சிச்சுவேஷன் சாங்க் (Situation Song) விற்பனைக்கு உண்டு..!

நம்முடைய பதிவால் நாலுபேர் வாழ்க்கை சந்தோசமா அமைகிறது என்றால் அது எல்லோருக்கும் பெருமையான விடயம்தானே. அந்த வகையில் இன்றைய பதிவும் இந்த பதிவை படிப்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் வெற்றியடைய ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் என்பதில் மேலும் சந்தோசம். நாம் நல்லா உழைத்தும் நாலுபேருக்கு நல்ல உதவிகள் செய்தும் வாழ்கையில் முன்னுக்கு வராமல் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..? நமக்கு பின்னணியில் ஒரு "சிச்சுவேஷன் சாங்க்" அதாவது சூழ்நிலை பாடல் ஒன்று இல்லாமல் இருத்தலே. இந்த சிச்சுவேஷன் சாங்க் சரியாக அமைந்து விட்டால் நமக்கு ஒரு ஐந்து நிமிடம் போதும் நண்பர்களே வாழ்வில் உச்ச நிலைக்கு வந்துவிட. எனவே இந்த சிச்சுவேஷன் சாங்க் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் அந்த பொக்கிஷ பாடல் இங்கு நம்மிடம் கிடைக்கிறது. அது உங்களுக்கு வேண்டுமா அப்படியானால், அதற்கான தகுதி முதலில் நம்மிடம் இருக்கவேண்டும். அது என்ன என்ன தகுதி என்று பார்ப்பதற்கு முன்பு மூன்று பிரபலமான சிச்சுவேஷன் ஷாங்க் பார்த்துவிட்டு வருவோம். என்ன நண்பர்களே பார்த்திங்களா எப்படி இருந்த அந்த மூன்று மனிதர்களும் அந்த பாடல்களின் ப...