Posts

Showing posts from August, 2011

என் யன்னல் நிலவே..!!!

Image
என் யன்னல் நிலவே.. என்னவள் கனவில் வருவாளென்று நேற்றிரவு நேரத்துடன் தூங்கிவிட்டேன்... சூரியனிடம் சொல்லி எனைச் சுட்டுவிடாதே...! ************************************************** என் முற்றத்து மல்லிகையே... அன்பானவளின் அழகிய புன்னகைகண்டு உனை நான் காணவில்லை நாளை மலராமல் நின்று எனை வாட்டிவிடாதே...! ************************************************** என் இரவுக் காற்றே... அவள் சுடிதார் பட்டு சிதறிய கற்று என் சுவாசக்காற்று ஆனதனால் எனைத்தழுவும் இன்பக்காற்று நீ எனை தவிக்கவிட்டுச் செல்லாதே...! ************************************************** கூவுகின்ற குயிலே... என் மயிலின் குரல் வயலின் போன்றதுதான் அதற்காய் உன் தாலாட்டின்றி எனை தூங்கச்சொல்லாதே...! ************************************************** பக்கத்துவீட்டு சுட்டியே... அழகுப்பெண்மை அவளை நான் பார்கபோகும் அவசரத்தில் அழகுபொம்மை உனைநான் பார்க்கத் தவறிவிட்டேன் உன் பிஞ்சுமுத்தம் இல்லையென்று எனை கொன்றுவிடாதே...! ************************************************** என் குட்டிச்சுவரே... பாவை போகும் இடம்தேடி பாதம் நாட ச

கிரிக்கெட் சில்லறைகள் இந்தவாரம் - 27.08.2011

Image
இங்கிலாந்துடடான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மோசனமான தோல்விகளை சந்தித்து தொடரை இழந்தபோதிலும் இத்தொடர் கடினமாக இருந்திருக்கவில்லை என்றும் நான் பந்துவீசுவதர்க்கு சச்சின் சிறந்த ஆலோசனைகளை தருகிறார் என்றும், இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------ 20 மாதங்களாக இருந்து வந்த நம்பர் 1 இடத்தை இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இழந்திருக்கிறது, நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று போட்டிகளில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்து தொடரையும் இழந்ததாலேயே இந்திய அணி முதலிடத்தை இழந்திருக்கிறது. தற்பொழுது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ------------------------------------------------------------------------------------------------- இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி சரணடைந்தமை மிகவும் வருத்தமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் காரி ஹேர்ச்டன் தெரிவித்துள்ளார். இவருடைய பயிற்ச்சியின்போதே இந்திய அணி உலக கிண்ணத்தை வென்றமை குறிப்பிட

ஒரு சுமங்கலியின் குமுறல்...! (கண்டிப்பாக வ.வ.மட்டும்)

Image
அடிக்குற வெயிலில் அனல் பறக்கும் மதிய நேரம்...! ஆக்கி வைச்ச மீன்குழம்பு அப்படியே ஆறிப்போய்கிடக்குது எங்கபோய் தொலைஞ்சாரோ என்னோட புருஷன்...!!! நேத்தும் அப்படித்தான் இன்னைக்கும் அப்படித்தான்...! பொல்லாத பொத்தான் என்று நம்மட தலையில கட்டி வைச்சாங்க - தலைமேல கல்ல ஏனோ தூக்கி வைச்சாங்க...!!! எனக்கு எதுக்கு கல்யாணம் என்று கேட்டேன் அவங்க கடைமை முடியனும்னு சொல்லிவச்சாங்க...! ஏன் தலையில ஏனோ கொள்ளி வச்சாங்க...!!! குடித்தனம் நல்ல பண்ணுவாரு என்றுதானே கூடி நின்று வாழ்த்து சொன்னாங்க..! இப்படி குடியும் கும்மாளமுமாய் திரிகிறாரே சேர்த்து வைச்சவங்க என்ன செய்வாங்க....!!! வீட்டில ஒழுங்க தங்குறல்ல வேலைவெட்டிக்கும் போறதில்ல..! மாமனாரு கொடுத்த காசு மாவாட்டம் கரைஞ்சு போகுது...! மதுவை இன்னும் விட்டபாடில்ல மாதுவ இன்னும் தொட்டபாடில்ல...!!! சிரிக்கிக்கு எதுக்கு படிப்பென்று பாதியிலே நிக்கவைச்சாங்க....! சிரிப்பதற்கும் அனுமதிய கேட்க வச்சாங்க...! பாழாப்போன மச்சானுக்கு கட்டி வைச்சாங்க...! இப்படி பாழும் கிணத்தில ஏனோ தள்ளி விட்டாங்க...! நாலுமணி ஆனா நாலு காலில வரும் நானோருத்தி இருக்கிறேன்னு ஞாபகமா வரும்

இனி விடியும் நல்ல பொழுது....!

