மங்காத்தா - ஆத்தா நாங்க பாஸாயிட்டம்..!

வணக்கம் சினிமா நண்பர்களே ரசிகர்களே....
நமக்கெல்லாம் இந்த சினிமா பட விமர்சனம் எழுதிப் பழக்கமில்லை, பார்பதோடு சரி. அப்போ எதற்கு இந்த பக்கம் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு தமிழனாக இருந்து சினிமாவை யாரும் வெறுக்க முடியாது, அந்த அளவிற்கு சினிமா மோகம் நம் எல்லோரின் மீதும் ஊறிக்கிடக்கின்றது. ஆனால் இன்று நான் சினிமா பதிவு இட வந்தமைக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1) இப்போதுதான் நான் பதிவுலகில் கால்வைத்திருக்கின்றேன் இங்கு நிலைத்திருப்பது என்பது சற்று கடினமான ஒரு விடயம். அதுவும் நான் வேறு ஒரே கவிதை தொடர்பான பதிவை இடுவதனால் சீக்கிரமே கிளம்பவேண்டியதுதான். ஏனெனில் இங்கு எல்லோரும் கண்ணதாசனும் வைரமுத்துவும்தான் ஆகவே அனைத்தையும் கலந்து காத்திரமான பதிவுகளை மட்டும் இங்கு பதிவு செய்தால்தான் நிலைக்க முடியும்.
2) நாம் நமது சாதாரண வாழ்வில் பார்க்கின்ற சம்பவங்களில் சற்று வித்தியாசமாக ஏதும் நடக்குமாயின் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்போம். அந்தவகையில் நான் இங்கு பார்த்த ஒரு சினிமா சம்பவம். அதுவும் ஒரு அரபு நாட்டில் தமிழ் சினிமாவிற்கு இருக்கும் வரவேற்பு. நான் தொழில் நிமித...