம் வந்தால், தடுத்து நிறுக்கும்,
    நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !

    ReplyDelete
  3. மனிதனாக பிறந்து,
    மரத்தை இழந்து
    மழையை இழந்து,
    உலகத்தை மாசுபடுத்தும்,
    நிலையில் நானும்
    இருப்பதைக் கண்டு,
    வெட்கப்படுகிறேன்,
    தடுக்க நிலை அறியாமல்.
    வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?

    தீவிரவாதத்தில்,தீவிர வாதத்தில்,
    இருந்து ,மனிதனே, மனிதன் கொல்லும்
    நிலை அறிந்தும், தடுக்க நிலை அறியாமல்,
    வேதனையில் நான்,மீண்டும் எனக்கு
    வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?

    மதம்,சாதி, என்றும்,மொழி வெறி கொண்டும்,
    அலைகின்ற மனித மிருகத்தோடு
    வேதனையோடு,விரக்தியோடு
    வாழும் நிலை இருந்து,
    தடுக்க நிலை அறியாத நிலையில் ,
    வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?

    துறவு துகில்வுரிக்கும்
    நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
    போடும் அரசியல் வாதிகள்,
    அறிந்தும்,தடுக்கமுடியவில்லை,
    தவறு என்று தெரிந்தும்,
    தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
    நானுமிருந்தும்,தவறாய் போகும்
    உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
    கண்டு கேட்கிறது மனம் ,
    வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?என்று !

    ReplyDelete
  4. அணு தினமும்,வந்துபோவாள்,
    அன்பால்,அணைத்து.
    அக்கறையுடன் நான்
    கரை சேர துடிப்பாள்.
    இயற்கை தந்த மரணத்திலும்,
    மறையமால் எனது மனதில்
    இருப்பாள்,நான் வளர வாழ்த்துவாள்.
    இவளே அழியாத நிஜம் !
    நிழலுமாய் என்னோடு நடப்பாள்,
    நிலவாய் வழிக் காட்டுவாள்.
    ஒவ்வொரு துளிகளிலும்,
    கலந்து இருப்பவளே
    எனது அம்மா.
    இவளே அழியாத நிஜம்,
    மறையாத இனம்.
    எனது வரலாறு
    இவள் பக்கம் பேசும்,
    இவள் இல்லாமல் நானில்லை
    என்பதை சொல்லும்!

    ReplyDelete
  5. பிறந்த குலம்,
    திரண்ட செல்வம்,
    புறஅழகு,
    மார்க்கப்பற்று
    எனும் அகஅழகு
    என நான்கு
    தகுதிகளை
    அளவுகோலாகக்
    கொண்டு,
    ஒரு பெண்
    உலக வழக்கில்
    மணமுடிக்கப்
    படுகிறாள். நீ
    மார்க்கப் பற்றுள்ள
    பெண்ணைத்
    தேர்ந்தெடுத்து
    ஈடேற்றம் அடைந்து
    கொள்......................

    ReplyDelete
  6. மீண்டுமொருமுறை

    உன்னை

    நினைவுப் படுத்தாதேயென்று

    எச்சரிக்கும் கணங்களிலும்

    உள்நெஞ்சுக்குள்

    உதித்தெழுகிறது

    உன்முகம்...!

    உறக்கம் வராத

    நள்ளிரவு நேரமெங்கும்

    உன்னை மறக்க துடித்தும்

    என் இதயம் வழியே

    நினைவை உமிழ்ந்து

    உதடுகளும் உச்சரிக்கிறது

    உன் பெயரை...!

    குருதிக் குழாய்களுக்குள்

    குறுக்கு நெடுக்குமாய்

    பாய்ந்துக் கொண்டிருக்கிறது

    இதயத்திற்குள் நிரம்பி வழிந்த

    உன் நினைவுகள்...!

    ReplyDelete
  7. எனதான எல்லா அசைவுகளிலும்
    உனதான நினைவுகள்தான்
    பூக்களாய் மலர்கின்றது...

    என் வேலைத்தளத்திலும்
    என் தனிமையிலும்
    என் மனசுக்குள் பம்பரமாய்
    நீ சுழன்று கொண்டிருக்கிறாய்
    ஒரு நிழற் படமாய்
    நீ அடிக்கடி என்னை சந்தித்து போகிறாய்...


    ஆறாமல் வேதனை தரும்
    சில காயங்களை
    கவிதையில் இறக்கி வைக்க
    பேனாவையெடுத்தால்
    உன்னைப் பற்றியதான
    வார்த்தைகள்தான் வருகின்றது
    ஆக,உன்னைத் தவிர
    வேறொன்றையும் என்னால்
    எழுத முடியவில்லை.

    என் பாதையில்
    பாவையொன்று நடந்து போகும் சத்தம்
    நீ நடந்து செல்லும் சத்தமாய்
    என் காதுகளுக்கு கேட்கிறது
    வந்து பார்த்தால்
    எவர் எவரெல்லாம் போகின்றனர்
    ஆனால்,நீ மட்டும் வருவதாயில்லை
    எதிர்பார்ப்புக்களுடன் ஓடி வந்த நான் ஏமாந்து போவேன்
    இப்போதுகளில்
    என் அக,புற தோற்றங்களில்
    உன் விம்பங்கள்தான் காட்சியாய் விழுகிறது...

    இத்தனைக்கும் காரணம்
    நீ நிலவைப் போல்
    தூரமாய் இருந்த போதும்
    நினைவுகளால் தினம் தினம்
    என்னை தழுவுகிறாய்...

    ReplyDelete
  8. நிலா நனைந்த இரவில்
    நிழலாய்ப் போன
    உன் தரிசனங்களாலே
    ஊமையாகிப் போன
    நேசக் குயிலொன்று
    நினைவுகளை மீட்டிக்கொண்டு
    முகாரி இசைக்கின்றது…!

