வாழ்வின் அழகிய தருணங்கள் அனுபவிப்போம் வாங்க..!




வணக்கம் வணக்கம் வணக்கம்...! என்ன நண்பர்களே இவ்வளவு சோர்ந்து போய் இருகிங்க...? என்னுடைய பதிவுகளை படித்து வந்துமா உங்களுக்கு இந்த நிலமை... (டேய் கடுப்பேத்தாம விளக்கத்த சொல்லுடா). என்ன வாழ்க்கைடா இது அப்படி சொல்ல தோணுதா? பேசமா சாகணும் போல இருக்கு அப்படின்னு தோணுதா...? அப்படின்னா கண்டிப்பா இந்த பதிவ படிங்க.

என்னதான் நாம் கடும் பிசியாக இயங்கிக்கொண்டிருந்தாலும் இடைஇடையே நமக்கு சற்று ஆறுதல் தேவைப்படுகிறது. அந்த நேரமாவது நாம் நம் வாழ்வின் அழகிய தருணங்களை உணர்ந்து கொள்ளலாமே. அது ஒன்றும் பெரிய விடயம் இல்லைங்க. ரொம்ப இலகுவானது இயல்பானது.


எத்தனையோ பேர் எனக்கு நிம்மதி இல்ல நிம்மதி இல்ல என்று சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் நிச்சயம் அவர்களால் வாழ்க்கையை அனுபவிக்கக் முடியும் அதற்காக அவர்கள் எந்தவிதமான போதனையோ, தியானமோ, கடவுளை நாடியோ செல்லவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய நடைமுறை வாழ்க்கையை நாம் அழகாக மாற்றுதல் மூலம் அனைத்துவிதமான வாழ்வின் அழகிய தருணங்களை நான் உணர்ந்துகொள்ள முடியும். அதற்க்கு நான் தரும் இந்த தருணங்களை பாருங்கள், ஒருவேளை இதைப் படித்தவுடன் என்னடா இது சின்னபுள்ள தனமாக இருக்கு என தோன்றலாம். ஆனால் இப்படிபட்ட செயல்களில்தான் நீங்கள் கோடி கோடியாக பணம் கொடுத்தும் வாங்க முடியாத மனதிற்கு நிறைவான நிம்மதிகள் குவிந்து கிடக்கின்றன.

  • ஒவ்வொரு நாளும் தவறாமல் அம்மா/மனைவி யாரவது ஒருவரின் கையால் பிசைந்த ஒருபிடி உணவாவது உட்கொண்டு பாருங்கள்.
  • பிசியாக எங்கேயாவது போகின்ரீரா..? அப்போது யாரவது உங்கள் முன்னால் கடுமையான சிரமத்துடன் எதையாவது சுமந்து வருகின்றாரா..? உடனே அவருக்கு உதவி செய்துவிட்டு, உங்கள் வேலையை தொடர்ந்து பாருங்கள்.
  • நீங்கள் காதலிப்பவரா...? உங்கள் காதலுக்கு முதல் நண்பனாக உங்கள் அம்மா/அப்பா இருவரில் யாரையாவது தேர்ந்தெடுத்து காதலை தொடர்ந்து பாருங்கள்.
  • நல்ல நண்பர்கள் பிடிக்குமா வாரத்திற்கு ஒருமுறையாவது நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனின் அம்மா சமைக்கும் சமையலறை சென்று அம்மா சாப்பிட ஏதாவது இருக்கா என்று கேட்டு சாப்பிட்டு பாருங்கள்.
  • வாரத்திற்கு ஒருதடவை அம்மா/மனைவி உடன் ஆலயம் அல்லது சந்தைக்கு சென்று பாருங்கள்.
  • வீட்டில் சகோதரிகளுடன் அதிகமான நேரம் பேசிமகிழுங்கள்.
  • நண்பர்கள்/உறவினர்கள் வீட்டில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முன்னின்று பாருங்கள்.
  • பயணங்கள் மேற்கொள்ளும்போது பாடல்களை கேளுங்கள்.
  • அம்மா/மனைவி சமைக்கும்போது சிறிதேனும் உதவிசெய்து பாருங்கள்.
  • ஒரு நாளைக்கு ஒரு முத்தமாவது எங்கேஎனும் யாரவது ஒரு குழந்தைக்கு கொடுத்துவிடுங்கள். (அப்பா சாமிகளே குழந்தைகள் நினைவு இருக்கட்டும்).
  • வீட்டுதோட்டங்களில் ஒரு வாழையாவது நட்டுப் பாருங்கள்.
  • அப்பாவோடு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருவிடையத்தை பற்றி பேசிப்பாருங்கள்.
  • பாடிக்கு பாக்கு இடித்து கொடுத்துப் பாருங்கள்.
  • தாத்தாவுக்கு தாடி எடுத்துப் பாருங்கள்.

