என் யன்னல் நிலவே..!!!

என் யன்னல் நிலவே.. என்னவள் கனவில் வருவாளென்று நேற்றிரவு நேரத்துடன் தூங்கிவிட்டேன்... சூரியனிடம் சொல்லி எனைச் சுட்டுவிடாதே...!
**************************************************
என் முற்றத்து மல்லிகையே... அன்பானவளின் அழகிய புன்னகைகண்டு உனை நான் காணவில்லை நாளை மலராமல் நின்று எனை வாட்டிவிடாதே...!
**************************************************
என் இரவுக் காற்றே... அவள் சுடிதார் பட்டு சிதறிய கற்று என் சுவாசக்காற்று ஆனதனால் எனைத்தழுவும் இன்பக்காற்று நீ எனை தவிக்கவிட்டுச் செல்லாதே...!
**************************************************
கூவுகின்ற குயிலே... என் மயிலின் குரல் வயலின் போன்றதுதான் அதற்காய் உன் தாலாட்டின்றி எனை தூங்கச்சொல்லாதே...!
**************************************************
பக்கத்துவீட்டு சுட்டியே... அழகுப்பெண்மை அவளை நான் பார்கபோகும் அவசரத்தில் அழகுபொம்மை உனைநான் பார்க்கத் தவறிவிட்டேன் உன் பிஞ்சுமுத்தம் இல்லையென்று எனை கொன்றுவிடாதே...!
**************************************************
என் குட்டிச்சுவரே... பாவை போகும் இடம்தேடி பாதம் நாட ச...