Posts

Showing posts with the label குழந்தை

ஷூவை முகர்ந்து பார்த்து வீர மரணமடைந்த அதிசய பூனை..!

Image
ஷூவை முகர்ந்து பார்த்து வீர மரணமடைந்த அதிசய பூனை..! அப்படியே கண்ணீர் எங்கு கிடைக்கும் என சொல்லுங்கப்பா..! இது சகஜம்தானே..! ஐ.. ஜாலி...! அப்போ ஆயுத கண்டு பிடிப்புக்கு முற்றுபுள்ளி வச்சதே நம்ம பீர் தானே...! ஷர்ட் பால், லேந் பால், வைட் பால், நோ பால் இப்போ கல் பால். புல் ஷர்ட், கவர் ஷர்ட், கட் ஷர்ட் இப்போ லத்தி ஷர்ட். இதில என்னங்க ஆச்சர்ய பட ஹீ ஹீ..! ம்ம்ம் ஆள விடுங்கட சாமியோவ்..! நட்புடன், நா.நிரோஷ். படங்கள் :- யாகூ, கூகிள்.

விதைத்தவன் எவனோ...?

Image
விதைத்தவன் எவனோ...? வினை அறுத்தவள் எவளோ....? உயிர்கொண்டது தாயின் கருவில் உடல்கிடந்தது தெருவின் மடியில்..! பெற்றெடுத்த உனக்கே எனை பிடிக்கவில்லை என்றால்.... தத்தெடுத்த தெருவில் எனக்கு தாலாட்டு எப்படி கேட்கும்...! கொசுவும் எறும்பும் தடுப்பூசி போடு சின்ன அம்மை பெரிய அம்மை நலமாய் பார்த்து சிக்கன்குனியாவால் சீர்திருத்தப்பட்ட ஆரோக்கியச்சிறுவன் நான் இனி அழுதாலும் பயனில்லை....! என்மீது எல்லாவறையும் போடுகிறார்கள் என்னைத்தவிர எல்லாவற்றையும் பொறுக்கிரார்கள் கசங்கிக்கிடக்கும் காகிதத்தைக் சுமக்கிறார்கள் வாடிக்கிடக்கும் என்முகத்தை வெறுக்கிறார்கள்...! உழைத்து உண்ண உடம்பில் இன்னும் வலுவில்லை... உட்கார்ந்து உணவுண்ண உரிய இடம் கிடைக்கவில்லை.... எச்சில் இலையில் என்வயிறு நிறைகின்றது.... காலத்தின் தாலாட்டில் என்கவலை கரைகின்றது.... உறவுகள் யாருமில்லை உரிமைகொண்டாட..... உள்ளத்தில் யாருமில்லை நானும் கொண்டாட.... உலகத்தில் யாரும் அநாதை இல்லை.... இரு உயிர்கள் இல்லாமல் எவரும் இல்லை... ! "நண்பர்களே நீங்கள் குத்தும் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்" ...

அன்னையின் அன்பால் மட்டும்...!

Image
அன்னை பிசைந்த சோற்றை அள்ளித்த் தின்ற கைகள்.... அவசரமாய் வந்த "PIZZA" வை கிள்ளிப் பார்த்துவிட்டு கண்ணீரில் கைகழுவி போகின்றன.....!!! ++++++++++++++++++++ பிஞ்சுக் குழந்தையினை நெஞ்சில் வைத்து கொஞ்சும் போது நஞ்சுண்ட என் நாவும் அமுதத்தை சுவைக்கின்றதே...!!! அன்பில் மனம் நிறைகின்றதே...!!! அன்னையின் அன்பே நிரந்தரமானது... இதை அறியாதவன் மனது இயந்திரமானது...!!! ++++++++++++++++++++ "அளவிட முடியாத ஒன்றினால் அனைத்தும் அர்த்தப்படுகின்றது அன்னை உன் அன்பினால் மட்டும்" +++++++++++++++++++++ அன்னையின் அன்பும் அன்புக் குழந்தையின் சிரிப்பும் - என் அரக்க குணங்கள் அனைத்தையும் அழித்துச்செல்கின்றன...! அன்பால் மட்டுமே அகிலம் இங்கு செழித்தும் நிற்கின்றன...!!! +++++++++++++++++++++++ "அன்பின் நண்பர்களே பிடித்திருந்தால் மறக்காம ஓட்டுப்போடுங்க" நட்புடன், நா.நிரோஷ்.

கவிக்குழந்தை...!!!

Image
என் கவிப்பேனா காகிதத்தோடு முத்தமிட்டுப் பிறந்த கவிக் குழந்தை இது.... காதல் எனும் பெயர் சூட்டி உங்கள் கைகளில் கொடுக்கின்றேன்.... தயவுசெய்து, காமப் பால்கொடுத்து கடைசியில் கண்ணீரோடு கசக்கி எறிந்து விடாதீர்கள்....!!! "ஓட்டுப்போட மறக்காதிங்க" அன்பின் நண்பன், நா.நிரோஷ்.