கிங்கிணி கிழங்குக்கடை - "கிரிக்கெட் மேட்சு"
----------------------------------------------------------
சகோதரம் - 'அத ஏன் கேக்குறீங்க அண்ணே...'
கிங்கிணி - 'என்னப்பா...! என்ன நடந்திச்சி....?'
சகோதரம் - 'முந்தாநேத்து பக்கத்து ஊருக்கு கிரிக்கெட்
மேட்சுக்கு போனோம் போகும் வழியில ஒரு
பஞ்சாயத்தா போய்த்து...'
கிங்கிணி - 'உங்களுக்கு இதே வேலையாடா...?
சரி என்ன நடந்திச்சு..?'
சகோதரம் - 'அன்று கலையிலே நம்ம பசங்க எல்லோரும் சரக்க
போட்டுத்தாங்க மேட்ச்சு ஒரு மணிக்கு இருந்திச்சு,
பைக்ல போன சரிவராது என்று சொல்லி பஸ்சில
புறப்பட்டோம்..'
கிங்கிணி - 'காலையிலே போட்டுதீங்கலாடா.. அப்புறம்'
சகோதரம் - 'அப்புறம் என்னத்த சொல்லுறது, அடிச்ச மப்புல
இவனுகள் அடிச்சஅலப்பறை இருக்கே....'
கிங்கிணி - 'அதுசரி என்னடா நடந்திச்சு...?'
சகோதரம் - 'யாரு நம்ம சுந்தருக்கு பக்கத்தில ஒரு வாத்தியார்
இருந்திருக்கு அவர் இவன பார்த்து 'ஏம்பா இப்படி
காலையிலே குடிக்கிறீங்க' என்று கேட்டிருக்கார்
போல... அம்புடுத்துதான்..'
கிங்கிணி - 'என்ன வாத்தி வம்ப விலைகொடுத்து
வாங்கியிருக்கு போல...?'
சகோதரம் - 'வாத்திட வாய்க்குள்ளே வாந்தி எடுத்துட்டான்
அண்ணே... எப்படி இருக்கும்...?'
கிங்கிணி - 'அடப் பாவி..! அப்புறம் என்னாச்சு..?'
சகோதரம் - 'பிறகு வாத்திய ஒரு வழியா சமாதானம் செஞ்சிட்டு
திரும்பினா.. நம்ம முருகேசு இருக்கானே...
அவன் பாத்தான் ஒருவேலை..'
கிங்கிணி - 'என்னப்பா செஞ்சான்..?
சகோதரம் - 'அவனுக்கு முன்னால ஒரு அம்மா மகளோட
உக்காந்து இருந்திருக்கு, 'இது உங்க மகளா..?'
என கேட்டிருக்கான், அந்த அம்மாவும் 'ஆமாப்பா
என் மகள்தான்' என சொல்லிருக்கு, அதுக்கு
இவன் 'ஏம்மா இப்படி வெறும் கழுத்தோட
புள்ளைய வெளியில கூட்டி வரலாமா..?'
என கேட்டுபோட்டு கழுத்தில கிடந்த மூன்று
பவுன செயின கழட்டி அந்த புள்ள கழுத்தில
போட்டுபோட்டான்..!
கிங்கிணி - 'அட கருமமே... அஞ்சுருவா கேட்டா அருவாள
தூக்குற பயளாடா இப்படி செஞ்சான்...?'
சகோதரம் - 'பிறகு பெரிய கலவராமா எழுந்திச்சு,
எல்லோரையும் ஒரு வழியா சமாதனப் படுத்தப்
பட்ட பாடு இருக்கே...? அதுக்குள்ள இவன் தம்பி..'
கிங்கிணி - 'அது என்னத்த பண்ணிச்சு..?'
சகோதரம் - 'றைவருக்கு பக்கத்தில போய் நின்னுத்து,
"அண்ணே வீட்ட்ல எப்படி அண்ணி சுகமா
இருக்காங்களா..? என கேட்டிருக்கு.
