ஒரு உண்மையான உணர்ச்சிமிக்க காதல் கடிதம்.

இளகிய மனம் படைத்தோர் பதிவை படிப்பதற்கு தவிர்க்கவும். ---------------------------------------------- அன்புள்ள முன்னாள் காதலிக்கு... , உன்னை நித்தம் நினைத்து முற்றத்து விளக்குமாறாய் தேய்ந்துபோன உனது முன்னாள் காதலன் எழுதிக்கொள்வது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் உனை சந்தித்தேன். இது உனக்கு நினைவில் இருக்காது அப்படி இருந்திருந்தால் அதற்க்கு ஏதாவது வேறு காரணம் உன் சார்பில் நீ வைத்திருப்பாய். உனை முதன் முதலில் கண்டவுடனேயே காதல் பிறந்துவிட்டது கூடவே கருமாதியும் முடிவாகிவிட்டது. அன்று எனக்கு ஒன்றும் புரியவில்லை அத்தனையும் அழகான நிமிடமாகவே கழித்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் என் காதல் சொல்ல நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா.... ? ஒருமுறை நீ நடந்து செல்லும்போது உன் சொடுகு நிறைந்த தலையில் இருந்து விழுந்த பேன் ஒன்றை கண்டெடுத்து அதை உன்னிடம் திருப்பி தரும்போது நீ என்னைப்பார்த்து "க்கியூட் போய்" என்று சொன்னபோது நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை தெரியுமா... ? ஆனால் அதற்கான அர்த்தம் எனக்கு இன்னும் தெரியாது தெரியுமா. இதற்காகவே எனது நண்பர்களுக்கு ஒரு மாதம் தொடர்ந்து பா...