    உலர்ந்த உதடுகளுடன்
    உருக்குலைந்த உள்ளத்துடன்
    உறக்கம் தொலைத்த விழிகளுடன்
    வானத்தை வெறித்தபடி…

    சின்னக் கண்ணுக்குள்
    சிறுகச் சிறுகக் கட்டிய
    சின்னஞ் சிறு ஆசையெல்லாம்
    சிந்தி விழும் கண்ணீரோடு
    சிதறுண்டு கரைய…

    ஏதோ தொலைந்து போனதாய்…
    இல்லை இல்லை
    எதையோ தொலைத்து விட்டதுவாய்…
    சோகம் முட்டி மோதி
    தொண்டை வரை சிக்கிக் கொள்ள
    உனை திக்கெங்கும் தேடுகிறேன்…!

    ReplyDelete
  9. வரண்டு போன பூமி
    வானத்தைப் பார்த்து
    ஏங்குவது போல்…

    தத்தெடுப்பார் யாருமின்றி
    தனித்துப் போய்
    உன்னையே எதிர் பார்த்து
    வதங்கிச் சாகிறது இதயம்…!

    உன் நினைவுகளை எல்லாம்
    மூட்டை கட்டி
    வலிந்து முயன்று
    வெளியே தள்ள முயன்றும்
    தோற்றுப் போய் விட்டேன்…!

    உயிரே…!
    ஓர் உண்மை சொல்லேன்
    இப்போதும்
    நீ என்னை நேசிக்கிறாயா…?

    உன் மௌனப் பாஷைகளால்
    மரண வேதனை தரும் வலியை
    தொடர்ந்தும் எனக்குத் தராதே…!

    என் அழுத விழியின் ஓரத்தில்
    குளிர்ந்து விழும் பனித்துளியாய்…

    உன் மௌனங்களை உடைத்தெறிந்து
    மறுமொழி ஒன்று சொல்லி விடு…!

    ReplyDelete
  10. நிஜமான நேசம் கொண்டு
    உனை நெஞ்சார நேசித்தேன்…!

    நீதான்
    உண்மையான நேசம் தன்னை
    உணராமல் செல்கின்றாய்…!
    அது போலவே
    எட்டி இருந்தபடியே
    உன்மேலான
    பிரியங்களை எல்லாம்
    என்றும் பிரியாமல்
    என் நெஞ்சுக்குள்ளேயே
    வளர்த்துக் கொள்கிறேன் நான்…!

    ReplyDelete
  11. கடந்து சென்ற காலங்களின்
    அனுபவப் பயணங்கள் யாவும்
    வெறும் காயங்களாகி
    உள்ளே அணைந்து அணைந்து
    எரியும் ஞாபகங்களாய்…

    பணம் பூத்துக் குலுங்கும்
    மரமாய் பூத்துக் குலுங்கி
    கல்லெறி பட்டுப் பட்டு
    காயங்கள் மட்டுமே மிஞ்ச…

    முகம் தொலைத்த
    மனித முகங்களோடு
    தினம் புண்ணாகித் தவித்து
    மனசு இறுகி
    உதடுகளில் ஓசை தொலைத்து
    ஏதோ ஓர் வலித்த புள்ளியில்
    திசை தெரியாமல் நின்றபோது…

    அன்பாய், பாசமாய்
    நட்பாய், காதலாய்
    இவை எல்லாம் கலந்து…

    உள்ளம் திறந்து
    உள்ளன்போடு நீ உதிர்த்த
    ”கலங்காதே நான் இருக்கிறேன்”
    என்ற அந்த ஒற்றை வார்த்தை
    மரணித்துப் போன
    என் உணர்வுகளுக்கெல்லாம் ஒத்தடமானது…!

    ReplyDelete
  12. Ahamed Yahya Hrowapothana


    உனக்கு பிடித்த மண்வாசத்தில்
    நீயும்
    எனக்கு பிடித்த உன்வாசத்தில்
    நானும்
    ஒற்றை குடைக்குள்
    விரல்கள் கோர்த்து
    மெளனித்து நடக்கிறோம்.
    விரல்களின் ஸ்பரிசத்தில்
    வலுக்கிறது காதல்மழை.

    உன் நட்பெனும்
    சிறையில்லா கூண்டில்
    சிறகில்லா பறவை நான்!..
    விடுதலையாக விருப்பம் இல்லை,
    இந்த உலகை விட
    உன் நட்பு பெரியதானதால்..


    கண்ணீரை துடைப்பது
    உன் விரல்கள் என்றால்
    அழுகை கூட ஆனந்தம்தான்...

    அழுவதற்கு ஆசை
    அரவணைப்பது நீ என்பதால்...

    உன்னால் ஏற்படும்போது
    சோகம் கூட சுகமானது
    சுகம் சுகந்தமானது...

    என் மனம்
    ஆனந்தமடைந்தது
    வாழ்த்து அட்டைக்கு
    அல்ல!
    கொடுத்தது நீ
    என்பதால்...


    வாழ்க்கை என்ற நந்தவனத்தில்
    வாழுகின்ற காலத்தில்
    பூத்துக் குலுங்கும் புஷ்பங்கள்
    மகிழ்ச்சி என்ற பூக்களே!

    கவலை என்ற வெயில் பட்ட
    காலமதில் வாடினாலும்
    மகிழ்ச்சி என்ற மழைத் துளியால்
    மறுபடியும் உயிர் பெறும்

    சுற்றுகின்ற சக்கரமாய்
    சுழலுகின்ற வாழ்க்கையிலே
    பூக்கின்ற பூக்களுக்கும்
    சோதனைகள் பல்லாயிரம்

    பூக்கள் என்று பிறந்துவிட்டால்
    மகிழ்ச்சி என்ன சோகம் என்ன
    மாறிமாறி வந்தாலும்
    ஆயுள் காலம் அற்பமே!


