கிங்கிணி கிழங்குக்கடை - "திருவிழாவிற்கு போறோம்"



சகோதரம் :- "என்ன கிங்கிணி அண்ணே திருவிழாக்கு வரமாடன் என்று அடிச்சு சொன்னீங்க இப்ப வந்திருகிங்க...?"

கிங்கிணி :- "இல்லடா உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேணாமா அதுதான் வந்தேன்..."

சகோதரம் :- "என்ன எங்களுக்கு பாதுகாப்பா... கேச கேட்டா... சும்மா போங்கண்ணே தமாஸ் பண்ணாம..."

கிங்கிணி :- "சரி விடுடா அதுதான் வந்தாச்சே... என்ன இன்னும் பார்க்கலப் போல...?"

சகோதரம் :- "எங்க அண்ணே... போத்தலுக்கு சரியான தட்டுப்பட்டு, பசங்க போயிருக்காங்க பொறுங்க பார்ப்போம்..."

கிங்கிணி :- "ம்ம் அதுதானே பார்த்த என்னடா திருவிழா இன்னும் கள கட்டலே என்று..."

சகோதரம் :- "சரி அண்ணே எத்தின நாளைக்குத்தான் இப்படியே ஒண்டிக்கட்டையா இருக்க போறிங்க... திருவிழாக்கு வந்திருக்கிற ஒரு சிட்ட பார்த்து செட்டாக்குறது..."

கிங்கிணி :- "டே உங்களுக்கு இதே வேலையாடா...? ஏன் நான் நல்லா இருக்கிற பிடிக்கலையடா..."

சகோதரம் :- "அதுக்கு இல்லண்ணே, உங்க அழகுக்கும் அறிவுக்கும் ஒரு சோடி சேர்ந்த எப்படி இருக்கும் அதுதான் சொன்னேன்..."

கிங்கிணி :- "மாப்ளே போதும் நிப்பாட்டு, இன்னும் ஒண்ணுமே உள்ள விடல அதுக்குளேவா...? சோடியாம் சோடி..."

சகோதரம் :- "அதுசரி உங்கட பழைய செட்டப்பு நம்ம நாட்டாம சம்சாரமாமே..?"

கிங்கிணி :- "யார சொன்னா...ஐயோ புதுசு புதுசா கிளப்புறானுகளே...."

சகோதரம் :- "அண்ணே இதோ நாட்டாமையே வாரார் கேட்டிருவோமா...?"

கிங்கிணி :- "அடே நில்லுப்பா.. என் தங்கம், இப்பதான் ஒரு கிழங்குகடைய போட்டு லைவ் ஸ்மூத்தா போகுது... அதுக்குள்ளே ஏன்பா இந்த கொலைவெறி....?"

சகோதரம் :- "சரி விடுங்க அண்ணே நான் நாட்டாமை சம்சாரத்திடமே கேட்டுக்குரன்..."

கிங்கிணி :- "ஐயோ விடமாட்டன் போலிருக்கே...."

சகோதரம் :- "ஏன்னே அவ அம்புட்டு அழகா....?"

கிங்கிணி :- "சும்மா போடா..... அதவேற கேட்டுத்து..."

சகோதரம் :- "அட சொல்லுன்ன..."

கிங்கிணி :- "சரி சுருக்கமா சொல்லுறன் கேளு.... சும்மா தாளிச்சி வைச்ச கடலைமாதிரி பார்பதற்கு அப்படி லட்சணமா இருப்பா."

சகோதரம் :- "ஓ..! அதுதான் நாட்டாமை வந்து வாய்க்குள்ள அள்ளிபோட்டு மேன்னுத்து போய்த்தாரோ...?"

கிங்கிணி :- "அடபாவி உன்னிடம் யாரவது பேசுவாங்களா...?"

சகோதரம் :- "சரி கோபிகாதிங்க... எனக்கொரு சந்தேகம்.."

கிங்கிணி :- "என்னடா...?"

சகோதரம் :- "இந்த முதல் ராத்திரிக்கு ஒத்திகை தேவையா இல்லையா..?"

கிங்கிணி :- "ஏண்டா என்னைப்பார்த்தா உனக்கு என்ன தோணுது...? என்ன பார்த்து எப்படி அந்த கேள்வியை நீ கேட்கலாம்,? என்னவோ நான் மட்டும் அதில டிப்ளோமா பெற்றமாதிரி, எப்படிடா என்ன பார்த்து நீ அந்த கேள்விய கேட்கலாம்...?

சகோதரம் :- "சும்மா போங்க அண்ணே நடிக்காம, உங்க கடைக்கு பின்னால நம்ம சரசு வந்துபோகுதாமே..?"

கிங்கிணி :"அட நாறப்பயல்களா, நாசமா போக... அதுகிட்டதான்டா நான் கடைக்கு மிளகாய் தூள் வேண்டுறது. கடைசியா என்ன அதோட சேர்த்து வைத்து அரைச்சுபொட்டிங்கலேடா....."

சகோதரம் :- "சரி விடுங்கண்ணே அவ்வளவுதானா..."

கிங்கிணி : "அதுசரிடா கடைக்கு வார பயபுள்ளைங்க எல்லோரும் பேஸ்புக் பேஸ்புக் என்று அடிக்கடி பேசுரானுகள், என்னடா அது ஏதும் புதுச்சரக்கா....?"

சகோதரம் :- "இல்லன்னே அதைவிட பெரியது, இன்டர்நெட்டில் பார்க்கிறது, நமக்கு கேர்ள் பிரண்ட் வேணும்னா அங்க போகணும், ஒரே பலான படமெல்லாம் பார்க்கலாம்..."

கிங்கிணி : "அட இந்த கிழங்குக்கு பொறந்த பயபுள்ளைங்க இதைத்தானா பேசுறது... சரி உன்கிட்டையும் எதோ லப்பு டப்பு இருக்காமே அதை ஒருக்கா நாளைக்கு கடைக்கு எடுத்து வாயன். "

சகோதரம் :- எதற்கு...?

கிங்கிணி :- "அதான் அந்த பேஸ்புக்க கொஞ்சம் பார்ப்போம்..".

சகோதரம் :- "????????????????"

கிங்கிணி :- "சரி சரி முறைக்காத... வா திருவிழா தொடங்கபோகுது உள்ளே போவோம்."

சகோதரம் :- "சரி வாங்க உள்ள போவோம்"

கிங்கிணி :- "ஏய் நில்லு..! எப்படிடா என்ன பார்த்து நீ அந்த கேள்விய கேட்கலாம்...?"

சகோதரம் :- "????????????????????"
----------------------------------------------------------------------------------------------------------------------
"நன்றி மீண்டும் சிந்திப்போம்......"
----------------------------------------------------------------------------------------------------------------------





Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?