மங்காத்தா - ஆத்தா நாங்க பாஸாயிட்டம்..!

வணக்கம் சினிமா நண்பர்களே ரசிகர்களே....



நமக்கெல்லாம் இந்த சினிமா பட விமர்சனம் எழுதிப் பழக்கமில்லை, பார்பதோடு சரி. அப்போ எதற்கு இந்த பக்கம் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு தமிழனாக இருந்து சினிமாவை யாரும் வெறுக்க முடியாது, அந்த அளவிற்கு சினிமா மோகம் நம் எல்லோரின் மீதும் ஊறிக்கிடக்கின்றது. ஆனால் இன்று நான் சினிமா பதிவு இட வந்தமைக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

1) இப்போதுதான் நான் பதிவுலகில் கால்வைத்திருக்கின்றேன் இங்கு நிலைத்திருப்பது என்பது சற்று கடினமான ஒரு விடயம். அதுவும் நான் வேறு ஒரே கவிதை தொடர்பான பதிவை இடுவதனால் சீக்கிரமே கிளம்பவேண்டியதுதான். ஏனெனில் இங்கு எல்லோரும் கண்ணதாசனும் வைரமுத்துவும்தான் ஆகவே அனைத்தையும் கலந்து காத்திரமான பதிவுகளை மட்டும் இங்கு பதிவு செய்தால்தான் நிலைக்க முடியும்.

2) நாம் நமது சாதாரண வாழ்வில் பார்க்கின்ற சம்பவங்களில் சற்று வித்தியாசமாக ஏதும் நடக்குமாயின் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்போம். அந்தவகையில் நான் இங்கு பார்த்த ஒரு சினிமா சம்பவம். அதுவும் ஒரு அரபு நாட்டில் தமிழ் சினிமாவிற்கு இருக்கும் வரவேற்பு. நான் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடான கட்டாரில் வசிக்கின்றேன். இங்கு பல தியட்டர்கள் இருந்தாலும் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவது சற்று குறைவே. ஆனால் என்று இங்கு நம்ம தலைவர் ரஜினி படமான "சிவாஜி" திரையிட்டார்களோ அன்றிலிருந்து அனைத்தும் மாறிவிட்டது.

ஆகவே இந்த இரு காரணங்கள்தான் நான் இன்று சினிமா பதிவொன்று பதிவிடுவதர்க்காக எனை தூண்டியது. அதுவும் தலையின் 50 வது படமான மங்காத்தா விமர்சனம் மூலம் நான் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

வழமையாக ஒரு நாளைக்கு முன்பே இங்கு திரைப்படங்கள் வெளியாகிவிடும் அந்தவகையில் மங்காத்தாவும் செவ்வாய் அன்றே வெளியாகிவிட்டது. ஆனால் இங்கு முஸ்லிம் பெருநாளை முன்னிட்டு விடுமுறை என்பதால் படத்திற்கான டிக்கெட் கிடைக்குமென்பது நினைத்துக்கூட பாத்திருக்கவில்லை. இருந்தாலும் நம்ம நண்பர் ஒருத்தர் முதல் காட்சிக்கே டிக்கெட் எடுத்துவிட்டார். அதுவும் இருபது றியால் பால்கனி டிக்கெட்டை முப்பது றியால் கொடுத்து. அந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் அலைமோதியது.

ரஜினியின் "எந்திரன்" இங்கு 13 நாட்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக மொத்தம் 42 நாட்கள் ஓடியது என்றால் நம்பவா போறிங்க... அதற்க்கு பிறகு அந்த அளவிற்கு ஒரு கோலாகலமான ஆரம்பம் இந்த அஜித் நடித்திருக்கும் மங்காத்தாவிற்கே.

விஜய் நடித்து வெளியான காவலன் படத்திற்கு உண்மையிலே இந்த அளவு ஆரம்பம் இருந்ததில்லை. அஜித் படத்திற்கு என்றும் ஆரம்பம் அசத்தலாக இருக்கும் என்பதை நானும் படித்துத்தான் அறிந்திருந்தேன், ஆனால் இப்போதுதான் நேரில் பார்த்தேன்.

