கரையல் சோறு - 06.09.2011


அனைவருக்கும் இனிய திங்கள் வணக்கங்கள்.
-----------------------------------------------------------------

பழிக்குப் பழி எனும் பழைய டயலாக் வைத்துக்கொண்டு பாரத நாட்டில் ஒரு பாவச்செயல்... இது பழிக்குப்பழியா இல்லை பலிக்கிடாவா என்றும் தெரியவில்லை புரியவில்லை... அதற்குள் ஏனோ இந்த அநியாய தண்டனை. ஆட்சி என் பக்கம் நான் சொல்கிறேன் தூக்கிலிடுங்கள் அவர்களை என்று அந்த கடவுளே (சாமியே) சொல்லும்போது நாம் என்னசெய்வது. எது எப்படியோ அந்த மூன்று உயிர்களுக்கும் இன்னும் 56 நாட்கள் கிடைத்திருக்கின்றன மூச்சுவிட. முடியுமானவரை முடிந்ததை செய்யுங்கள்.

---------------------------------------------------------------------------------

மற்ற நாடுகளெல்லாம் விண்ணில் தெரியும் மர்ம மனிதர்கள் பற்றி தெரிந்துகொள்வதற்காக என்னவெல்லாம் ஆராட்சி பன்னுகின்றார்கள்.... ஆனால் இங்கு நடுவீதிக்குள், நாடு வீட்டிற்குள் வந்துபோகும் இந்த மர்ம மனிதர்கள் பற்றி இன்னும் ஒரு முடிவும் கிட்டவில்லையேயப்பா என்னதான் நடக்குது இங்கே ஒண்ணுமே புரியலையே.....?

---------------------------------------------------------------------------

திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போகலாம் குமரிகள் காணாமல் போகலாமா...? ஆம் போகின்றார்கள் எங்கள் திருநாட்டில் திருவிழாவில் அல்ல தெருவில் வைத்தே காணாமல் போகிறார்கள். பெண்களே உஷாராக இருங்கள்.

-------------------------------------------------------------------------

காலியில் காலியான இலங்கை அணி.
-----------------------------------------------------

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது பயிற்சிப் போட்டியில் 125 ஓட்டங்களால் ஆஸி அணியினர் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர்.


இப்போட்டியில் ஆஸி அணியினர் முதல் இன்னிங்ஸில் 273 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 210 ஓட்டங்களையும் பெற்றனர். முதல் இன்னிங்ஸில் மைக்கல் ஹசி 95 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் மைக்கல் கிளார்க் 60 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸிலும் ரங்கன ஹேரத் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இலங்கை முதல் இன்னிங்ஸில் 105 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 253 ஓட்டங்களையும் பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் மஹேல 105 ஓட்டங்களையும், மெத்யூஸ் 95 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் நதன் லியோனும் இரண்டாம் இன்னிங்ஸில் ரேயான் ஹரிசும் தலா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந்தபோட்டியில் இலங்கை அணியினரின் தோல்விக்கு முக்கிய காரணம் துடுப்பாட்டவீரர்களின் நுட்ப திறனான துட்டுப்பாட்டம் சரியாக அமையாததே.


இருப்பினும் இந்த டெஸ்ட் போட்டியில் ஈட்டப்பட்ட மைல்கற்கள்.
-------------------------------------------------------------------------------------------

* இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2006 ல் வங்காளதேசில் ஈட்டிய வெற்றிக்குப் பின்னர் ஆஸி அணியினர் உபகண்டத்தில் பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும்.


* 100 டெஸ்ட் வெற்றிகளில் பங்காற்றிய முதலாவது வீரர் என்ற சாதனையை ஆஸி அணியின் ரிக்கி பொன்டிங் தனதாக்கிக்கொண்டுள்ளார்.


* இப்போட்டியில் மஹேல ஜெயவர்தன தனது 29 சதத்தை பூர்த்தி செய்து அதிக டெஸ்ட் சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் டோன் பிரட்மனை சமன் செய்துள்ளார்.