Image
காதலி நிலவிற்கு...! உனைநித்தம் நினைத்து நிழலாய் போன நிஜக்காதலன் எழுதிக்கொள்வது...! இது நானாக எழுதும்கவிதை அல்ல, உன்முகம் அழகென்ற அனுதினமும் அலட்டிக்கொண்ட என் இரு கண்களும் எனைஇரங்கி வேண்டியதால் இந்த இறுதி மடல்.....! நீயொரு அதிசய மலரென்று - உனைநித்தம் நினைத்து நாள்தொறும் ஆயிரம்கவிதைகள் கிறுகியஎன் கைவிரல்கள் எனை கைதொழுது வேண்டியதால் இந்த இறுதி மடல்...! காரணம் என்னவோ நானறியேன் கண்மணி நீ எனைவெறுத்ததற்கு....? ஆதலால் தினமும் துடிக்கின்றேன் நித்தம் உனைமறப்பதற்கு...! சுகமான உன் கனவில் தொலைந்துபோன என்உறக்கங்கள் இன்றுவலியான கண்ணீரில்மூழ்கி தத்தளிக்கின்றன..! உண்ணும் உணவன்றி வேறொன்றும் தொடவில்லையடி என் உள்ளத்தை உன்நினைப் போன்றைத்தவிர....! ஏனோ இன்று உண்ணும் உணவும் என் உள்ளத்தை தொடமறுக்கின்றது உன் உள்ளத்தைப்போல...! உன்முதல் சந்திப்பிலே மீண்டும் பிறந்தேன் முழுவதும் மறந்தேன் முகிலோடு பறந்தேன் முற்றும் துறந்தேன் இன்று முதல் முறை இறந்தேன்...! என்னுயிர் நீ எனைவிட்டு போனபின்பும் உயிரான காதலை உதறித்தள்ளி எறிந்தபின்பும் உன்நினைவு தேடி என்உள்ளம் பறப்பதுஞாயம்தானோ? நிலவென்று உனைஉரைத்ததற்கு

களவாணிப் பசங்க நாங்க...!!!

நாங்க நாலுபேர் நண்பர்கள் எங்களுக்கு இல்லாத எதிரியே இல்ல ஆனாலும் சும்மா கலக்குவமில்ல...! +++++++++++ படிப்பது சாதாரணதரம் குடிப்பது உயர்தரம் நாங்க எப்பவும் தனிரகம்...! +++++++++++ காலைமுதல் மாலைவரை சுடிதார்முதல் சேலைவரை மதிப்பெண் போட்டே பெண்களை மதிச்சோம்..! எங்க மதிப்பெண் குறைஞ்சு தவியா தவிச்சம்...! +++++++++++ கிரிக்கெட் கிரிக்கெட் என்று கிறுக்குப் பிடிச்சு குறுக்குச்சந்தில் உள்ள கண்ணாடி உடைப்பது பொழுதுபோக்கு...! +++++++++++ நாங்க ஜெயிக்காத கப்புமில்ல உடைக்காத கப்புமில்ல அடிக்காத மப்புமில்ல ...! +++++++++++ ஒரு மையவீட்டையும் விட்டதில்ல பொது மைதானத்தையும் விட்டதில்ல...! +++++++++++ ஊருல கோயில் திருவிழா எங்களுக்கு ஒரே பெருவிழ நாட்டுக்கோழிமுதல் ஆட்டுக்கிடா வரை ஆட்டையபோட்டே அறுசுவையுண்டோம்..! ++

நன்பெண்டா நாசமா போக....!!!

