என்ன..? லவ்.. கவிதை... ஐயோ ராமா..?

ஐயோ...! ஐயோ...!
இதை கொஞ்சம் படிச்சு பாருங்கப்பா.... கேச கேட்டா..
"என்னடா மச்சி ஆள ரொம்ப நாளா காணோம்..
""ஒன்னும் இல்லடா மனசு சரியில்ல மச்சி..."
"என்ன மனசு சரியில்லையா?
டேய்... என்னடா சொல்லுற?
அதான் எந்த நேரமும் காதல் காதல் எண்டு பறந்து திரிவாயே...
இப்ப என்ன ஆச்சு? "
"அந்த அந்த பாழாப்போன காதல் தந்த பரிசுதான் மச்சி இந்த நிலைமை..."
"அதானே பார்த்த என்னடா மச்சி மூஞ்சி சும்மா வாழைகுலை மாதிரி தொங்குதே எண்டு...."
"டேய் சும்மா போடா.. நானே வெந்துபோய் இருக்கன்.."
"அது சரி மச்சி என்னடா நடந்துச்சு...
உன்ன அவளுக்கு பிடிகலையா? என்ன சொன்னா?"
"மச்சி நீ சொன்னமாதிரி காதலர் தினத்தன்று,
நீ எழுதிதந்த கவிதைய கொடுத்து என் காதல சொன்னன்டா.. ஆனா அவள்.............."
"என்னடா மச்சி, சொல்லுடா.. என்ன சொன்னா?"
கவிதைய படிச்சிட்டு, கவிதை நல்ல கருத்தா இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு - ஆனா
நீ கடும் கறுப்பா இருக்க எனக்கு உன்ன பிடிக்கல எண்டு சொல்லிபுட்டா மச்சி....!"
சரி விடுடா இந்த பொம்புளைங்க எப்பவும் இப்படித்தா...