    Ahamed Yahya Hrowapothana

    ReplyDelete
  13. Ahamed Yahya Hrowapothana
    நித்தமும் உன் நினைவில் என்றாய்..
    என்னுயிருக்குள் ஊடுருவிச் சென்றாய்..
    நீயின்றி என் வாழ்வில் நிழலேது??
    நானின்றி உன் வானில் நிலவேது??
    காதல் மை ஊற்றி உள்ளமெழுதும்..
    மடலென்றும் முடிவதில்லை..!!
    காகிதத்துள் காதல் அடங்குவதுமில்லை!!
    உன்னையே உலகமாய் கொண்ட
    உன் ஜீவன்.......

    ReplyDelete
  14. Ahamed Yahya Hrowapothana
    திருத்திவிட முடியும்

    எழுத்து பிழையைப் போல்

    சரிசெய்ய பார்க்கிறேன்

    நமக்குண்டான பிணக்குகளை …



    வார்த்தைகளை விட்ட பிறகு

    வலுவிழந்து போகும்

    உணர்வுகளை போல

    உள்ளத்தில் ஒரு வெற்றிடம்

    நீ இல்லாமல் …..........................யஹ்யா,,,,,,,,

    ReplyDelete
  15. Ahamed Yahya Hrowapothana
    மனிதனே!
    ஒரு காசு தந்தவனையும்,
    ஒரு போதும் மறக்காத நீ..
    எண்ணிலா அருள் தந்தவனை
    எங்ஙனம் மறக்கின்றாய்.

    அழுகின்ற பிள்ளையை
    அணைக்கின்ற நீ,
    அல்லல் படுவோரை
    அழிப்பது சரிதானா?

    பயிர்ச்செய்கையில்
    களையகற்றும் நீ,
    நன்மையை ஏவிக் கொண்டே
    தீமையைப் புரியலாமா?

    தடுக்கி விழுந்தவனைத்
    தூக்கி விடும் நீ,
    வீழ்ந்த சமூகத்தை
    மிதிப்பது சரி தானா?

    இறைவன் தந்த வாழ்வை
    இயற்கை மறுப்பதில்லை.
    இலக்கு இல்லாத வாழ்வை
    இறைவன் ஏற்பதில்லை.

    முஸ்லிமே!
    சொல்லிலும் செயலிலும்
    இஸ்லாத்தைக் கலப்போமே.
    சமூக உறவிலே,
    சகோதரத்துவத்தை வளர்ப்போமே
    .
    மனித சட்டங்களின் இடத்திலே,
    இறை சட்டங்களை வைப்போமே..
    இஸம்களின் ஆட்சியை விட்டு விட்டு
    இஸ்லாமிய கிலாபத்தை நட்டுவோமே.

    மக்களே!
    நீங்;கள் கட்டுப்படும் சட்டங்கள்
    இஸ்லாமான பின் பாருங்கள்..
    இருள்கள் நீங்கி, ஒளி பரவியதை..
    தீமைகள் மங்கி , நன்மைகள் ஓங்கியதை..
    குழப்பங்கள் குறைந்து,அமைதி கூடியதை..
    தீய சமூகம் மறைந்து,
    தூய சமூகம் உதிப்பதைக் காண்பீர்கள்.

    நீரில்லாமல் உயிர் வளருமா?
    காற்றில்லாமல் உயிர் வாழுமா?
    அழைப்பில்லாமல் சமூகம் மாறுமா?..
    ஆட்சியில்லாமல் இஸ்லாம் பூரணமாகுமா?.

    இருள்கள் நீங்க.. ஓளி வேண்டுமே!
    இஸம்கள் ஒழிய.. கிலாபத் வேண்டுமே!

    வாருங்கள் நண்பர்களே வாருங்கள்..
    வல்லவன் அல்லாஹ்வின் பால்
    அழைப்போம் வாருங்கள்..
    வள்ளல் நபியின் வழியில்
    அழைப்போம் வாருங்கள்..

    மயிலாடக் கண்டு
    மகிழ்வதைப் போல்..
    சமூகத்தைப் பார்த்து
    சந்தோஷப்படும் நாளை..
    .
    குயில் பாடக் கேட்டு
    குதூகளிப்பதைப் போல்..
    தினச் செய்தியால்
    சந்தோஷப்படும் நாளை,

    ReplyDelete
  16. Ahamed Yahya Hrowapothana
    நிலா நனைந்த இரவில்
    நிழலாய்ப் போன
    உன் தரிசனங்களாலே
    ஊமையாகிப் போன
    நேசக் குயிலொன்று
    நினைவுகளை மீட்டிக்கொண்டு
    முகாரி இசைக்கின்றது…!

    உலர்ந்த உதடுகளுடன்
    உருக்குலைந்த உள்ளத்துடன்
    உறக்கம் தொலைத்த விழிகளுடன்
    வானத்தை வெறித்தபடி…

    சின்னக் கண்ணுக்குள்
    சிறுகச் சிறுகக் கட்டிய
    சின்னஞ் சிறு ஆசையெல்லாம்
    சிந்தி விழும் கண்ணீரோடு
    சிதறுண்டு கரைய…

    ஏதோ தொலைந்து போனதாய்…
    இல்லை இல்லை
    எதையோ தொலைத்து விட்டதுவாய்…
    சோகம் முட்டி மோதி
    தொண்டை வரை சிக்கிக் கொள்ள
    உனை திக்கெங்கும் தேடுகிறேன்…!