நேரம் மாலை ஆறுமணி Item பார்த்து அலுத்த கால்கள் அசதியை நாடின.. நண்பா நாளை சந்திப்போம் நண்பனிடம் விடைபெற்று வீடு சென்றேன்... வாசலில் அம்மா என் வருகைக்காய்... உள்ளே அப்பா எனை வாழ்த்துவதற்காய்.. அம்மா என் செல்லம் என ஐஸ் வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன்... அப்பாவின் அறிவுரை பூசை அரங்கேறி முடிந்தவுடன் அம்மாவின் அன்புச் சாப்பாடு... சிறிதுநேர ஓய்வுக்காய் தொலைக்காட்சி நட்புக்காக திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது... இருந்தும், தூக்கம் எனை துரத்திவந்தது அன்னைமடியில் ஒரு குட்டித்தூக்கம் தங்கை வந்து பங்கு போட ஒரு சின்னபாசச் சண்டை பாட்டிக்கு பல் இல்லை பாக்கு இடித்து கொடுத்துவிட்டு மணி பதினொன்று தாண்டியதால் படுத்துறங்கச் சென்றேன்.... அமைதியான இரவு அழகான நிலவு அடர்ந்த இருட்டு அனைவரும் உறங்கும் நேரம் யன்னல்வழி வந்த மெல்லிய தென்றல் என் மேனியை உரசும்போது அலைபேசியில் ஒரு குறும்செய்தி அன்பு நண்பனிடமிருந்து நண்பா நீயுடன் வரவேண்டும் எனக்கொரு உதவி புரியவேண்டும்" என்னவென்று தெரியாமல் எதேன்றும் புரியாமல் புறப்பட்டுச் சென்றேன் தென்றல் வந்த வழியாக.. நாங்க

நான் நனைந்த மழை...!

Image
கார்மேகம் கழற்றி எறிந்துகொண்டிருந்தன தன் உடைகளை மண்ணில் மழையாய்...! குடையின்றி ஒதுங்கியதால் உடையும் நனைந்துவிட்டன இலையாய்...! நள்ளிரவு என்பதால் அக்கம்பக்கம் யாருமில்லை ஒரு அநாதை நாயைத்தவிர...!!! மனதோடு ஒரு மாற்றம் நடுங்கிய விரல்நடுவே சிகரெட் உட்கார அடம்பிடித்தது...! மூட்டிய தீயில் மூச்சும் இனித்தது...!!! பசித்த மண் மழைச்சோறு உண்ட களைப்பில் மண்வாசனை தந்துகொண்டிருந்தது...! மிஞ்சிய மழையை தேங்கியநீராய் சேமித்து வைத்து சேறு தயாரித்தது...!!! குருத்தோலை தொட்டமழை தென்னம் கருவோடு கொஞ்சிக்குலாவி பழுத்தோலை வழியாக - என் தோள்வந்து தொட்டபோது பிஞ்சிக் கரமொன்று எனையுரசும் சுகம்கண்டேன்...!!! அமாவாசை இரவு அலங்கரிக்கப்பட்ட நிலவு எனை எட்டிப்பார்த்து ஏதோ சொல்ல முயல்கிறது மின்னல் வந்து செல்கிறது நிலா மறைகின்றது.. நிறுத்தப்பட்டது மழை விலக்கப்பட்டது திரை மீண்டும் நிலா உலா..!!! சிறிது நேர ஒய்வு சில ஒலிகள் ஆரம்பம்..! இடிமுழக்கம் தவளைப்பாட்டு கச்சேரி ஆரம்பம்...!!! மழை போழியுதென்று இழுத்திப்போர்த்திப் படுத்துகொண்டால் இயற்கைதரும் சுகத்தையெல்லாம் இழ

நீ+நான்+காதல்=???

Image
நீயும் நானும் எப்போதும் தொலைதூரமாய்....!!! அதனால்தான் மனம் பாரமாய்...!!! என் கவிதைகளில் என் கற்பனை உனக்கு முதலிடம்தர முனைகின்றது, நீ முன்னாடியே முற்றுப்புள்ளி வைத்ததை அறியாமல்....!!! காதலில் எது ஆரம்பம் எது முடிவு கருத்துக்கூற உன்னாலும் முடியாது என்னாலும் முடியாது...!!! அதனால்தான் என்னவோ காதலை அழிக்கமுடியாது நாம் அழிந்துபோனாலும்....!!! "நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதை" நட்புடன், நா.நிரோஷ்.

முதல் அனுபவம்..(18+)சும்மா பில்டப்பு...!

