Posts

Showing posts with the label காசு

சுடச்சுட சுட்ட பாடல்...! (Money Money Money... Ummah..!)

Image
சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! பணத்திற்காய் இட்ட பாடல் படத்தினில் இல்லாத பாடல் கேட்காத ஊரும் இல்ல பாடாத வாயும் இல்ல...! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! பசிவந்தா பத்தும் பறக்கும் பணம்வந்தா பசியும் பறக்கும் கசிந்திடும் காதல் கூட காசு இல்லைன்னா காலியாகும் போலியான உறவுகூட வேலியாக மாறி நிற்கும்...!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! சாந்தம்கொண்ட சாமியாரும் காசுகண்டால் வாய்பிளக்கும் கல்லானா கடவுள்கூட காசுக்காக கல்லுடைக்கும் கற்புகள் கூட இங்கு காசுக்காய் விலை பறக்கும்...!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! காசுக்காய் கல்யாணம் பணத்திற்காய் படுக்கையறை பிணம்கூட பணமென்றால் நடந்திங்கு வந்திடுமே பிணந்தின்னும் கழுகுபோல மனித மனந்தின்னும் காசு இங்கே....!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! மகத்தான மனிதமனம் பணத்தாலே மிருககுணம் குணத்தாலே உய்த்த இனம் பணத்தாலே அழியுது தினம் பண்டமாற்று சாதனம் உலகை படைப்பதுதான் வேதனை...!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்....!! ! நண்பர்களே பாடல் பிடித்திருந்தா கருத்தும் வாக்கும் இலவசமா ப...

முதல் அனுபவம்..(18+)சும்மா பில்டப்பு...!

Image
முதல் அனுபவம் எனக்கு அந்த நேர்முகப்பரீட்சை தோல்வியுற்றதால் ஒரு சிறு கவலை காத்திருந்தேன் பஸ்ஸிற்காய் கனநேரமாய்...! ஒரு சோலை சேலையணிந்து சாலையோரமாய் வந்துகொண்டிருந்தது தவறுதலாய் ஒருமுறை பார்த்த கண்கள் மீண்டும் தவறுசெய்ய முனைந்தன..! அவள் அழகு அப்படி...! வேலைபோன வேதனையில் வாடியிருந்த கண்கள் அவள் அழகால் பூக்க ஆரம்பித்தது...! உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை ஒருவித இனந்தெரியா மயக்கம் என் உள்ளத்திலும் சிறு நிலநடுக்கம்...! அதுவரையில் காதல் பூகம்பம் கண்டிராத இதயச்சுவர் மெல்ல மெல்ல இடிய ஆரம்பித்தது...! கண்டவுடன் காதலா என் பழைய வினாவொன்றிற்கு விடையும் கிடைத்தது...! அந்தச்சோலையில் காதல்கனி பறிக்க தயாரானேன் தயங்கி நின்றபடியே...! அப்போது நான் இப்படி அரைகுறை கவிஞனல்ல கற்பூரம் அறியாக் கழுதை...! அருகில் வந்தால் அழாகாய் சிரித்தாள்...! செய்வதறியாது திகைத்துநின்றேன் கற்பனையில் இனிப்புச்சாப்பிட்டு காத்திருந்த பஸ்ஸும் எனை கடந்துபோனது தெரியாமல்..! எல்லா ஊர்க்கடவுளையும் ஒருமுறை வேண்டிவிட்டு உற்சாகமாய் சொல்லமுயன்றேன் உனை எனக்கு பிடித்திருக்...

மாலை நேரத்து மயக்கம்...!

Image
தண்ணீருக்குள் கல்லாய் இருந்த என் மனது கண்ணீரால் கரைந்து கிடக்கின்றது அன்பே உன் காதல் வேண்டி....!!! ஆனால், உன்மனமோ கல்லாய் இருக்கிறதே காசு வேண்டி....!!! என் மனதை ஏன் கரைத்தாய்...? காதல் விதை ஏன் விதைத்தாய்...? கண் முன்னே நீயிருந்தும் நீரிருந்தும் எல்லாம் கானல் நீராய் தோன்றுதடா.... காதல் காலநிலை போன்றதடா...??? "நட்பின் ஓட்டுக்களை கொடுங்க... என் அன்பின் ஓட்டுக்களை எடுங்க" அன்பின் நண்பன், நா.நிரோஷ்.

காத்திருப்பு...!!!

Image
காத்திருப்பு..!!! -------------- வயது வந்தும் வாய்ப்புகள் வரவில்லை.... வாய்ப்பு வந்தால் வசதிகள் இல்லை..... எழைஎனும் கூட்டிற்குள் காத்திருப்பு தொடர்கிறது கன்னிப் பறவைகளாய்.... "காசுக்காக கல்யாணம்" எனும் சமூகம் உள்ளவரை....!!! +++++++++++++++++++++++++++++++ பொழுது புலரா நேரம் பூமரம் இல்லா வீதியில் பூக்குடையுடன் நான்.... புன்னைகை அழகா உன் புன்சிரிப்பை பறிப்பதற்காய்..... காத்திருந்த நாட்கள் இன்றும் என் கண்முன்னே காட்சியாய் வந்து செல்கின்றன.... சாட்சியான உண்மை காதலோடு நான் காத்திருக்கும் வேளையிலே... !!! ++++++++++++++++++++++++++++++++ அன்புடன், நா.நிரோஷ். "உங்கள் ஓட்டுக்கள் அவசியம்... என் Blog வீட்டில் இன்னும் கவிதைகள் பூப்பதட்க்கு"