    ReplyDelete
  17. Ahamed Yahya Hrowapothana
    புகழ் எதிர்பார்க்காதது நட்பு,
    சுயநலம் தெரியாதது நட்பு,
    தலைக்கனம் இல்லாதது நட்பு

    குழந்தையில் விளையாடிட நட்பு,
    இளமையில் குறும்புகள் செய்திட நட்பு,
    முதுமையில் கலந்துரையாடிட நட்பு

    உனக்கு உறவாக வாழ்வது நட்பு,
    உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு,
    உனக்கு உறுதுணையாக நிற்பது நட்பு

    உன்னை மனிதனாக்குவதும் நட்பு,
    உன்னை உணரவைப்பதும் நட்பு,
    உன்னை உயர்த்துவதும் நட்பு

    நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு,
    தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு,
    குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு

    உன் நண்பர்களை புரிந்துகொள்,
    நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
    துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
    நட்பு மூலமாக.....

    ReplyDelete
  18. Ahamed Yahya Hrowapothana
    எங்கோ பிறந்தோம்! எங்கோ வளர்ந்தோம்!
    அனைவரும் இங்கே!

    சந்தித்துக் கொண்டோம்!
    இதயத்தை நட்பால்
    பரிமாறிக் கொண்டோம்!

    முகங்களைப் பற்றி
    யோசித்ததுமில்லை!

    இனம் பணம் பார்த்து
    நேசித்ததுமில்லை!

    எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
    ஏமாற்றங்கள் சிறிதுமில்லை!

    அவரவர் கருத்துக்களை
    இடம் மாற்றிக்க கொள்வோம்!

    பாரட்டுக்களை
    பரிமாறிக் கொள்வோம் !

    சின்ன‌ சின்ன‌
    ச‌ண்டைக‌ள் இடுவோம்!

    சீக்கிர‌த்திலேயே
    ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

    கவலைகளை
    கிள்ளி அறிவோம்!

    ReplyDelete
  19. Ahamed Yahya Hrowapothana
    மலர்ந்த மலரானது இறக்கும் வரை
    அதன் வாசனை
    மலரைவிட்டு நீங்குவதில்லை....

    இதயத்தில் மலர்ந்த நட்பு
    இதயம் இறக்கும் வரை
    இதயத்தைவிட்டு நீங்குவதில்லை.....

    ReplyDelete
  20. Ahamed Yahya Hrowapothana
    பூக்கும் பூக்கள் எல்லாம்
    கிளைகளுக்குச் சொந்தமில்லை...

    மரத்தில் இருந்து உதிர்ந்தப் பின்னால்
    இலைகளுக்கு முகவரி இல்லை..

    இறுக கட்டியணைத்தாலும்
    கடுகளவு காற்று கூட
    கைகளில் தங்குவதில்லை...

    வாரியிறைந்தப் பின்னால்
    மழைத்துளிகள் வானம் தேடுவதில்லை...

    விழுந்தப் பின்னால் வார்த்தைகள்
    உதடுகளுக்குத் திரும்புவது இல்லை...

    ReplyDelete
  21. Ahamed Yahya Hrowapothana
    பார்த்து பழகவில்லை
    பரிந்து பேசினோம்.

    அழுது கொள்ளவில்லை
    சிரித்து மகிழ்ந்தோம்.

    சிந்திக்க மறக்கவில்லை
    சிந்தித்தே மலர்ந்தோம்.

    புரிந்து கொள்ள மறுத்துவிட்டோம்
    உணர்வகளை........அதனால்
    பிரிந்து விட்டேன்.

    உன்னிடம் இருந்து.
    உடல் மட்டுமே.

    நினைவுகள் அல்ல................

    ReplyDelete
  22. Ahamed Yahya Hrowapothana
    அன்பாக பேசினால் அழகு
    பண்பாக நடந்தால் அழகு
    பணிவாக இருந்தால் அழகு
    அடக்கமாக நடந்தால் அழகு

    அறிவு கூடினால் அழகு
    உழைப்பால் உயர்ந்தால் அழகு
    கடமையைச் செய்தால் அழகு
    கவலையை தொலைத்தால் அழகு

    நம்பிக்கை நினைத்தால் அழகு
    நன்மைகள் செய்தால் அழகு
    உண்மையை பேசினால் அழகு
    எளிமையாய் இருந்தால் அழகு

    எண்ணங்கள் உயர்ந்தால் அழகு
    இருப்பதை காத்தல் அழகு
    இல்லாததை பெற்றால் அழகு

    ReplyDelete
  23. hamed Yahya Hrowapothana
    குழந்தை அழகு
    பொது இடத்தில் மானத்தை வாங்காத வரை

    தென்றல் அழகு
    புயலாய் மாறாத வரை

    நட்பு அழகு
    சுயநலம் இல்லாத வரை

    பெண் அழகு
    நல்ல குணம் இருக்கும் வரை

    ஆண் அழகு
    வீரம் உள்ள வரை

    உறவு அழகு
    உண்மையாய் இருக்கும் வரை

    தீபம் அழகு
    கொள்ளியாய் மாறாத வரை

    நட்சத்திரம் அழகு
    எரிநட்சத்திரமாய் மாறாத வரை

    இயற்கை அழகு
    சீற்றம் கொள்ளாத வரை

    கடல் அழகு
    வேகம் வராத வரை

    ReplyDelete
  24. Ahamed Yahya Hrowapothana
    உன்னுடன் பேசிவிட்டு

    உடனே மறந்துவிடுகின்றேன். ஆனால்,

    உன்னுடன் கோபம் கொள்ளும் நேரங்களில்

    நாள் முழுவதும் உன்னையே

    நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

    அதனால்தான் என்னவோ உன்

    கோபங்களை மிக ரசிக்கிறேன்....!!!

