Posts

Showing posts with the label நண்பன்

நன்பெண்டா நாசமா போக....!!!

நேரம் மாலை ஆறுமணி Item பார்த்து அலுத்த கால்கள் அசதியை நாடின.. நண்பா நாளை சந்திப்போம் நண்பனிடம் விடைபெற்று வீடு சென்றேன்... வாசலில் அம்மா என் வருகைக்காய்... உள்ளே அப்பா எனை வாழ்த்துவதற்காய்.. அம்மா என் செல்லம் என ஐஸ் வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன்... அப்பாவின் அறிவுரை பூசை அரங்கேறி முடிந்தவுடன் அம்மாவின் அன்புச் சாப்பாடு... சிறிதுநேர ஓய்வுக்காய் தொலைக்காட்சி நட்புக்காக திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது... இருந்தும், தூக்கம் எனை துரத்திவந்தது அன்னைமடியில் ஒரு குட்டித்தூக்கம் தங்கை வந்து பங்கு போட ஒரு சின்னபாசச் சண்டை பாட்டிக்கு பல் இல்லை பாக்கு இடித்து கொடுத்துவிட்டு மணி பதினொன்று தாண்டியதால் படுத்துறங்கச் சென்றேன்.... அமைதியான இரவு அழகான நிலவு அடர்ந்த இருட்டு அனைவரும் உறங்கும் நேரம் யன்னல்வழி வந்த மெல்லிய தென்றல் என் மேனியை உரசும்போது அலைபேசியில் ஒரு குறும்செய்தி அன்பு நண்பனிடமிருந்து நண்பா நீயுடன் வரவேண்டும் எனக்கொரு உதவி புரியவேண்டும்" என்னவென்று தெரியாமல் எதேன்றும் புரியாமல் புறப்பட்டுச் சென்றேன் தென்றல் வந்த வழியாக.. நாங்க...