கவிக்குழந்தை...!!!

என்
கவிப்பேனா
காகிதத்தோடு
முத்தமிட்டுப் பிறந்த
கவிக் குழந்தை இது....
காதல் எனும்
பெயர் சூட்டி
உங்கள் கைகளில்
கொடுக்கின்றேன்....
தயவுசெய்து,
காமப் பால்கொடுத்து
கடைசியில்
கண்ணீரோடு
கசக்கி எறிந்து
விடாதீர்கள்....!!!
"ஓட்டுப்போட மறக்காதிங்க"
அன்பின் நண்பன்,
நா.நிரோஷ்.