Posts

Showing posts with the label வலி

மாலை நேரத்து மயக்கம்...!

Image
தண்ணீருக்குள் கல்லாய் இருந்த என் மனது கண்ணீரால் கரைந்து கிடக்கின்றது அன்பே உன் காதல் வேண்டி....!!! ஆனால், உன்மனமோ கல்லாய் இருக்கிறதே காசு வேண்டி....!!! என் மனதை ஏன் கரைத்தாய்...? காதல் விதை ஏன் விதைத்தாய்...? கண் முன்னே நீயிருந்தும் நீரிருந்தும் எல்லாம் கானல் நீராய் தோன்றுதடா.... காதல் காலநிலை போன்றதடா...??? "நட்பின் ஓட்டுக்களை கொடுங்க... என் அன்பின் ஓட்டுக்களை எடுங்க" அன்பின் நண்பன், நா.நிரோஷ்.

உன் நிழலே தஞ்சம்....!

Image
தொலைந்த இடத்திலேயே தொலையச்சொல்லி தொல்லை தருகின்றது - என் காதல் நெஞ்சம்....!!! +++++++++++++++++++++ கருணை பாராமல் காலால் மிதித்து கொன்றுவிடுகிறது உனது கல்நெஞ்சம்...!!! +++++++++++++++++++++ சொன்னாலும் கேட்காமல் கொன்றாலும் தோற்காமல் அடம்பிடிக்கின்ற இதயத்திற்கு என்றும் உன்நிழலே தஞ்சம்...!!! நா.நிரோஷ்.

காதல் கல்வியும் தரும் கல்லறையும் தரும்...!

Image
நாலுவரி கவிதை எழுத முனைந்து நான் பட்ட துயரம் என்ன சொல்ல...? பேனா காகிதத்தை கொன்றுகுவித்து குப்பைத்தொட்டியில் வீசிக்கொண்டிருந்தது....! கடைசியில் உனைப்பார்த்தேன் காதல் கொண்டேன்.... காகிதம் பேனாவை முத்தமிட்டது கவிதை பிறந்தது நான் கவிஞன் ஆனேன்... காதல் பெருமை சேர்த்தது என் தமிழுக்கும் தமிழாசிரியைக்கும் காதலியுங்கள் கவிஞன் ஆகலாம்...! காதல் கல்வியும் கற்றுத்தரம் கல்லறையும் கட்டித்தரும்...! கவனம் மக்கா....! நா.நிரோஷ்.