கண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை
பள்ளிக்கூட இறுதி மணியும் அடித்தாகிவிட்டது. பசித்த வயிறுடன் புத்தக பையை தன் நெஞ்சில் அணைத்தபடி விறுவிறு என வீடு நோக்கி நடக்கலானாள் கண்ணம்மா. வரும்வழியில் வழமைபோல வீதியின் அருகில் உள்ள புளிய மரத்தின் கீழ் வீழ்ந்து கிடந்த ஒரு புளியம்பழத்தை எடுத்து பையுனுள் வைத்துகொண்டாள். வீட்டின் அருகில் வந்தவுடன் குறுக்காக வந்த அடுத்த வீட்டு சுந்தரி மாமி, "கண்ணம்மா நான் கந்தாசாமி அண்ணன் வயலுக்கு நெல்கதிர் பொறக்க போகபோறன் அம்மாவிட்ட சொல்லுடா சீக்கிரம் வரட்டாம் என்று" என சொல்லிவிட்டு சென்றாள். "சரி மாமி" என சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்த கண்ணம்மா, முகத்தை அலம்பிவிட்டு கஞ்சிப் பானையை திறந்து பார்த்தாள் வெறுமையாக இருந்தது உள்ளே ஒன்றும் இல்லை. கோபத்துடன் "அம்மா.. அம்மா" என கத்தியவாறு உள்ளே சென்றாள். அங்கே அவளின் அம்மா படுத்த படுக்கையாக கிடந்தாள். "ஐயோ..! அம்மா.. என்னாச்சு உனக்கு..?!" என தவிதவித்த குரலில்,அருகில் சென்று அமர்ந்து வினாவினாள். "ஒண்ணுமில்லடா புள்ள.. கொஞ்சம் தலைவலிடா.. புள்ளே வயலுக்கும் போகலடா..கஞ்சும் காச்சல குறுணல