ஒரு பிரபல பதிவாளர் பற்றிய "ம்... ஆ.." பதிவு - உண்மை சம்பவம்



பதறி அடித்து பதிவை காண ஓடி வந்திருக்கும் உள்ளங்களுக்கு பணிவான வணக்கங்கள். படிப்பதற்கு முன்னர் கொஞ்சம் தண்ணீர் குடிங்க பிறகு நல்ல ரிலாக்ஸ் பண்ணுங்க. ஓகே இப்போ பதிவ படிப்பதற்கு தொடங்குங்க....!

முதல்ல நான் ஒன்றை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும், பதிவை படித்த பின்பு நீங்கள் எடுக்கப்போகும் எந்த முடிவுக்கும் நானோ எனது பதிவோ காரணம் அல்ல என்பதை முதலில் இங்கு தெரிவித்து தப்பித்துக்கொள்கின்றேன். (அப்பாடா ஸ்கேப்).



ஒரு மனிதன் எப்படிபட்ட புகழின் உச்சத்தில் இருந்தாலும், தன்னை நியாயமான ஒரு மனிதனாக காட்டிக்கொண்டாலும் அனைத்தையும் மீறி ஒரு சில நடைமுறை மனித விளுமியத்தில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில்தான் இந்த பதிவு மேட்டரும். தான் வலையுலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு பதிவர் எப்படி இப்படி சிக்கிக்கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இதனால் இனி வலையுலகில் பல மாறுதல்களும், மறியல்களும் நிச்சயம் இடம்பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

முதலில் நடந்தது என்ன என்பதை பார்த்துவிட்டு இறுதியில் அவரின் பெயரை குறிப்பிடுகின்றேன். "ஹலோ.. ஹலோ.. ப்ளீஸ் வெயிட்" "அதுதான் சொல்கின்றேனே முதலில் மேட்டர் என்ன என்று பார்த்துவிட்டு இறுதியில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று..." அதற்குள் என்ன அவசரம் ஏன் இப்போ கீழே ஓடுகின்றீர்...?" முதலில் என்ன நடந்திச்சுன்னு பாருங்கப்பா... ஐயோ.. ஐயோ....

பிரபல பதிவாளரும் அவருடைய நண்பரும் பக்கத்து ஊருக்கு ஒரு சந்திப்பு நிமித்தம் கடந்த வெள்ளிகிழமை பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளனர். போகும் இடம் சற்று தூரம் என்பதால் இடை இடையே வண்டியை நிறுத்தி தாகம் தீர்த்து பயணத்தை தொடர்ந்து சென்றுள்ளனர். இப்படி ஒருதரம் மோகினிபுரம் எனும் இடத்தில் சென்றுகொண்டு இருக்கும்போது திடீரென பிரபல பதிவாளருக்கு பசி எடுத்திருக்கிறது. உடனே தன் நண்பனை நல்லதொரு கடையில் வண்டியை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். அவரும் ஒரு பழக்கடையை பார்த்து நிறுத்தியிருக்கிறார். உடனே பசியில் வாடிய பிரபலம் கடையில் பழுத்த மல்கோவா மாம்பழம் இருப்பதை பார்த்ததும் வாயை பிளந்திருக்கிறார். உடனே கடைகாரர் இரண்டு மாம்பழங்களை வெட்டி சாப்பிட கொடுத்திருக்கிறார். இதில் என்ன விசேடம் என்றால் நம்ம பிரபலம் மாம்பழம் சாப்பிடும்போது ரசித்து ருசித்து மெய்மறந்து சாப்பிடுவாராம். அப்போதும் அப்படித்தான் அவர் மெய்மறந்து மாம்பழத்தின் பருப்பை சாப்பிடும்போது அவர் அவரை அறியாமல் "ம்ம்ம்ம் ஆ... ம்ம்ம் ஆ..." என்று சத்தமிட்டபடி சாப்பிடிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அவரின் நண்பருக்கு தன் மனைவியிடம் இருந்து கைபேசி அழைப்பு வந்திருக்கிறது. உடனே அவரும் எடுத்து பேசியிருக்கிறார். பேசும்பொழுது இவரின் இந்த "ம்ம்ம்... ஆ...." சத்தத்தை உணர்ந்த நண்பரின் மனைவி, சரி நீங்க வீட்ட வாங்க பேசுறன் என்று வைத்துவிட்டார். என்னவென்று புரியாத நண்பர் அதை விட்டுவிட்டு நண்பருடன் தானும் மாம்பழம் சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்து சந்திப்பை முடித்துவிட்டு இருவரும் அவர்களின் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

அடுத்த நாள் நண்பர் பிரபல பதிவாளருக்கு கைபேசி அழைப்பு எடுத்து கண்டபடி அழுது புலம்பியிருக்கிறார். நண்பா நீ மாம்பழம் சாப்பிட்ட ஸ்டைல்ல என்ற குடும்பமே ரெண்டாக பிரிந்துபோய்விட்டது எனகூறி நடந்தவற்றை விளக்கியிருக்கிறார். இதைகேட்ட நம்ம பதிவாளர் என்ன கொடுமைடா இது ஒரு மனிதன் சுதந்திரமா சாப்பிடக்கூட முடியலையே என்று வருத்தத்துடன் தனக்குத்தானே நோந்துவிட்டு, அன்றிலிருந்து மாம்பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு. மாங்காய் சாப்பிடுவதை ஆரம்பித்தாராம்


இதுதான் நம்ம பிரபல பதிவாளரின் ம்ம்... ஆ... பதிவு.