    ReplyDelete
  25. Ahamed Yahya Hrowapothana
    வேதனை நிறைந்த பயணத்திலே,
    வாழ்க்கை சாய்கிறது சாலையிலே,
    ஜோடி சேர்ந்த பறவைகள்
    வாடிப் பிரிகின்றது பாதியிலே,

    மூடிக்காணும் க‌ன‌வினிலே
    மூச்சு முட்டிப் போகின்ற‌து
    மூடி வைத்த‌ காத‌ல் தான்
    முள்ளாய் வ‌ந்து வ‌தைக்கின்ற‌து.

    சோத‌னைய‌ற்று அநாதையான‌
    சோத‌னையில்லாப் பாலைவ‌ன‌மாய்
    வேத‌னைக‌ள் கொண்டு வாழ்கின்ற‌து
    சோக‌ம் கொண்டு ஒரு ஜீவ‌ன்.........

    ReplyDelete
  26. Ahamed Yahya Hrowapothana
    நட்பு

    பூக்கள் என்பது
    உதிரும் வரை

    இரவு என்பது
    விடியும் வரை

    உறவு என்பது
    பேசும் வரை

    பிரிவு என்பது
    இணையும் வரை

    நட்பு என்பது
    உயிருள்ள வரை

    ReplyDelete
  27. Ahamed Yahya Hrowapothana
    பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
    கிடைத்தபின் பிடிப்பதில்லை.

    ***********************************

    கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
    பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

    ************************************

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
    நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.

    ************************************

    நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
    நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!

    *********** யஹ்யா ****************

    ReplyDelete
  28. Ahamed Yahya Hrowapothana
    நீ நினைத்திருக்கலாம்
    நான்
    அதுபற்றி கதைக்காமலே
    இருந்திருக்கலாம் என்று…!
    ஒரு வகையில் நீ
    நினைப்பது சரியாகப்
    பட்டாலும்…!
    ஒருவகையில் நான்
    பேசியதும் சரியாகத்தான்
    படுகின்றது….!
    ஒருவகையில் அது
    விழிச் சந்திப்புகளில்
    வெளிப்பட்டிருக்கலாம்…!
    அது புனிதமானது
    புனிதத்தின் நிழலைக்கூட
    தீண்டும் தகுதி எனக்கில்லை
    நீ….
    இத்துணை ஆண்டுகளில்
    நான் கண்டெடுத்த அழகு
    பொக்கிசம்…!
    நானாக நினைத்தாலும்
    உன்னை இழக்கும்
    சக்தி…
    எனக்கில்லை…!
    இருந்தாலும்…
    விளக்கைக் காதலித்து
    அதன்நூடே மரணிக்கும்
    ஈசல் வாழ்க்கை
    என்னுடையது….!
    கடலைப் பார்த்திருப்பய்…!
    எத்துணை முயன்றாலும்
    கரைகடக்க முடிவதில்லை அதனால்
    அலை கரை கடக்கும்
    வரையுமே
    அதனை இரசிக்க
    ஒண்ணும்…
    கரைகடந்த
    அலை – ஆழிப்பேரலை
    நீயும் நானும்
    சுற்றமும் சேர்ந்து
    காணாமல் போய்விடுவோம்.
    சிறு தென்றலாய்….
    மர ஸ்பரிசங்களை
    வருடிச்செல்லத்தான்
    உரிமை உண்டு
    எனக்கு – அதன் கனிகளை
    திருடிச்செல்ல அல்ல…!
    ஆக…,
    நாளை மரணிக்கும்
    ஈசல் எங்கே…?
    நாளும் ஒளிதரும்
    வெண்ணிலா
    நீ எங்கே..?
    நீயும் நானும் அதுவும்
    சுற்றிக்கொண்டிருப்போம்
    அது…
    அதுவாகவே இருக்கும்
    நீயும் நானும் தான்
    மாற வேண்டும்…!!!
    மாறுதல் மாற்றமாக
    மட்டுமல்ல
    புரட்சியாகவும்
    இருக்கலாம்….!

    ReplyDelete
  29. Ahamed Yahya Hrowapothana
    திரும்பி வருவோம் என்ற அதீத
    நம்பிக்கையில்தான் ஒவ்வொரு
    முறையும் காற்று மண்டலம்
    நுரையீரல் தொடுகின்றது….
    முட்டி மோதி முளைத்து
    தளைப்போம் என்ற
    நம்பிக்கையில்தான் விதைகள்
    மண்ணுள் மூழ்கி தற்கொலையுறுகின்றன…
    ஒவ்வொரு மாலையிலும் தொலைத்த
    சூரியனை, எப்படியும் கண்டுபிடிக்கும்
    நம்பிக்கையில் தான் – தினமும்
    பூமி அந்தரத்தில் சுழன்று தேடுகின்றது…
    இன்றில்லாவிடிலும் என்றாவது
    ஒருநாள் எனை நீ உணர்வாய்
    எனும் அதீத நம்பிக்கையில் தான் உன்
    நினைவுகள் தாங்கி இன்னும் வாழ்கிறேன்…

    ReplyDelete
  30. Ahamed Yahya Hrowapothana
    ஏதேதோ கோபங்கள்
    நியாயமில்லாத காரணங்கள் -
    ஒவ்வொரு நாளும்
    என்னைவிட்டு
    மௌனமாய் நீ
    பிரிந்து செல்கிறாய்..!

    ReplyDelete
  31. Ahamed Yahya Hrowapothana
    நற்பு என்பது நமது
    ஆரோக்கியம் போன்றது...
    அதை இழந்த பிறகுதான்
    அதன் அருமையை
    உணர்வோம்......

    புத்தகம்தான்
    நம்முடன் பேசும்
    மௌன நண்பர்கள்.

    எந்த ஒரு
    காயத்திற்கும்
    நண்பன் மருந்தாவான்..
    ஆனால் நண்பன்
    ஏற்படுத்தும் காயத்திற்கு
    மருந்தே இல்லை...

    உன் நண்பனுக்கு
    எதை வேண்டுமானாலும்
    விட்டுக்கொடு...
    ஆனால் நண்பனை
    மட்டும் விட்டுக்
    கொடுக்காதே.......