இப்படி எவ்வளவோ செயல்கள் இருக்கின்றன நம்முடைய வாழ்வில் நாம் அழகிய தருணங்களை பெற்றுக்கொள்ள. இதற்க்கு நீங்க காசு பணமெல்லாம் செலவுசெய்யவேண்டிய அவசியம் இல்லை, உங்கள் ஆணவம், வெட்கம், தாழ்வுமனப்பான்மை எல்லாவற்றையும் சற்று ஓரங்கட்டினாலே போதும்.

என்ன நான்பர்களே நான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை இதே போன்று எத்தனையோ சந்தர்ப்பங்கள் நம்முடைய வாழ்வில் வந்து போகின்றன. ஆனால் நாம் யாரும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துகொள்வதில்லை. என்னசெய்வது நாம் எல்லோரும் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைபடுபவர்கள் தானே.

இருந்தாலும் நான் சொன்னதை சற்று முயற்சிசெய்து பாருங்கள், வாழ்வின் அழகிய தருணங்களை அனுபவித்து பாருங்கள்.

நட்புடன்,
நா.நிரோஷ்.



Comments

  1. நிரோஷ், இதில் எதுவுமே சின்னப்பிள்ளத்தனமாக இல்லை. அனைத்தும் அருமையான யோசனைகளே. இதில் எதாவது 4 செயல்கள் செய்தாலே நம் மனம் குளிர்ந்து விடும். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //நிரோஷ், இதில் எதுவுமே சின்னப்பிள்ளத்தனமாக இல்லை. அனைத்தும் அருமையான யோசனைகளே. இதில் எதாவது 4 செயல்கள் செய்தாலே நம் மனம் குளிர்ந்து விடும். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் காந்தி, தங்களின் வருகைக்கும் இந்த அழகிய கருத்திற்கும்.

    ReplyDelete
  3. //
    ஒவ்வொரு நாளும் தவறாமல் அம்மா/மனைவி யாரவது ஒருவரின் கையால் பிசைந்த ஒருபிடி உணவாவது உட்கொண்டு பாருங்கள்.
    //

    அருமை ...

    ReplyDelete
  4. //
    நல்ல நண்பர்கள் பிடிக்குமா வாரத்திற்கு ஒருமுறையாவது நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனின் அம்மா சமைக்கும் சமையலறை சென்று அம்மா சாப்பிட ஏதாவது இருக்கா என்று கேட்டு சாப்பிட்டு பாருங்கள்.

    //


    சுகமான விஷயம்

    ReplyDelete
  5. நன்றிகள் "என் ராஜபாட்டை"- ராஜா.... என்றும் தங்கள் ஆசியுடன்.

    ReplyDelete
  6. அருனையான யோசனைகள் நண்பா...

    அசத்தல் பதிவு.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. //அருனையான யோசனைகள் நண்பா...//

    நன்றி மதுரன்.

    ReplyDelete
  8. //ஒரு நாளைக்கு ஒரு முத்தமாவது எங்கேஎனும் யாரவது ஒரு குழந்தைக்கு கொடுத்துவிடுங்கள். //

    பிஞ்சு விரல்களால்
    உதட்டைத் தொட்டு
    முத்தம் யாசிக்கும்
    குழந்தைகளைக் கண்டால்
    கொள்ளைப் பிரியம்
    எனக்கு…!

    குழந்தையின் முத்தத்திற்க்கு ஈடு இணை ஏதுமில்லை

    http://www.tamilparents.com/2011/09/blog-post_21.html

    ReplyDelete
  9. ஒரு நாளைக்கு ஒரு முத்தமாவது எங்கேஎனும் யாரவது ஒரு குழந்தைக்கு கொடுத்துவிடுங்கள். (அப்பா சாமிகளே குழந்தைகள் நினைவு இருக்கட்டும்).//

    நல்ல வேளை சொன்னிங்க!
    ஹிஹி !

    நல்ல நல்ல தருணங்களை அறிமுகப்படுதி இருக்கீங்க!

    ReplyDelete
  10. //ஒரு நாளைக்கு ஒரு முத்தமாவது எங்கேஎனும் யாரவது ஒரு குழந்தைக்கு கொடுத்துவிடுங்கள். (அப்பா சாமிகளே குழந்தைகள் நினைவு இருக்கட்டும்).//

    நல்ல வேளை சொன்னிங்க!
    ஹிஹி !

    நல்ல நல்ல தருணங்களை அறிமுகப்படுதி இருக்கீங்க!//

    நன்றிகள் கோகுல், நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு..!

    ReplyDelete
  11. வீட்டில் சகோதரிகளுடன் அதிகமான நேரம் பேசிமகிழுங்கள்.அத்துடன் அவர்களூக்கு விருப்பமான சிற்றுண்டிகளை வெளியில் வாங்கி வந்து கொடுத்து பாருங்கள்!!!!

    ReplyDelete
  12. //வீட்டில் சகோதரிகளுடன் அதிகமான நேரம் பேசிமகிழுங்கள்.அத்துடன் அவர்களூக்கு விருப்பமான சிற்றுண்டிகளை வெளியில் வாங்கி வந்து கொடுத்து பாருங்கள்!!!!//

    ம்ம் நன்றாக இருக்கு, நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தோழா...!

    ReplyDelete
  13. நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.