சிச்சுவேஷன் சாங்க் (Situation Song) விற்பனைக்கு உண்டு..!


நம்முடைய பதிவால் நாலுபேர் வாழ்க்கை சந்தோசமா அமைகிறது என்றால் அது எல்லோருக்கும் பெருமையான விடயம்தானே. அந்த வகையில் இன்றைய பதிவும் இந்த பதிவை படிப்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் வெற்றியடைய ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் என்பதில் மேலும் சந்தோசம்.



நாம் நல்லா உழைத்தும் நாலுபேருக்கு நல்ல உதவிகள் செய்தும் வாழ்கையில் முன்னுக்கு வராமல் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..? நமக்கு பின்னணியில் ஒரு "சிச்சுவேஷன் சாங்க்" அதாவது சூழ்நிலை பாடல் ஒன்று இல்லாமல் இருத்தலே. இந்த சிச்சுவேஷன் சாங்க் சரியாக அமைந்து விட்டால் நமக்கு ஒரு ஐந்து நிமிடம் போதும் நண்பர்களே வாழ்வில் உச்ச நிலைக்கு வந்துவிட. எனவே இந்த சிச்சுவேஷன் சாங்க் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் அந்த பொக்கிஷ பாடல் இங்கு நம்மிடம் கிடைக்கிறது. அது உங்களுக்கு வேண்டுமா அப்படியானால், அதற்கான தகுதி முதலில் நம்மிடம் இருக்கவேண்டும். அது என்ன என்ன தகுதி என்று பார்ப்பதற்கு முன்பு மூன்று பிரபலமான சிச்சுவேஷன் ஷாங்க் பார்த்துவிட்டு வருவோம்.





என்ன நண்பர்களே பார்த்திங்களா எப்படி இருந்த அந்த மூன்று மனிதர்களும் அந்த பாடல்களின் பின்பு எப்படி வாழ்க்கையில் முன்னேறி பிரபலமானார்கள் என்று. இதேபோன்று உங்கள் வாழ்க்கையிலும் நடக்க வேண்டாமா...? நீங்களும் வாழ்வில் முன்னேற வேண்டாமா...? அப்படி உங்களுக்கு ஆசை இருந்தால் உடனே என்னை தொடர்புகொள்ளுங்கள். அதற்க்கு முன்பு ஒரு விடயம் நான் குறிப்பிடப்போகும் இந்த தகுதி காரணங்கள் உங்களுக்கு இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

சிச்சுவேஷன் சாங்க் பெறுவதற்கான தகுதிகள்.
  • ஒரு ஆண்மகனாக இருக்கவேண்டும்.
  • படிப்பறிவு சற்று குறைவாக இருக்கவேண்டும் / இல்லாவிடினும் பராவாயில்லை.
  • உறவினர்களால் மதிப்பு பெறாதவராக இருக்கவேண்டும்.
  • ஏதாவது சுயதொழில் தெரிந்திருக்க வேண்டும்.
  • கண்டிப்பாக யாரையாவது காதல் செய்திருக்க வேண்டும்.
  • காதலி உங்களை விட புத்திசாலியாக இருத்தல் வேண்டும்.
  • ஊர் மக்கள் ஆதரவு இருக்க வேண்டும்.
  • இதற்க்கு முன்பு உருப்படியா ஒன்றும் செய்திருக்க கூடாது.
  • யாராவது உங்களுக்கு துரோகம் செய்திருக்க வேண்டும்.
  • பழிவாங்கும் உணர்ச்சி இருந்தாலும் பரவாயில்லை இல்லாவிடினும் பரவாயில்லை.
  • நாலு நல்ல நண்பர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

இதைத்தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன அவற்றை நீங்கள் விண்ணப்பிக்கும்போது நாங்கள் விளக்கி கூறுவோம். எனவே நண்பர்களே மேற்படி தகுதிகள் இருப்பின் நீங்கள் இன்றே எம்முடன் தொடர்புகொண்டு உங்களுக்கான சிச்சுவேஷன் சாங்க் கை பெற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற எனது வாழ்த்துக்கள்.

"அப்பாடா முடியல... இதைவிட எப்படி மொக்கையா எழுதுற..."

உங்க கோப தாபத்த எல்லாம் கருத்திலையும் வாக்குலையும் குத்திட்டு போங்க....!

என்றும் நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

  1. உங்களுக்கு மட்டும் எப்படி நண்பா...

    இப்படியெல்லாம் தோன்றுகிறது....!!!!!!!!!!!

    ReplyDelete
  2. ஹா ஹா.....
    சரிப்பா எனக்கும் ஒரு பாடல் தாங்க

    ReplyDelete
  3. அசத்தல் ...
    நீங்கள் கொடுத்த தகுதிகள் .. அனேகமாக எல்லோருக்கும் இருக்கும்
    என நினைக்கிறேன்..
    சிரிக்க வைத்த பதிவு...

    ReplyDelete
  4. //உங்களுக்கு மட்டும் எப்படி நண்பா...

    இப்படியெல்லாம் தோன்றுகிறது....!!!!!!!!!!!//

    நன்றி முனைவர் அவர்களே...!

    ReplyDelete
  5. //ஹா ஹா.....
    சரிப்பா எனக்கும் ஒரு பாடல் தாங்க//

    கண்டிப்பாக அடுத்த பதிவில் உங்களுக்காக... நன்றி நண்பரே...!

    ReplyDelete
  6. //அசத்தல் ...
    நீங்கள் கொடுத்த தகுதிகள் .. அனேகமாக எல்லோருக்கும் இருக்கும்
    என நினைக்கிறேன்..
    சிரிக்க வைத்த பதிவு...//

    நன்றிகள் நண்பரே...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.