அப்படி என்னதான் இருக்கிறது அஜித்திடம் இப்படி ரசிகர்களை அவர் எப்படி பெற்றார் என்று நானும் ஒருகணம் சிந்திக்க தொடங்கினேன். பில்லா வெற்றிக்கு பிறகு சொல்லும்படி எந்த திரைப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன்பிறகு ரசிகர் மன்றக்கலைப்பு, அரசியல் பிரச்சனை அது இதுன்னு ரசிகர்களிடம் இருந்து தூரச்சென்றதாகவே இருந்தது அவருடைய நடவடிக்கைகள்.

இருந்தாலும் தன் நிலைப்பாட்டையும் தன் ரசிகர்களையும் அவர் இழக்கவில்லை என்பதை மிகவும் ஆணித்தனமாக வெளிப்படுத்துகிறது இந்த திரைப்படமும் அதை காண வந்த ரசிகர் கூட்டமும்.

சரி இனி படத்திற்கு வருவோம்.



நம்ம கிரிக்கெட் இயக்குனர் வெங்கட்பிரவு வாய்ப்பு வந்தும் ஹாட்ரிக் அடிக்க தவறவிட்டுவிட்டு அடுத்த படத்தில அதை பெறும் நோக்கத்தோடு இயக்கி இருக்கும் படம்தான் மங்காத்தா. தயாநிதி அழகிரி, விவேக் ரத்னவேல் ஆகியோர் தாரித்து இருக்கிறார்கள்.

படத்தின் கதை என்னவோ பழசுதான், நம்ம மணிரத்னம் சார் இயக்கிய திருடா திருடா படமும் இப்படித்தான் இருந்தது. ஆனால் இதில் வெட்கப்பிரவு ரொம்பவே சிரத்தை எடுத்திருக்கிறார் என்றே தெரிகின்றது.

கிரிக்கெட் சூதாடம் தொடர்பாக கதைய தயார்செய்ததர்க்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

ஐபில் இறுதிபோட்டியின் போது 500 கோடி ரூபா சூதாட்டம் மும்பையில நடக்கபோகுகிறது. இந்த பணம் வந்து பிரிந்து செல்லப்போவது செட்டியார் எனும் ஜெய்பிரகாஷிடம்.

இதை அறிந்து அவரிடம் வேலைசெயும் வைபவ் அவரோட நண்பர்களோட பணத்த கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க.

ஜெயப்பிரகாஷ் மகளான திரிஷாவோட காதல் செய்து பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் உள்ளே நுழைகின்றார் அஜித்.

இந்த சூதாட்டம் இடப்பெறுவதை அறிந்து அனைவரையும் பிடிக்கும் நோக்கத்தோட வருகிறார் நம்ம போலிஸ் அக்சன் கிங் அர்ஜுன்.

கடைசியில இந்த பணத்தை யார் சொந்தமாக்கிகொள்கின்றாங்க, அர்ஜுன் அனைவரையும் பிடிக்கின்றாரா என்பதுதான் மிகுதி கதை.

படத்தில அதிகமான கதாபார்த்திரங்கள் அனைவரையும் அறிமுகபடுத்த வெங்கட் பிரபு ரொம்ப மெனக்கட்டிருக்கிறார்.

திரிஷா : அஜித்தின் காதலியா வாறங்க அழகா இருக்காங்க, அஜித் தன்ன ஏமாற்றுவது தெரியாமல் இயல்பாக நடிச்சிருக்காங்க. அனால் இன்னும் தன்னுடைய நடிப்பில் காதல் உணர்வுகளை கொண்டு வந்திருக்கலாம், ஏனெனில் ஏமாற்றும் அஜித் அருமையாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.



லட்சுமி ராய்: சும்மா கவர்சிய அள்ளி வீசியிருக்காங்க உயரம் இவருக்கு பிளஸ் பாயிண்ட், அஜித்தோட இவருக்கு ஒரு ரேஸ் இருந்ததை பார்த்தூ சிரிப்புத்தான் வந்தது. மற்றும்படி நடிப்பில் ஒன்றும் பெரிதாக இல்லை, இயக்குனர் முடிந்தளவுக்கு பயன்படுத்தி இருக்கிறார்.