Image
முதல் அனுபவம் எனக்கு அந்த நேர்முகப்பரீட்சை தோல்வியுற்றதால் ஒரு சிறு கவலை காத்திருந்தேன் பஸ்ஸிற்காய் கனநேரமாய்...! ஒரு சோலை சேலையணிந்து சாலையோரமாய் வந்துகொண்டிருந்தது தவறுதலாய் ஒருமுறை பார்த்த கண்கள் மீண்டும் தவறுசெய்ய முனைந்தன..! அவள் அழகு அப்படி...! வேலைபோன வேதனையில் வாடியிருந்த கண்கள் அவள் அழகால் பூக்க ஆரம்பித்தது...! உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை ஒருவித இனந்தெரியா மயக்கம் என் உள்ளத்திலும் சிறு நிலநடுக்கம்...! அதுவரையில் காதல் பூகம்பம் கண்டிராத இதயச்சுவர் மெல்ல மெல்ல இடிய ஆரம்பித்தது...! கண்டவுடன் காதலா என் பழைய வினாவொன்றிற்கு விடையும் கிடைத்தது...! அந்தச்சோலையில் காதல்கனி பறிக்க தயாரானேன் தயங்கி நின்றபடியே...! அப்போது நான் இப்படி அரைகுறை கவிஞனல்ல கற்பூரம் அறியாக் கழுதை...! அருகில் வந்தால் அழாகாய் சிரித்தாள்...! செய்வதறியாது திகைத்துநின்றேன் கற்பனையில் இனிப்புச்சாப்பிட்டு காத்திருந்த பஸ்ஸும் எனை கடந்துபோனது தெரியாமல்..! எல்லா ஊர்க்கடவுளையும் ஒருமுறை வேண்டிவிட்டு உற்சாகமாய் சொல்லமுயன்றேன் உனை எனக்கு பிடித்திருக்

மஞ்சள் வெயிலாய்....!

Image
என்றும் சொல்லாமல் தாக்கும் சுனாமியே...! ஒன்றும் சொல்லாமல் கொல்லும் சுந்தரியே...! என்கனவில் வெண்பனியாய் பொழிகின்றாயே...! விழித்தெழும்முன் முன்பனியாய் கரைகின்றாயே...! என்விழிமீது ஒளிக்கீற்றாய் பறக்கின்றாயே...! என்மொழிமீது கவிக்கூற்றாய் பிறக்கின்றாயே...! ஆனால், நீயோ.... இன்னும் மொழியின்றி மௌனமாய் தவிக்கின்றாயே...!!! மஞ்சள் வெயிலாய் கன்னம் சிவந்த முகிலாய் முன்னே வர முனைகின்றாயே...! விரைவில், வெயில் கண்ட நிழலாய் மறைகின்றாயே...! வந்துசெல்லும் அலையாய் வந்து வந்து செல்கின்றாயே....! எபோதும் சிலையாய் என்முன்னே நிற்க்கின்றாயே..!!! "நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்" நட்புடன், நா.நிரோஷ்

அன்னை எனும் தெய்வம்...!

Image
அன்பின் திருநாளாம் அன்னையர்தின பெருநாளாம் அகமகிழ்ந்து கொண்டாட அவதரித்தத் ஒரு நாளாம்....! அகிலத்தில் நாம் இங்கு அவதரிக்கும் முன்னாலே அன்பெனும் கருவாலே அழகாக எமைத்தாங்கி மாதங்கள் பத்தாக முத்தாய் எமை பெற்றாளே...! உயிரினங்கள் அத்தனையும்.. ஓரிடத்தில் ஒன்றுசேரும் அன்னையெனும் தெய்வத்திற்கே அந்தப்பெயர் வந்துசேரும்...! தெய்வங்கள் கண்முன்னே தெரிவதில்லை - அவை அன்னையாய் இருப்பதை அறியவில்லை மாதாவே முதலென்று தெரிந்திருந்தும் உரிய மரியாதை சிலபேர் கொடுப்பதில்லை...! மதம் என்ற பெயரில் மதம்கொள்ளும் மனிதன் இனம் என்ற குணத்தில் சினம்கொள்ளும் மனிதன் இந்த ஒரு சொல்லில் மட்டும் புனிதனாய் பூப்பதும் ஏனோ...? உறவுகள் எத்தனை இருந்தாலும் உனை உள்ளங்கள் எத்தனை கவர்ந்தாலும் உண்மையில் அன்புகொண்டு உயிராக பாசம்கொள்ள அன்னையை போன்றிங்கு அவதிரித்தோர் யாரும் உண்டோ....? மனிதனாய் நீ பிறந்திருந்தால் நல்லமனம் கொண்டுநீ வாழ்ந்திருந்தால் அன்னையின் அன்பிற்கு அடிபணிந்து அவள்சொள்ளும் வாழ்விற்கு கீழ்படிந்து உன்தாயை நீ மதித்து வந்தால் உன்னாலும் உலகத்தை வெல்ல முடியும்...! எத்தனை தினங்கள் இருந்தாலும் அத்தனை தினங்கள

விதைத்தவன் எவனோ...?