    வாழ வைப்பவன்
    இறைவன்..வாழத்
    தெரிந்தவன் மனிதன்..
    விழ வைப்பவன்
    துரோகி தூக்கி விடுபவன்
    நண்பன்....

    உரிமை கொண்டாடும்
    உறவை விட
    உறவைக்கொண்டாடும்
    நட்பே சிறந்தது...

    நேசித்து பாருங்கள்
    முடியவில்லை என்றால்
    பிறர் நேசிப்பதை
    யோசித்து பாருங்கள்

    நீ செல்லும் பாதையெல்லாம்
    உன் நிழல் வருகிறதோ இல்லையோ
    நான் வருகிறேன்!

    நட்பிற்கு எல்லையே இல்லை
    உன் வார்த்தைகளை நான்
    தட்டுவதே இல்லை
    கத்தியோடு நீ ஓடி வந்தாலும்
    கத்தாமல் பார்த்திருப்பேன்

    ...................................அந்த நண்பரை
    இதோ மேலே பார் ...நான் காண்கிறேன்
    நினமும்........

    ReplyDelete
  32. Ahamed Yahya Hrowapothana
    அலைகள் என்றால்..
    ஆனந்தம் எனக்கு..
    அலைகள் மட்டுமல்ல..
    அன்பே நீயும் தான்..

    ஆதலால்..
    அலையும் நீயும்..
    ஒன்றுதான் எனக்கு..

    அருகில் வரும்போது..
    ஆனந்தத்தில் மூழ்குவேன்...
    விலகிச் செல்லும் போது..
    விரக்தியில் மூழ்குவேன்.

    ReplyDelete
  33. Ahamed Yahya Hrowapothana
    உன்னை
    மலர் என்றால் மாலையோடு வாடிவிடுவாய்!

    உன்னை
    நிலவென்றால் நித்திரையோடு நின்றுவிடுவாய்!

    உன்னை
    வான்மேகமென்றால் காற்றோடு காணமல் போய்விடுவாய்!

    உன்னை
    முத்தென்றால் நீலக்கடலில் மூழ்கிவிடுவாய்!

    அதனால் தான் உன்னை என் மூச்சாக நினைக்கிறேன்
    என் மூச்சுள்ளவரை

    ReplyDelete
  34. Ahamed Yahya Hrowapothana
    என் முதலெழுத்து ...!
    உயிர்...மூன்றெழுத்து...!
    உயிர் தந்த அன்னை ...மூன்றெழுத்து...!
    அன்னை காட்டிய அன்பு ..மூன்றெழுத்து...!
    அன்பினால் உருவாகும் ..கனிவு ,மூன்றெழுத்து...!
    கனிவினால் உருவான பணிவு..மூன்றெழுத்து...!
    பணிவு ஆல் உண்டான ..தகுதி ..மூன்றெழுத்து...!
    தகுதியால் வந்த திறமை மூன்றெழுத்து...!
    திறமையினால் நான் அடைந்த பதவி..மூன்றெழுத்து...!
    பதவியினால் நான் செய்யும் கடமை ..மூன்றெழுத்து...!
    கடமையினால் எனை அடையும் வெற்றி...மூன்றெழுத்து...!
    வெற்றியினால் கிட்டும் புகழ் ..மூன்றெழுத்து...!
    இந்த மூன்றெழுத்தில் எல்லாம் நான் என்ற ஈரெழுத்து இருக்க காரணம் ஆன
    என் நண்பன் நீயே என்றும் என் (உயிர்) முதலெழுத்து...!

    ReplyDelete
  35. Ahamed Yahya Hrowapothana
    பெண்ணே நி...இரைப்பையையும்
    நம்பிக்கையும் காலியாகவிடாதே
    ஒரு நாளும் சோர்ந்து விடாதே
    இழப்பு என்பது எதுவுமேயில்லை
    உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை
    கர்வம் வை கிராம் கணக்கில்
    நம்பிக்கை வை கிலோ கணக்கில்

    நம்பிக்கை இல்லாத இடம்
    ஒன்றே ஒன்றுதான் கல்லறை
    தண்ணீருக்கு அடியில் சென்று
    ஓவியம் வரைய முடியாது

    ReplyDelete
  36. Ahamed Yahya Hrowapothana
    புறப்படு உன் புத்துணர்ச்சியோடு
    நடந்திடு உன் நம்பிக்கையோடு
    கைப்பையை வீட்டில் மறந்து
    விட்டுப் போனாலும் பரவாயில்லை
    நம்பிக்கையை வீட்டிலே
    வைத்து விட்டுப் போகாதே

    நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
    நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு

    நம்பிக்கை இருப்பவனால்
    தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
    நம்பிக்கை அற்றவனுக்கு
    வெளியிலேயே மூச்சுத்திணறும்

    உன் வலிமைகளை,
    திறமைகளை முயற்சிகளை
    உன்னை நீயே நம்பாவிட்டால்
    யார்? உன்னை நம்புவார்கள்

    நம்பிக்கை என்பது நமக்கு
    நாமே குடிக்கும் தாய்ப்பால்
    அதைத் துப்பி விடாதே

    நம்பிக்கை என்பது நமக்கு
    நாமே செய்யும் ஆயுள்
    காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே

    ஒருவனுடைய புகழின் அளவு
    என்பது அவன் இதயத்தில்
    உள்ள நம்பிக்கையின் அளவைப்
    பொறுத்தே ஏறும் குறையும்

    சிறந்த வியாபாரிகளை
    உருவாக்குவது அவர்கள் அடைந்த
    நம்பிக்கைத் துரோக நஷ்டங்கள்