அஞ்சலி அண்ட் அன்றியா : கொஞ்ச நேரம் வந்தாலும் குளிர் காய வைக்கிறாங்க.

ஜெயபிரகாஷ்: கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார், அஞ்சலியிடம் தன் கணவன் துரோகம் செய்துவிட்டான் என பேசும்போது அருமையான நடிப்பு. இன்னும் பல திரைப்படங்களில் வலம்வர வாய்ப்பிருக்கின்றது.

வெங்கட் டீம்: இதில் வழமை போல பிரேம்ஜி கொஞ்சம் மொக்கைய சிரிக்க வைக்கிறார், இதில் டைமிங் கொஞ்சம் பரவல, படத்தில ஹக்கர் கதாப்பாத்திரம் இருந்தது நல்லதாய் போய்விட்டது, இல்லையெனில் படத்தில் இவருக்கு வாய்ப்பே இருந்திருக்காது. மற்ற எல்லோரும் சுமாரா கொடுத்த வேலைய செய்திருக்காங்க. ஆனால் இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் முடிந்தளவிற்கு பசங்கள அடுத்த படத்திற்கு தவிர்க்கவும்.

ஆக்சன் கிங்: வழமைபோல தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியா போலிஸ் வேடம், கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றது போல மிடுக்கா நடிச்சிருக்கார், அஜித் இவர ஆக்சன் கிங் என்று சொல்வது சூப்பர்.

கடைசியா நம்ம அஜித்:
முதல்ல இந்த படத்தில நடிச்சிருப்பது பெரியவிஷயம், இவருக்கு மட்டுமே உரிய பாணி இது. வேறு யாரும் இதை தொடமாட்டாங்க. ஆனால் ஒன்று அஜித் படத்தில நடிக்கும்போது கதாப்பாத்திரம் தவிர்ந்த வேறொரு விடயத்தையும் தன்னுடைய நடிப்பின் மூலம் சொல்ல வருகிறார் என்பது தெரிகிறது. நாற்பது வயது நிறுத்தி வைக்கபட்ட போலிஸ் அதிகாரி, தொப்பையும் நரைமுடியும் ம்ம்ம் சும்மா கலக்கி இருக்கிறார். முடிந்தவரை ஆடியிருக்கிறார், நடித்தும் இருக்கிறார். ஆனால் முடிந்தவரை கேட்ட வார்த்தைகள் பேசுவதை அஜித் தவிர்த்திருக்கலாம். இவர் வருகின்ற ஒவ்வொரு காட்சிகளிலும் விசில் பறக்கிறது, அடித்திருக்கும் லூட்டிகளும் ரசிக்கும்படி உள்ளது. ஆரம்ப காட்சியில் பில்டப் இல்லாமல் உள்ளே வருவது, காதால் கட்சிகளில் இயல்பா இருப்பது, பிரேம்ஜியை கலாய்ப்பது எல்லாமே ரசிக்கும்படி இருந்தது. தனது ஐம்பதாவது படம் ஹிட்டாக்க வேண்டிய நிலையில் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்து ஹிட் கொடுத்திருப்பது சும்மா நச்.



படத்தின் பாடல்கள் எல்லாமே ரசிக்கும்படி உள்ளது, பின்னணி இசையில் யுவன் பின்னி எடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.

எடிட்டிங் பரவாயில்லை முடிந்தளவு பிரேம்ஜி மொக்கை போடுவதை கொஞ்சம் வெட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், ஆனால் முதல் 45 நிமிடம் கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்பாங்க போலும்.

மற்றும் லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் தமிழ் சினிமா மசலா பட லாஜிக் படி ஓகே என்று சொல்லலாம்.

முழுவதுமாய் வெங்கட் பிரபு அனைத்தையும் சரிசெய்திருக்கிறார் ஆரம்பம் சற்று தொய்ந்தாலும் பின்பு விறுவிறுப்பாய் உள்ளது.



அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டம், மற்றவர்களுக்கு நிச்சயம் ரசிப்பாங்க, படம் நிச்சமாக ஓடும் என்பதில் சந்தேகமில்லை.

