பௌத்த மதமும்... இலங்கை அரசியலும்..!
நான் அண்மையில் படித்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன், இதில் பௌத்த மதம் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள எல்லாம் இருக்கின்றது. அதைவிட ஒரு பௌத்த சமயத்தை பின்பற்றுகின்ற இலங்கை அரசியல்வாதிகளின் செயல்களும் உங்கள் சிந்தைக்கு வராமல் இல்லை. எனவே இந்த கட்டுரையை படித்துவிட்டு நீங்களே முடிவெடுங்கள். அவர்கள் எல்லோரும் உண்மையில் பௌத்தர்கள்தானா இல்லையா என்பதை. பௌத்த சமயம் என்று எதை அழைக்கிறோம்? அரச வம்சத்தைச் சார்ந்த சித்தார்த்தர் என்பவர் தவத்தினை ஆற்றி ஞானம் பெற்று, புத்தர் என்று வழங்கப்பட்டார். புத்தர் மக்களுக்கு அறிவுறுத்திய அறவுரைகள் பௌத்த நெறியாயிற்று. அந்நெறியைப் பின்பற்றியோர் பௌத்தர் எனப்பட்டனர். அவர்தம் சமயம் பௌத்த சமயம் என வழங்கப்படலாயிற்று. பௌத்த சமயம் வடக்கே தோன்றி வளர்ந்ததாயினும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் பரவி, சிறப்புப் பெற்றது. இந்தியாவில் மட்டுமன்றி இந்தியாவிற்கு வெளியிலும் பரவிய பெருமையை உடையது அது. 5.1.1 அசோகரின் பங்களிப்பு பௌத்த சமயம் பல்வேறு இடங்களில் வேரூன்ற முக்கியக் காரணமாக அமைந்தவர் அசோக மன்னர். வடக்கே தோன்றிய பௌத்த சமயம் இந்தியாவின் பல இடங்களிலும் பரவ...