    சிறந்த வெற்றியாளர்களை
    உருவாக்குவது அவர்களை நசுக்கிய
    அசுரத்தமான தோல்விகள்

    நம்பிக்கையே இல்லாமல்
    யார் வாழக் கூடும்
    நம்பிக்கையால் வாழ்ந்தால்
    அட யார் வாழ்க்கை வாடும்

    சந்தேகம்தான் தீயை வைக்கும்
    நம்பிக்கைதான் உறம் வைக்கும்
    ஒவ்வொரு விடியலையும்
    நம்பிக்கையோடு எதிர்கொள்
    ஒவ்வொரு இரவிலும்
    நம்பிக்கையோடு உறங்கப்போ

    மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
    நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது
    ஓட்டைப்படகு ஓடிந்த துடிப்பு கரை சேரலாம்
    கடல் போல் நம்பிக்கை இருந்தால்

    நீ அடுத்தவர் மீது கொண்ட
    நம்பிக்கை என்பது காசோலை
    நீ உன் மீதே கொண்ட
    நம்பிக்கை என்பது நீஅணியும் தங்ககொழுசு

    நம்பிக்கைகளை எண்ண
    அலைகளாக மாற்று அதில்
    புதிய லட்சியங்களை
    ஏவுகணைகளாய் ஏற்று

    காந்தத்திலிருந்து மின்சக்தி
    வருவது மாதிரி
    நம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எ
    ண்ண அலைகள் வரும்

    போராட்டமே வாழ்க்கை
    நம்பிக்கையே வெற்றி
    நம்பிக்கை சிறு நூல்தான்
    ஆனால் அந்த நூலில் கட்டி
    காற்றாடியை அல்ல
    கற்பாறையையும் பறக்கவிடலாம்

    பெண்ணே நிஷா...இரைப்பையையும்
    நம்பிக்கையும் காலியாகவிடாதே
    ஒரு நாளும் சோர்ந்து விடாதே
    இழப்பு என்பது எதுவுமேயில்லை
    உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை
    கர்வம் வை கிராம் கணக்கில்
    நம்பிக்கை வை கிலோ கணக்கில்

    நம்பிக்கை இல்லாத இடம்
    ஒன்றே ஒன்றுதான் கல்லறை
    தண்ணீருக்கு அடியில் சென்று
    ஓவியம் வரைய முடியாது

    தன்னம்பிக்கை இன்றி
    எதுவும் செய்ய இயலாது
    உங்களுக்கு உங்களின்
    மீது நம்பிக்கை இருந்தால்
    உங்கள் கீரிடங்களை
    யாராலும் பறிக்க முடியாது

    நம்பிக்கை ஒன்று போதுமே
    எதிர்காலம் ஒன்றைப்
    பார்க்கச் செய்யலாம்
    நம்பிக்கை இருக்கும் போதிலே
    எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்

    என்னமுடியும் எதைச் செய்ய முடியும்
    என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை
    எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்
    என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை

    ரோஜா தோட்டங்களில் பூத்தாலும்
    மல்லிகைப்பூ மணம் மாறாது
    நீ எங்கே பணி புரிந்தாலும்
    உன் சுயம் கெடாது.

    ReplyDelete
  37. Ahamed Yahya Hrowapothana
    நேற்று என்பதை அழித்துவிடு – உலகில்
    நாளை என்பதை மறந்துவிடு!
    ஏக்கந் தன்னை எடுத்துவிடு — கனியும்
    இன்றில் வாழ எழுந்துவிடு!

    பெண்ணே! பெண்ணே! மயங்காதே — இங்கே
    மலைப்பின் பிடியில் சிக்காதே!
    துணிச்சல் கொண்டு நடைபோடு — வாழ்வைத்
    தூக்கிப் பிடித்தே எடைபோடு!

    ReplyDelete
  38. Ahamed Yahya Hrowapothana
    நட்பு பூப்பதற்கு சலனமோ
    அர்த்தமற்ற உணர்ச்சிகளோ
    தேவையில்லை...

    நட்பு உறவாட உங்கள்
    மனதில் சிறு வேர் தழைத்து
    இருந்தாலே போதுமானது!

    வார்த்தைகளில் பரிமாறப்படும்
    தோழமை அதற்கு உயிர்
    கொடுத்து தழைக்க செய்து விடும்!

    ஒரு இதயம் துடிக்கும் போது
    யாரும் கவனிக்க மாட்டார்கள்
    ஆனால்
    அது நின்ற பிறகு எல்லோரும் துடிப்பார்கள்
    உறவுகளை நேசிப்போம் ..
    நட்புகளை சுவாசிப்போம் ..

    ReplyDelete
  39. Ahamed Yahya Hrowapothana
    வானம் உனக்கு பூமியும் உனக்கு
    வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
    வாழ சொல்லுது இயற்கையடா
    வாழ்வில் துன்பம் செயற்கையடா

    முகத்தை தேர்ந்தெடுக்கும்
    நிறத்தை தேர்ந்தெடுக்கும்
    உரிமை உன்னிடத்தில் இல்லை
    எண்ணி பார்க்கும் வேளையிலே
    உன் வாழ்க்கை மட்டும் உந்தன்
    கையில் உண்டு அதை வென்று எடு

    ReplyDelete
  40. Ahamed Yahya Hrowapothana
    இமயம் எட்டுந்தூரமே
    துடிப்பை இலட்சியமாய்
    துணிவின் இதயத்துடிப்பில்
    எழுச்சியின் சுவாசத்தை
    எண்திசைக்கும் பரவவிடு

    புலம்பலின் சுவடுகளை
    புரட்டிப் போட்டுவிட்டு
    பூபாளத் தூரிகையால்
    பூமியை ஓவியந்தீட்டு

    அவமானங்களைப் புதைத்து
    வெகுமானங்களின் கலசமாய்
    நம்பிக்கை அகல்விளக்கை
    நாளுமே ஏற்றிடு