மங்காத்தா - ஆத்தா நாங்க பாஸாயிட்டம்..!


வணக்கம் நண்பர்களே இது என்னுடைய முதல் விமர்சனம் கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் மன்னித்து அடியேனுக்கு உங்க கருத்தையும் ஓட்டையும் போட்டுவிட்டு போங்க.


நண்பன்,

நிரோஷ்.

Comments

  1. // ஏனெனில் இங்கு எல்லோரும் கண்ணதாசனும் வைரமுத்துவும்தான் //

    ஹா...ஹா.இதெல்லாம் வெளிய சொல்லலாமா..

    ReplyDelete
  2. எளிமையான விமர்சனம்..அதனாலேயே அழகாய் இருக்கிறது.

    ஐயா, அந்த வேர்டு வெரிஃபிகேசனை எடுக்கக்கூடாதா? இப்படி இருந்தா, யார் கமெண்ட் போடுவாங்க..

    ReplyDelete
  3. நன்றி நண்பா...
    //ஐயா, அந்த வேர்டு வெரிஃபிகேசனை எடுக்கக்கூடாதா? இப்படி இருந்தா, யார் கமெண்ட் போடுவாங்க..//
    உண்மையா தெரியல நண்பா... எங்கிருக்கிறது எப்படி நீக்குவது என்று சொல்லமுடியுமா...?

    ReplyDelete
  4. ம்ம் அருமை நண்பா நாளைக்கே பார்த்துவிடுவோம்....

    ReplyDelete
  5. @செங்கோவி..
    ஓகே நண்பா வேர்டு வெரிஃபிகேசனை நீக்கி விட்டேன்.. நன்றி தங்கள் ஆலோசனைக்கு.

    ReplyDelete
  6. Hi Nirosh,

    Am Mohan & Am also at Qatar, I think u hav watched this movie @ Gulf cinema hall at najma.Even i watched this with my family at the release date the balcony Tkt price is 25 riyals and not 20 i got the Tkt at the counter only.I agree there was crowd but when watched (3 pm show) the balcony was not full.Actualy i bought Tkt for KAVALAN out side counter paying 5 Riyals more (This was after 1 week of the movie release) and it was full house with family audience.If u want to praise Ajith no problem u r atmost welcome but don compare with Vijay then we hav to intervine cant help it.Sorry for typing in English i don hav Thamizh keypad--The crowd u hav seen @ gulf cinema is mixed crowd coz hindi Bodyguard also screend there at its smash hit.So get ur facts correct before u post

    ReplyDelete
  7. விமர்சணம் மிக அருமை !!!

    ReplyDelete
  8. கருத்திட்ட அனைவைருக்கும் நன்றிகள்...
    நண்பன் மோகன் அவர்களே...
    நான் யாருக்கும் ரசிகன் அல்ல, தாங்கள் விஜய் ரசிகர் என்று தெளிவாக புரிகின்றது, நல்ல திரைப்படங்கள் எது வந்தாலும் ரசிப்பது எனது வழக்கம், அந்த வகையில் இங்கு நடந்தது நான் கண்டுகொண்டது என்பவற்றையே நான் குறிப்பிட்டுள்ளேன், நீங்கள் முதல் காட்சி பார்த்திர்களா இல்லையா என்று தெரியாது, ஆனால் நீங்கள் குடும்ப சகிதம் சென்று பார்த்துள்ளீர்கள் அதற்க்கு என்று ஒதுக்கப்பட இடத்தில், இங்கு எப்போதுமே அந்த ஆசனங்கள் காலியாகத்தான் இருக்கும், தனியாட்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு ஏதும் என்னுடைய பதிவில் இருப்பின் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றேன். நாளை விஜய் நடித்து வெளியாகும் திரைப்படம் நல்லமுறையில் இருந்தாலும் உரியவாறே நானும் எழுதுவேன், அதுதான் பதிவாளர்களின் கடமை, பாகுபாடு பார்க்கும் நிலையில் நானும் எனது தமிழும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துகொள்கின்றேன். நன்றி வணக்கம்.!

