Posts

Showing posts from October, 2011

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

Image
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் அமுதா எனும் அன்னை மடியில் அவதரித்த அமுதசுரபி துஷயந்தா நீ அனைவரையும் விட்டு போனதெங்கே சொல் நண்பா...? கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க இலக்கியம் தடுமாற இலக்கணம் தமிழ்மாற எப்படி கவிதைகள் எழுதமுடியும்...? உன்புகழ் எப்படி பாடமுடியும்...? நோயோடு வந்திருந்தால் நொந்திடோமே காலன் சாவெடுத்து போனானே நண்பா சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயது சாந்தியாய் போனது ஏன் நண்பா...? அன்று முதல் இன்று வரை - என்றும் உன்முகம் வாடியதில்லை உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும் துன்முகத்தை நாடியதில்லை - இன்று மூடிவைத்து உன்முகத்தை நாங்கள் கூடிவந்து கொண்டு செல்லும் கொடிய நிலை ஏன் நண்பா...? அன்னைக்கு ஒரேபிள்ளை அனைவருக்கும் செல்லப்பிள்ளை உனை விரும்பாதோர் யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை கொடிய நோய்கொண்டு நீபோக குறையுண்டோ நாங்கள் சொல்ல - இனி நீயின்றி எங்கள் அணி எப்படி வெல்லும்...? அணியில் நீ அனைத்திலும் சிறந்தவன் ஆடுகளத்தில் நீ அதிரடி ஆட்டக்காரன் இடது கைகொண்டு எதிரணியை பந்தாடும் ஆட்டநாயகன் - ஓட்டங்கள் நீ குவித்து கிண்ணங்கள் பெற்ற வேட்டைநாயகன் விதியெனும் விளையாட்டில் விடையேதும் சொல்லாமல்

ஷூவை முகர்ந்து பார்த்து வீர மரணமடைந்த அதிசய பூனை..!

Image
ஷூவை முகர்ந்து பார்த்து வீர மரணமடைந்த அதிசய பூனை..! அப்படியே கண்ணீர் எங்கு கிடைக்கும் என சொல்லுங்கப்பா..! இது சகஜம்தானே..! ஐ.. ஜாலி...! அப்போ ஆயுத கண்டு பிடிப்புக்கு முற்றுபுள்ளி வச்சதே நம்ம பீர் தானே...! ஷர்ட் பால், லேந் பால், வைட் பால், நோ பால் இப்போ கல் பால். புல் ஷர்ட், கவர் ஷர்ட், கட் ஷர்ட் இப்போ லத்தி ஷர்ட். இதில என்னங்க ஆச்சர்ய பட ஹீ ஹீ..! ம்ம்ம் ஆள விடுங்கட சாமியோவ்..! நட்புடன், நா.நிரோஷ். படங்கள் :- யாகூ, கூகிள்.

என் விழியும் தமிழ் மொழியும் விற்பனைக்கு...!

Image
எ ன் விழிகள் விற்பனைக்கு என் இதயத்தோடு தொடர்பில் இருந்து என்றும் உனைக்காண ஏங்கித்துடிக்கின்றது ஆதலால் என் விழிகள் விற்பனைக்கு...!!! ************************** எ ன் மொழிகள் விற்பனைக்கு நான் ஒரு கோழை என்னால் பேசப்படுவதால் என்றும் அடிமையாகவே உயிர்வாழ்கிறது அதற்கு நிரந்தர விடுதலை வேண்டும் வீரநெஞ்சம் கொண்டவர்களுக்காய் என் மொழிகள் விற்பனைக்கு...!!! ******************* எ ன் யன்னல் நிலவு விற்பனைக்கு தோழியாய் நினைத்து காதல் செய்திபேச காதலி யாருமில்லை காத்திருக்கும் நிலவும் தேய்ந்துபோவது நியாயமில்லை ஆதலால் என் யன்னல் நிலவு விற்பனைக்கு...!!! ************************ எ ன் ஆண்மை விற்பனைக்கு உயிர்தந்த உறவுக்கும் உயிர்கொடுக்கும் உறவுக்கும் உடன்பிறந்த உறவுக்கும் உடன்பிறவா உறவுக்கும் ஒன்றும் செய்திருக்கவில்லை ஆகவே என் ஆண்மை விற்பனைக்கு...!!! ************************ எ ன் முற்றத்து மல்லிகை விற்பனைக்கு முகர்ந்து பார்த்திடவும் மூச்சின்றி தவிக்கின்றேன் முன்பனியில் நனைந்தும் சுடும்வெயிலில் வாடியும் வ

கண்கள் சொல்லும் கவிதை...!

Image
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!! ஐயோ....!!! இனி நீ தூங்கும் வேளையில் துவண்டுவிடுமே என் கவிதையும்...! விழித்திரு... கவிதை கொடுத்திரு... காலமுள்ளவரை உன் விழிசொல்லும் கவிதையை திருடியபடி என் மொழிசொல்லும் கவிதையும்...!!! நட்புடன், நா.நிரோஷ்.