    வீழ்ச்சிகளை வீழ்த்தி
    வீறுநடைக் கொடியேந்தி
    விந்தைகளின் வணக்கமுடன்
    விடியல்களின் வளமாக்கு

    சுறுசுறுப்பு சதுரத்தை
    சுகமான முக்கோணமாக்கி
    வசந்த நாற்கரத்தை
    வலிமையின் தோற்றமாக்கு

    உறுதியின் சூத்திரத்தை
    உன்னுள் ஒளியேற்றிடின்
    பாலைவன மணல்கூட
    பசுமையின் ஓவியமே

    ReplyDelete
  41. Ahamed Yahya Hrowapothana
    தோல்வி எனும் பள்ளத்தில் விழுந்துகிடக்கும் மனிதா
    எழுந்து வா
    இதோடு முடிந்துவிடவில்லை உன் வாழ்க்கை
    இருக்கிறது இன்னும் சாதிக்க
    விரைந்துவா மற்றவருக்கும் போதிக்க

    தோல்வி காண்பதே வாழ்க்கை அல்ல
    அதையும் வெற்றியாக்குவதுதான் வாழ்க்கை

    இளமை என்பது இலைசருகுபோல போனால் திரும்பவராது
    சாதிக்க புறப்படு!

    தோல்வியை தோல்வி அடைய செய்
    நிலவுகூட வளர்ந்து தேய்ந்து விடுமுறை எடுக்கிறது - அமாவாசையன்று
    ஆனால் நீயோ,
    உழையாமல் வெற்றிகாண நினைக்கிறாய்
    விட்டுவிடு இதுவரை நீ செய்த தவறை
    துவக்கிடு உன் வாழ்க்கை பணியை

    உன் உடலை நனைப்பது வெறும் கண்ணீர்துளிகளாய் இருக்ககூடாது
    வியர்வை துளிகளாய்தான் இருக்க வேண்டும்

    உழைத்து வாழ்
    பிறர் உன்னை மதிக்க வாழ்
    அப்போது தானாகவே திறக்கும் - உன் வெற்றிக்கதவு

    ReplyDelete
  42. Ahamed Yahya Hrowapothana
    கருவறையில் இருக்கையிலே
    இருட்டறை தான் என்றாலும்
    உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை.
    வெளிச்சமும் பிடிக்கவில்லை
    வெளியுலகம் வருவதற்கோ
    துளியளவும் விருப்பமில்லை.
    உள்ளேயே இருப்பதற்கா
    கருவாய் நீ உருவானாய்
    என்றே பரிகசித்தே படைத்தவன்
    பாரினில் பிறக்க வைத்தான்.

    அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை
    இழந்தே நாம் தவித்தோம்.
    பிறந்தது இழப்பல்ல
    பெற்றது ஒரு பேருலகம்
    என்றே பிறகுணர்ந்தோம்.
    சிரிக்கவும் பழகிக் கொண்டோம்
    உறவுகளை நாம் பெற்றோம்
    நண்பர்களைக் கண்டெடுத்தோம்
    தேவைகளைப் பூர்த்தி செய்ய
    அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.

    ஒன்றை இழக்கையிலே
    ஓராயிரம் நாம் பெறுவோம்
    இழந்ததையே நினைத்திருந்தால்
    புதியதையே பெற மறப்போம்
    எதையும் இழக்கும் பொழுதெல்லாம்
    இதை நினைக்கும் மனமிருந்தால்
    இருக்கையிலே போற்றினாலும்
    இழக்கையிலே மனம் வருந்தோம்
    இனிப் பெறுவதென்னவென்றே
    இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  43. Ahamed Yahya Hrowapothana
    நல்லது செய்வதை

    நாளைக்கென வைத்து

    இன்றைய பொழுதை

    இஷ்டத்தில் கழித்து

    என்றைக்கும் நாம் படும்

    கஷ்டத்துக்கெல்லாம்

    காரணமாய் உடனே

    கண்ட பெயர்- விதி.

    ReplyDelete
  44. Ahamed Yahya Hrowapothana
    உன் உருவத்தை உனக்கே
    காட்டிக்கொடுப்பது கண்ணாடி
    உன் உள்ளத்தை மற்றவர்களுக்கு
    காட்டிக்கொடுப்பது உன் பேச்சு
    யாரையும் தேவையில்லாம்
    விலக்கி வைக்காதே வேணும்
    என்றால் ஒதுக்கி வை
    உனக்கு தேவை ஏற்படும்போது
    அவர்களே தெய்வமாகவே
    தெரியக்கூடும்
    எல்லாம் தெரியும் எனக்கு
    என்று நினைப்ப்தும்
    எனக்கு தெரிந்த எதுவும்
    யாருக்கும் தெரியாது என்று
    நினைப்பதுவுமே மிகப் பெரிய
    முட்டாள்தனம்
    இந்த உலகம் என்பது ஒரு வகுப்பறை
    நேற்று யாரோ இன்று நாம் நாளை யாரோ
    அடுத்தவனின் நிழலில் நின்று
    குளிர் காய்வதை விட
    தனியாக நின்று கருகிப்
    போவதே மேல்
    தோல்விகள் மட்டுமே உன்
    முயற்சிகளை சோதிக்கும்
    உன் முயற்சிகள் மட்டுமே
    வெற்றிகளை பெற்றுத்தரும்
    இழப்புகளின் பெறுமதியில்
    எந்த வெற்றியும் தீர்மானிப்பதில்லை
    வெற்றிக்கான விருது அதற்கான
    இழப்புகளின் பெறுமதியால் தீர்மானிக்க படுகிறது
    மனிதனுக்கு ஞாபக சத்தி எவ்வளவு
    அவசியமோ அவ்வளவு அவசியம் மறதியும்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?