அடுத்த நிமிடமே அந்தாள் பஸ்ஸ நிறுத்திப்போட்டு,
இவனோட சண்டைக்கு வந்துட்டார், பிறகு
எல்லோரும் ஒருவழியா சமாதானம் செஞ்சி
வண்டிய எடுக்க வைத்தோம்.'
கிங்கிணி - 'அட உறவுக்கு பொறந்த பயபுள்ள பார்த்த
வேலைய பாத்தாயா..?'
சகோதரம் - 'போங்கண்ணே இவனுகள் படுத்தின பாடு,
அடுத்து நம்ம பீட்டர், ஏற்கனவே நல்ல பருவம்,
இதில "நாங்களெல்லாம் கம்பிய புடிக்காமலே
நிப்பமுல்ல" என்று வடிவேலு மாதிரி பீட்டர்
உட்டுத்து கடைசியா றைவர் பிறேக்க போட,
முன்னுக்கு இருந்த பொண்ணோட மடியில விழ,
அவ புருஷன்காரன் இவன போட்டு அடிக்க
"அப்பா பெரிய அடிதடியா போச்சு"
கிங்கிணி - 'ஏண்டா இதுவேறயா...'
சகோதரம் - 'போங்க அண்ணே, கடைசியா பொறுத்துப்
பொறுத்துப் பார்த்த எல்லோரும் பொங்கி எழ,
றைவர் பஸ்ஸ போலீஸ்டேசன் உள்ள விட்டுத்தான்'
கிங்கிணி - 'நல்லா மாட்டுநீங்க மாப்ளே..'
சகோதரம் - 'ஓம் அண்ணே, எங்க எல்லோரையும் அங்கேயே
தடுத்து வச்சுட்டாங்க, கடைசியா நம்ம சமுத்திரம்
அண்ணாச்சி வந்து ஜாமீன்ல எடுத்துவிடார்.'
கிங்கிணி - 'அப்புறம் மேட்சு என்னாச்சு..?'
சகோதரம் - 'நேரம் போயிட்டு அண்ணே மேட்சு விளையாடல,
அப்படியே வந்து திரும்ப போலீஸ்டேசன் போய்
விடுதலை ஆகி வந்ததாம் என்று சொல்லி
ஒரு பார்ட்டி போட்டுத்தானுகள்'
கிங்கிணி - 'அட கருமம் புடிச்ச பயங்களா... நீங்க திருந்தவே
மாட்டிங்க..'
சகோதரம் - 'அதை விடுங்க அண்ணே. ஒரு டீஸ் கிழங்கு தாங்க'
நேரம்போகுது இன்னைக்கு இரவைக்கு கோயில்
திருவிழாவிற்கு போகணும் என்று சொன்னானுகள்'
கிங்கிணி - 'அட கொப்புறானே, நான் இன்னைக்கு திருவிழாக்கு
போகலடோ.. அங்க என்ன கூத்து காட்ட
போறானுகளோ..'
சகோதரம் - 'ஐயோ அண்ணே நீங்க வாங்க.. அப்படி ஒன்னும்
நடக்காது'
கிங்கிணி - 'இல்லப்பா ஆள விடுங்க சாமி'
சகோதரம் - 'சரி அண்ணே வழக்கம் போல கணக்கில போடுங்க,
நான் நாளைக்கு வாறன்'
கிங்கிணி - 'நீங்க என்னைக்குடா காசு தந்திருக்கீங்க...
சரி சரி போ.... நாளைக்கு வா...! கடவுளே நீ இன்னைக்கு
கோயில விட்டு போறது நல்லம்'
(நல்லது மீண்டும் அடுத்த பதிவில சந்திப்போம்)
நட்புடன்,
நா.நிரோஷ்.
சரி சரி அப்படியே ஓட்டபோட்டுத்து போங்க மக்கா.
சும்மா கலக்கி இருக்கீங்க.....
ReplyDelete