நிலா உங்களுக்கு எப்படி..? ஒரு சுவை விருந்து.

ஐயோ.....
இந்த நிலா படும் பாடு இருக்கே சொல்லமுடியாதுங்க அம்புட்டு அநியாயமும் இந்த அம்புலிக்கு நடக்குதுங்க. யார் யார்தான் இதற்க்கு சொந்தம் கொண்டாடுவது என்று ஒரு அளவே இல்லேங்க..!

  • பிள்ளைக்கு சோறு ஊட்ட நிலா...
  • ஆயாவிற்கு வடை சுட நிலா..
  • அண்ணனுக்கு சாயா போட நிலா...
  • காதலுக்கு தூதுவனாய் நிலா...
  • கவிஞனுக்கு கருப்பொருளாய் நிலா...
  • மப்புக்கு ஊறுகாயாய் நிலா...
  • மாப்புக்கு மருமகனாய் நிலா...
  • விஞ்ஞானிக்கு ஆராய்ச்சியாய் நிலா...
  • விவசாயிக்கு விளைச்சலாய் நிலா...
  • பூசாரிக்கு பூஜைக்கு நிலா...
  • பூமிக்கு இரவுநேர ஒளியாய் நிலா...

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்க. என்னதான் மனிதன் வளர்ச்சி பெற்றாலும், நிலா என்பது ஒரு கிரகம் என்பது பற்றி தெரிந்திருந்தாலும், இன்றும் மனிதனின் உணர்வுகளோடு ஓட்டியிருந்து ரசிப்பதாக நிலா இருந்துகொண்டேதான் இருக்கின்றது.

குழந்தைக்கு அம்மா சோறூட்ட நிலாவை காட்டுவதில் நியாம் இருக்குங்க. குழந்தை நிலா பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் இந்த காதலர்கள் நிலாவோட அடிக்குற கூத்து இருக்கே அம்மா தாங்கமுடியலைட சாமி (இங்க வேற என்னாவாம்). நேரில் சொல்ல பயந்துபோய் தோழியாய், தோழனாய் நினைத்து எல்லாவற்றையும் நிலாவிடம்தான் கொட்டித்தீர்ப்பது. பாவம் நிலா ஏற்கனவே தேய்ந்து தேய்ந்து உஞ்சலாடித்து இருக்குது. இதில் இவங்கட இம்சை வேறு.

எது எப்படி இருப்பினும் நாம் ஒவ்வொருவோரும் ஒவ்வொரு கற்பனையுடன் நிலாவை ரசிக்கின்றோம். அப்படி இங்கு சிலபேர் எப்படி நிலாவை பார்த்து ரசிக்கின்றார்கள் என்பதை. அழகிய படங்களுடன் பார்ப்போமா...?

"நித்தம் நிலா சாமைக்கின்றேன் என் உடல் நிறை தேய்கின்றேன்....!"

"என் மௌனப்போர்க்களத்தில் என்றும் நிலா நீதான் ஆயுதம்.."

"வளர்வதற்குள் வளைத்துப் போடவேண்டும் உனை முடியுமானால் தப்பிவிடு"

"நிலவின் கறையை நித்தம் துடைக்க முயல்கின்றேன் முடியவில்லையே...!"

"நான் எங்கு சென்றாலும் நீதான் யன்னல் நிலா...!"

"எங்கே ஓடுகின்றாய் இன்று உனை கட்டிவைக்கபோகின்றேன்.."

"எனைப்போல ஏனோ ஏங்குகிறாய் இதோ வருகிறேன் ஏணிமீது ஏறி உன் தோள்மீது கைபோட்டு ஆறுதல் சொல்ல...!"

"என் சுவாசக் காற்று நிரம்பிய பலூன் நீ.. உனை என்றும் விடமாட்டேன்..!"

"என் யன்னலில் மட்டும் ஏனோ நீ தேய்பிறையாய்...?"

"என் எண்ண அலைகளில் என்றும் உனை அளவிட முடியாது...!"

"விதவிதமாய் கடிகாரம் இருந்தாலும் என் கால நேரம் எல்லாம் உனைச்சுற்றியபடியே...!"

"என் சட்டைப் பையினுள் நிலா இருந்தாக வேண்டும் மலராக.. என் உயிராக... மன்னித்துவிடு வலிக்குமானால்..!"

"எங்கள் கைகள் இணைகின்றது என்றும் உனை நேசித்தால்..!"

---------------------------------------------------



நண்பர்களே இந்தப் பதிவு உங்களை ரசிக்க வைத்திருந்தால் உங்கள் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் மறக்காமல் போடுங்க...!

நட்புடன்,
நா.நிரோஷ்.


Comments

  1. பஸ்ல நிலா ரிலேட்டட் ஸ்டில்ஸ் பார்த்ததும் கரெக்ட்டா யூஸ் பண்ணீக்கிட்ட உங்க சமயோசிதத்துகு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.