சரி இப்போ யாரு அந்த பிரபல பதிவாளர் என்று பார்ப்போம்... பார்த்தவுடன் நீங்க அப்படியே ஷாக் ஆயிடுவீங்க.

அந்த பிரபல பதிவாளர் வேறு யாருமில்ல "நான்தான்" ஹீ ஹீ.....!

நண்பர்களே நீங்க செம கடுப்பா இருப்பிங்க என்னு புரியுது. அதற்கு முன்னாடி இதையும் கொஞ்சம் படிங்க. நானும் எத்தின நாளைக்குத்தான் நல்ல பதிவே போடுறது. ஒழுங்க கமென்ட் கூட வருகிறது இல்ல, அதுதான் இந்த சூசைட் பதிவு. என்ன நடந்தாலும் பரவாயில்லை. இந்த பதிவால் நாம ஒரு கலக்கு கலக்கனும் என எண்ணி உட்காந்து, உறங்கி ஓடி திரிந்து யோசித்து இந்த பதிவை எழுதினேன்.

இப்போ சொல்லுங்க நண்பர்களே இது யார் குற்றம்....?

நண்பனின் மனைவியின் குற்றமா...? இல்லை நன்றாக சுவைத்து சாப்பிட்ட நாக்கின் குற்றமா...?

ஏதோ எப்படியோ... உங்கள் வாய் சற்று திறந்து சிரித்திருந்தால் கருத்தும் ஓட்டும் போட்டுங்க இல்ல கடும் கடுப்பாகி உள்ளுக்குள்ளே சிரித்திருந்தால் ஓட்டும் கருத்தும் போடுங்க.... ஹீ ஹீ...! (இவன் திருந்தமாட்டான்)

கடைசியா ஏதாவது சொல்லனுமே... ம்ம்ம் என்ன சொல்லுறது....? ஐடியா,

"இனி ஆட்டம் ஆரம்பம்...!" ஹா ஹா ஹா.....!

நட்புடன்,
நா.நிரோஷ்.





Comments

  1. ஹா ஹா செம காமடி
    நீங்க மாங்காய் மட்டும்தான் அப்பிடி சாப்பிடுவீங்களா, இல்ல.....................
    ஹி ஹி

    ReplyDelete
  2. அவர் மாங்காய்/மாம்பழம் மட்டுமில்லை,தேங்காய் சைசில்(மாங்காய்/மாம்பழம்) இருந்தாலும் சாப்பிடுவார்!

    ReplyDelete
  3. மாங்காயுடன் சேர்த்துச் சாப்பிட்டதையும் பதிவாக்கினீர்கள் பாருங்கள் சூப்ப்ர் ஐடியா கலக்குங்கள்!

    ReplyDelete
  4. நடத்தையா நாடகத்த நீங்க எதிர்பார்த்தபடியே கொமொன்ஸ் வரதொடங்கீற்றுபோல...!!!!? எங்களுக்கும் மாம்பழங்கள் பிடிக்குமையா...

    மாங்கொட்டையை நீங்க சாப்பிடிவீங்களா.. இல்ல சூப்புவீங்களா? ஹி ஹி ஹி 

    ReplyDelete
  5. //ஹா ஹா செம காமடி
    நீங்க மாங்காய் மட்டும்தான் அப்பிடி சாப்பிடுவீங்களா, இல்ல.....................
    ஹி ஹி//

    நன்றிகள் மதுரன்....! இங்க எங்கப்பா ஒரே பாலைவனமா இருக்கு முடியல...!

    ReplyDelete
  6. //அவர் மாங்காய்/மாம்பழம் மட்டுமில்லை,தேங்காய் சைசில்(மாங்காய்/மாம்பழம்) இருந்தாலும் சாப்பிடுவார்!//

    நன்றிகள் சகோ....! முயற்சி செய்து பார்போம்.!

    ReplyDelete
  7. //நடத்தையா நாடகத்த நீங்க எதிர்பார்த்தபடியே கொமொன்ஸ் வரதொடங்கீற்றுபோல...!!!!? எங்களுக்கும் மாம்பழங்கள் பிடிக்குமையா...

    மாங்கொட்டையை நீங்க சாப்பிடிவீங்களா.. இல்ல சூப்புவீங்களா? ஹி ஹி ஹி //

    நன்றி ஐயா...! அப்போ மாம்பழம் வாழ்க..!

    ReplyDelete
  8. //Nadakkattum.....
    Nadakkattum......//

    நன்றிகள் சகோ...!

    ReplyDelete
  9. //மாங்காயுடன் சேர்த்துச் சாப்பிட்டதையும் பதிவாக்கினீர்கள் பாருங்கள் சூப்ப்ர் ஐடியா கலக்குங்கள்!//

    நன்றிகள் சகோ...! இனி நீங்கள் தனிமரம் அல்ல.. நாங்களும் இருக்கிறம்.. தோப்புதான் ஓகே.

    ReplyDelete
  10. //ஹஹஹா!//

    நன்றி விக்கியுலகம் சகோ...!

    ReplyDelete
  11. அடப்பாவிகளா... மாம்பழம் சாப்புட்டதுல இவ்வளவு வில்லங்கமா?

    ReplyDelete
  12. மாம்பழத்த அப்புடியே முழுசா வாயால தோல கடிச்சு துப்பி சூப்பி,சூப்பி சாப்பிட்டா இன்னா டேஸ்ட் தெரியுமா!ட்ரை பண்ணிப் பாருங்க!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?