* மஹேல ஜெயவர்தனவும் ஏஞ்சலோ மெத்யூசும் பகிர்ந்த 142 ஓட்டங்கள் ஆஸி அணியினருக்கு எதிராக 6 வது விக்கெட்டில் பகிரப்பட்ட அதி கூடிய ஓட்டங்களாகும்.

---------------------------------------------------------------------

உலக கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணியினருக்கு இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் ரொம்பவே பாடப் படுத்துதுங்க. பின்ன என்னங்க. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோற்று தனது முதலிடத்தை இழந்தது. பின்னர் இடம்பெற்ற T20 போட்டியிலும் தோல்வி. அதனை அடுத்து இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் வெற்றி பெறுவதற்கான சாதக நிலை இருந்தாலும் காலநிலையின் கபட வஞ்சத்தினால் அதுவும் கைநழுவிப் போனது. இனி எஞ்சியிருக்கும் நான்கு போட்டிகளிலும் என்ன நடக்கபோகுதோ....? இருப்பினும் இந்த ஒருநாள் தொடரை இந்திய அணியினர் வெற்றிகொள்ள எனது வாழ்த்துக்கள்.

-------------------------------------------------------------------------

அது சரி யாருங்க அது இந்தியாவிலே பிறந்து இங்கிலாந்துல வளர்ந்த அந்த நசார் ஹுசைன் இந்திய அணி வீரர்களை பார்த்து கழுதைகள் என்று சொல்லியிருக்கிறாராம். ம்ம் நல்லது இல்லேங்க கழுதை உதைப்பது போல உதைக்கவேன்டாமா...? என்னவோ கிரிக்கெட் ரொம்ப டீசன்ட் விளையாட்டு அதிலும் இங்கிலாந்து ரசிகர்கள் தலைகள் எல்லாம் ரொம்பவே கிரிக்கேட்டுக்கு மரியாதை கொடுப்பவங்க என்று கேள்விபட்டியிருக்கிறேன். என்னவோ போங்க.. அனால் அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழும என்பதில் எந்த ஐயப்படும் இல்லை.

----------------------------------------------------------------------

கண்டு பிடிங்க பாப்போம்....?
--------------------------------------

தற்பொழுது யு யூ டியுப்பில் பிரபலமாக இருக்கும் இந்தப்பாடலில் ஒரு தமிழ் பாட்டின் சாயல் தெரிகின்றது. ஆனால் எந்தப் பாடல் என்று தெரியவில்லை. முடியுமானால் நீங்கள் கண்டுபிடித்து சொல்லுங்கள்.



நல்லது நண்பர்களே கரையல் சோறு எனும் தலைப்பில் இது எனது முதல் பதிவு. இது உங்களை கவருகின்ற பட்சத்தில் நீங்கள் ரசிக்கின்ற பட்சத்தில் தொடர்ந்து வரும் என்பதை தெரிவித்துக்கொண்டு உங்கள் நட்பின் ஆதரவை வேண்டி நிற்கும் உங்கள் நண்பன்.
நா.நிரோஷ்.

வாக்களிக்கவும் கருத்துக்கூறவும் மறந்திடாதிங்க.

Comments

  1. சிந்தையில் மலர்ந்த கற்பனைக்கு கற்பனைக்கு சிறப்பாக பொருள் கொடுக்கும் தோழனே உன் பணிகள் தொடரட்டும்,,,,
    மர்ம மனிதன் என்பது நம் இனத்தை சீர்குலைக்கும் மனிதர்களின் உன் கவிதை போல் சிந்திய சில்லறைகளே,,,,அருமையாக இருக்கு

    ReplyDelete
  2. நன்றி நண்பா...!

    ReplyDelete
  3. தொகுப்புகள் நன்றாக இருக்கிறது நண்பரே
    தொடருங்கள்.

    ReplyDelete
  4. நன்றி மகேந்திரன்.. நிச்சயமாக...!

    ReplyDelete
  5. எழுச்சியான-அறிவியல் சார்ந்த பதிவு...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
    டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

    ReplyDelete
  6. நன்றி தீரன் மற்றும் சமுத்ரா.. தங்கள் வலைத்தளம் வந்து என் கருத்துக்கள் கொடுப்பது என் கடமை...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.