Image
விதைத்தவன் எவனோ...? வினை அறுத்தவள் எவளோ....? உயிர்கொண்டது தாயின் கருவில் உடல்கிடந்தது தெருவின் மடியில்..! பெற்றெடுத்த உனக்கே எனை பிடிக்கவில்லை என்றால்.... தத்தெடுத்த தெருவில் எனக்கு தாலாட்டு எப்படி கேட்கும்...! கொசுவும் எறும்பும் தடுப்பூசி போடு சின்ன அம்மை பெரிய அம்மை நலமாய் பார்த்து சிக்கன்குனியாவால் சீர்திருத்தப்பட்ட ஆரோக்கியச்சிறுவன் நான் இனி அழுதாலும் பயனில்லை....! என்மீது எல்லாவறையும் போடுகிறார்கள் என்னைத்தவிர எல்லாவற்றையும் பொறுக்கிரார்கள் கசங்கிக்கிடக்கும் காகிதத்தைக் சுமக்கிறார்கள் வாடிக்கிடக்கும் என்முகத்தை வெறுக்கிறார்கள்...! உழைத்து உண்ண உடம்பில் இன்னும் வலுவில்லை... உட்கார்ந்து உணவுண்ண உரிய இடம் கிடைக்கவில்லை.... எச்சில் இலையில் என்வயிறு நிறைகின்றது.... காலத்தின் தாலாட்டில் என்கவலை கரைகின்றது.... உறவுகள் யாருமில்லை உரிமைகொண்டாட..... உள்ளத்தில் யாருமில்லை நானும் கொண்டாட.... உலகத்தில் யாரும் அநாதை இல்லை.... இரு உயிர்கள் இல்லாமல் எவரும் இல்லை... ! "நண்பர்களே நீங்கள் குத்தும் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்"

கிச்சு கிச்சு கிரிக்கெட் - 2

Image
இந்தப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.... நகைச்சுவை ஒன்றே குறிக்கோள்...! +++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++ "நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்கட்டும் என் ஆக்கங்கள்" நட்புடன், நா.நிரோஷ்.

நான் ஏன் இப்படி....?

Image
நான் ஏன் இப்படி....? எனக்குள் ஏன் இந்த மாற்றம்...? நான்கைந்து போத்தல் உள்ளேவிட்ட நண்பன்கூட இப்படி உளறியதில்லை...! ஓசை ஒன்றும் இல்லாமல் ஒரே இசையாய் இசைக்கின்றது என்மனது...! ஆசைகள் பல இருந்தும் அனைத்தும் பூர்த்திகண்டு பூரிக்கின்றது என்மனது...! நாவிற்கு ருசியாய் நல்ல சாப்பாடு ஆனால் பசி அறியவில்லை....! அலுப்பாயிருந்தும் அன்னைமடியிருந்தும் உறங்கமுடியவில்லை...! நண்பர்கள் அடிக்கின்ற அரட்டை கேட்டு கொட்டாவி விடதோணுகிறது...! அம்மா எனை அழைக்கும் போதும் அவள் குரலே கேட்கின்றது....! எறும்பு கடித்த காயமும இல்லை என்னுடலில் ஏன் இப்படி வலிக்கின்றது...! என்பெயரில் ஒரு கவிதை கருத்தரிக்கின்றது அவள் தினமும் உச்சரிக்கும்போது...! எச்சரித்து நின்ற எதிரிகள் எல்லாம் எனைவந்து முத்தமிட முனைகிறார்கள்...! கடும்மழை சுடும்வெயில் கொட்டும்பணி குளிர்காற்று எல்லாம் ஒரேநேரத்தில் என்வானிலையில்..! பாதையோர பனைகளிலும் பளிங்கில் செய்த இலைகளிலும் ரோஜா மலர்கிறது....! கடவுச்சீட்டு இல்லாமலும் கடல்கடந்து செல்லாமலும் உலகம் சுற்றுகிறது மனது...! அறிந்திராத சொந்தமொன