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. As u can understand frm my writing Am Vijay fan,I can understand frm your write-up whoz fan you are.The point i try to prove here is always share genuine things.Now there is no restrictiones that in the balcony only family ppl can sit,In our cubic apart from us all others were bachelors OK.even though the balcony was not full.When i watched Kavalan at the end of 1'st week show at balcony it was full occupancy(From balcony i can look down)and ofcourse balcony was full with family audience and kids.
    The crowd u hav seen outside the theatre in the Eid holidays is not only for mankatha there is Hindi blockbuster also running in the same theatre.Balcony was full only for Enthiran and after that Kavalan that's it.

    ReplyDelete
  11. நல்லது நண்பரே, முடியுமானவரை முயற்ச்சிக்கிறேன் தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிகள்...!!!

    ReplyDelete
  12. Thanks Bro, for ur understanding.
    Would be glad if you can edit/remove refference/comparision to Vijay/Kavalan from your post since its not at all TRUE/Genuine info.
    For your information i just checked with gulf cinema for Evening show today tickets were avilable

    ReplyDelete
  13. நிரோஷ்...!

    உங்கள் வலையின் தலைப்பைப் பார்த்தே கொஞ்சம் விலகியோடவே நினைத்தேன். ஏனெனில், கவிதை எழுதுகிறேன் என்று பதிவுகளிலும்- பேஸ்புக்கிலும் பலர் அடிக்கும் ரணகளத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி எழுதப்படும் ஆயிரம் கவிதைகளில் 5-6 கவிதைகளே நல்லதாக தேறுகின்றன. அதனால், பதிவுலகில் கவிதை பதிவுகள் பக்கம் தலை வைப்பது குறைவு.

    ஆனாலும், பதிவுலகைப்பற்றிய உங்களின் புரிதல் அற்புதம். எனவே, எதிர்காலத்தில் எல்லா விடயங்களையும் கலந்து கட்டி எழுதுங்கள்- அவ்வப்போது கவிதையையும் எழுதுங்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நிச்சயமாக நண்பா... தங்கள் கருத்துக்களும் ஆலோசனைகளும் எனை நிச்சயம் மெருகேற்றும், என்றும் உங்கள் ஆதரவு வேண்டி எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  15. Thambi Nirosh,

    Thayavu seithu Vijay/Kavalan paguthigalai ungal pathivil irunthu neekavum,Thuliyum unmai illatha visayangalai,Thevai illatha oppidugalai inimel pathivida vendam eandru panivanbudan ketukolkiren.
    Nandri

    ReplyDelete
  16. அண்ணே மோகன்,

    நானும் நீங்கள் பார்த்த மாதிரிதான் அதே கண்களால் திரைப்படம் சென்று பார்த்தேன், நானும் அங்கு நடந்தவற்றையே எழுதியுள்ளேன், நீங்கள் விஜய் ரசிகராக இருந்து சொல்கின்றீர்கள் என்பதற்காக நான் உண்மையை மறைக்க முடியாது. எனக்கு இந்த ரஜினி கமல், அஜித் விஜய் போட்டியெல்லாம் தெரியாது, சினிமா அவர்களின் தொழில் நமக்கு பொழுதுபோக்கு அவர்கள் அவர்கள் தொழிலில் வெற்றியடைய வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறேன் அவளவுதான், நாளை விஜய் படம் ஹிட்டானால், அதற்க்கு முன்னர் தியட்டரில் ஓடிய படத்தை ஒப்பிட்டு கருத்து கூறுவேன் அது யார் நடித்த படமாக வேண்டுமானாலும் இருக்கலாம். தயவுசெய்து. இத்துடன் நிறுத்துங்கள் தங்கள் சினிமா போட்டியை. இனி நீங்கள் என்ன பதில் தந்தாலும் என்னிடம் பதில் இல்லை என்பதையும் தாழ்மையுடன் அறியத்தருகின்றேன் .

    நன்றி,
    நா.நிரோஷ்.

    ReplyDelete
  17. Even from my point it doesnt make any sense when u r not ready accept simple fact even though i have proven it with creadible info's

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?